நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

46 பாயிரம் (இ-ள்) அழலினீங்கான் அணுகானஞ்சி - தீக் காய்வான் அவ்வழலி னிடத்துக் குளிருக்கஞ்சி நீங்காதவனும் வெம்மைக்கஞ்சி அணுகாத வனும் போல்வானாகி, நிழலிநீங்கான் - தன்னிழல் தன்னை விட்டு நீங் --காத தன்மையெனவும் ஆசிரியனை நீங்காதவனுமாய், நிறைந்த நெஞ்சமொடு - விகாரமற்ற நெஞ்சத்துடனே, எத்திறத்து ஆசான் உவக்கும் - எவ்வகை ஒழுக்கத் திறத்திலே ஆசான் மகிழ்ச்சிப் படும், அத்திறம் - அவ்வகை ஒழுக்கத் திறன், அறத்திற் றிரியாப் படர்ச்சி - அற நிலையின் மாறுபடாத செலவே, வழிபாடே... (46) பொதுப்பாயிரம் முற்றும் சிறப்புப் பாயிரம் 47. ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனொ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. சூ-ம், சிறப்புப் பாயிரத்துக்கு இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) ஆக்கியோன் பெயரே - நூல் செய்தோர் பெயரையும், வழியே - இந்நூல் வழித்தாகச் செய்தோமென்னும் வழியையும், எல்லை - இத் துணை இடத்து வழங்கும் வழக்கென எல்லையையும், நூற் பெயர் - இந்நூற்கு இது பெயரென நூற்பெயரையும், யாப்பே - இவ்வகைப் பாவினால் தொகை வகை விரியில் ஒன்றாகச் செய்தோ மென்னும் யாப்பையும், நுதலிய பொருளே - இந்நூல் இத்துணைப் பொருளை யெல்லாம் கருதிற்றென நுதலிய பொருளையும், கேட்போர் - இந்நூல் கேட்கின்றோர் இன்னாரெனக் கேட்போரையும், பயனொடு - இந்நூல் உணர்தலான் பெறும் பயன் இதுவென நூற்பயனையும், ஆயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் - அவ்வகை நூற்கு ஏற்கும் முறையே இவ்வெண் வகை இலக்கணமும் தோன்றச் செய்வது, பாயிரத் தியல்பே - சிறப்புப் பாயிரத்துக்கு இலக்கணமாம் என்றவாறு. (1) 48. காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநரு முளரே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) காலம் - இந்நூல் இன்ன காலத்தில் செய்ததெனக் காலத் தையும், களனே - இன்னார் அவைக்கண் செய்ததென இடத்தையும்,
46 பாயிரம் ( - ள் ) அழலினீங்கான் அணுகானஞ்சி - தீக் காய்வான் அவ்வழலி னிடத்துக் குளிருக்கஞ்சி நீங்காதவனும் வெம்மைக்கஞ்சி அணுகாத வனும் போல்வானாகி நிழலிநீங்கான் - தன்னிழல் தன்னை விட்டு நீங் --காத தன்மையெனவும் ஆசிரியனை நீங்காதவனுமாய் நிறைந்த நெஞ்சமொடு - விகாரமற்ற நெஞ்சத்துடனே எத்திறத்து ஆசான் உவக்கும் - எவ்வகை ஒழுக்கத் திறத்திலே ஆசான் மகிழ்ச்சிப் படும் அத்திறம் - அவ்வகை ஒழுக்கத் திறன் அறத்திற் றிரியாப் படர்ச்சி - அற நிலையின் மாறுபடாத செலவே வழிபாடே ... ( 46 ) பொதுப்பாயிரம் முற்றும் சிறப்புப் பாயிரம் 47 . ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனொ டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே . சூ - ம் சிறப்புப் பாயிரத்துக்கு இலக்கணம் கூறுகின்றது . ( - ள் ) ஆக்கியோன் பெயரே - நூல் செய்தோர் பெயரையும் வழியே - இந்நூல் வழித்தாகச் செய்தோமென்னும் வழியையும் எல்லை - இத் துணை இடத்து வழங்கும் வழக்கென எல்லையையும் நூற் பெயர் - இந்நூற்கு இது பெயரென நூற்பெயரையும் யாப்பே - இவ்வகைப் பாவினால் தொகை வகை விரியில் ஒன்றாகச் செய்தோ மென்னும் யாப்பையும் நுதலிய பொருளே - இந்நூல் இத்துணைப் பொருளை யெல்லாம் கருதிற்றென நுதலிய பொருளையும் கேட்போர் - இந்நூல் கேட்கின்றோர் இன்னாரெனக் கேட்போரையும் பயனொடு - இந்நூல் உணர்தலான் பெறும் பயன் இதுவென நூற்பயனையும் ஆயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் - அவ்வகை நூற்கு ஏற்கும் முறையே இவ்வெண் வகை இலக்கணமும் தோன்றச் செய்வது பாயிரத் தியல்பே - சிறப்புப் பாயிரத்துக்கு இலக்கணமாம் என்றவாறு . ( 1 ) 48 . காலங் களனே காரண மென்றிம் மூவகை யேற்றி மொழிநரு முளரே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) காலம் - இந்நூல் இன்ன காலத்தில் செய்ததெனக் காலத் தையும் களனே - இன்னார் அவைக்கண் செய்ததென இடத்தையும்