நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

32 பாயிரம் (இ-ள்) நூற்பொருள் வழக்கொடு - நூலாகிய செய்யுள் வழக் கொடும் உலகத்துப் பொருள் வழக்கொடும், வாய்ப்பக் காட்டி - பொருந்த எடுத்துக்காட்டி, ஏற்புழி அறிந்து - இவ்விடத்துக்கு இது பொருந்துமென ஏற்கும் இடமறிந்து, இதற்கு இவ்வகையாமென - இப்பொருட் கோட்பாட்டுக்கு இவ்வுத்தி யாமென, தரும் வகை செலுத்துதல் தந்திர உத்தி - தக்க வகையாகப் பொருந்துவது நூலுத் தியாம் என்றவாறு. (16) இயல் இலக்கணம் 17. நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தியலென மொழிப வுயர்மொழிப் புலவர் சூ-ம், இயல் உறுப்பாவது இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) நேரின மணியை - ஒத்த ஒரு வருக்கமாயுள்ள மணிகளை, நிரல்பட வைத்தாங்கு - நிரையாக வைத்துக் கோத்தாற்போல, ஓரி னப் பொருளை - ஓர் இனமாயுள்ள சொற் பொருளையும், ஒரு வழி வைப்பது - ஒரு நெறிப்பட முறையே வைத்துச் சொல்லுவதும், இய லென மொழிப - இயலுறுப்பு என்று கூறுவர், உயர்மொழிப் புலவர் - உயர்ச்சியுள்ள சொற்கூறெல்லாம் அறிந்த புலவர் என்றவாறு. (17) படல இலக்கணம் ஒருநெறி யன்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரி னதுபடல மாகும் சூ-ம், படல உறுப்பாவது இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) ஒரு நெறியன்றி - ஒத்த ஒரு நெறிப்பட்ட பொருளேயன்றி, விரவிய பொருளால் - அப்பொருட்கு உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகக் கூடிய பல பொருளினாலும், பொதுமொழி தொடரின் - தான் கூறிய பொருட் கும் பிற பொருட்கும் பொதுவாகி வழக்கினாலும் தொடர்ந்து வரு வது, அது படலமாகும் - இதுவே படல உறுப்பாம் என்றவாறு. (18) 18. சூத்திர இலக்கணம் 19. சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் செவ்வ னாடியிற் செறிந்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தள சூத்திரம் சூ-ம், சூத்திரத்திற்கு இலக்கணம் இதுவெனக் கூறுகின்றது.
32 பாயிரம் ( - ள் ) நூற்பொருள் வழக்கொடு - நூலாகிய செய்யுள் வழக் கொடும் உலகத்துப் பொருள் வழக்கொடும் வாய்ப்பக் காட்டி - பொருந்த எடுத்துக்காட்டி ஏற்புழி அறிந்து - இவ்விடத்துக்கு இது பொருந்துமென ஏற்கும் இடமறிந்து இதற்கு இவ்வகையாமென - இப்பொருட் கோட்பாட்டுக்கு இவ்வுத்தி யாமென தரும் வகை செலுத்துதல் தந்திர உத்தி - தக்க வகையாகப் பொருந்துவது நூலுத் தியாம் என்றவாறு . ( 16 ) இயல் இலக்கணம் 17 . நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தியலென மொழிப வுயர்மொழிப் புலவர் சூ - ம் இயல் உறுப்பாவது இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) நேரின மணியை - ஒத்த ஒரு வருக்கமாயுள்ள மணிகளை நிரல்பட வைத்தாங்கு - நிரையாக வைத்துக் கோத்தாற்போல ஓரி னப் பொருளை - ஓர் இனமாயுள்ள சொற் பொருளையும் ஒரு வழி வைப்பது - ஒரு நெறிப்பட முறையே வைத்துச் சொல்லுவதும் இய லென மொழிப - இயலுறுப்பு என்று கூறுவர் உயர்மொழிப் புலவர் - உயர்ச்சியுள்ள சொற்கூறெல்லாம் அறிந்த புலவர் என்றவாறு . ( 17 ) படல இலக்கணம் ஒருநெறி யன்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரி னதுபடல மாகும் சூ - ம் படல உறுப்பாவது இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) ஒரு நெறியன்றி - ஒத்த ஒரு நெறிப்பட்ட பொருளேயன்றி விரவிய பொருளால் - அப்பொருட்கு உயர்ந்ததும் தாழ்ந்ததும் ஆகக் கூடிய பல பொருளினாலும் பொதுமொழி தொடரின் - தான் கூறிய பொருட் கும் பிற பொருட்கும் பொதுவாகி வழக்கினாலும் தொடர்ந்து வரு வது அது படலமாகும் - இதுவே படல உறுப்பாம் என்றவாறு . ( 18 ) 18 . சூத்திர இலக்கணம் 19 . சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் செவ்வ னாடியிற் செறிந்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தள சூத்திரம் சூ - ம் சூத்திரத்திற்கு இலக்கணம் இதுவெனக் கூறுகின்றது .