நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 27 விருத்திப் பொருளாகவும், விகற்ப நடை பெறுமே - இத்துணை வேறு பாடாகி வரும் இயல்பினை உடையது நூலாம் என்றவாறு. (5) நூலின் வகை 6. முதல்வழி சார்பென நூன்மூன் றாகும். சூ-ம், பொதுப் பாயிரம் சிறப்புப் பாயிரம் மேலே கூறினமையாற் பின் முறையே மூன்று நூலால் இவையெனக் கூறுகின்றது. - (இ-ள்) முதல் வழி சார்பென - முதல் நூலென்றும் வழி நூலென்றும் சார்பு நூலென்றும், நூல் மூன்றாகும் - இம்மூன்று கூற்றதாம் நூல் என்றவாறு. (6) முதல் நூல் 7. அவற்றுள், வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். சூ-ம், முதல் நூல் இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் - மேற்கூறிய நூல் மூன்றினுள், வினையின் நீங்கி - அனாதியின் இயல்பாகவே பாசங்களை நீங்கி, விளங்கிய அறிவின் விளக்கமாகிய பேரறிவினையுடைய, முனைவன் கண்டது - எல்லா உலகிற்கும் முதல்வனாகிய கடவுளால் செய்யப்பட்டது, முதல் நூலா கும் - முதல் நூலாவது என்றவாறு. (7) 8. வழி நூல் முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும் சூ-ம், வழி நூலாவது இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) முன்னோர் - முதல் நூலுடையராகிய பழைய ஆசிரியருடைய, நூலின் முடிபு ஒருங்கு ஒத்து - நூலிற் கூறிய பொருள் முடிவு முழு வதும் ஒத்து, பின்னோன் - முதல் நூலுடையார்க்குப் பின்னோனாகிய வழி நூற்காரன், வேண்டும் விகற்பம் கூறி - தான் செய்யும் நூலின் வேண் டும் வினா விடை கூறி, அழியா மரபினது - முதல் நூல் மரபு அழி யாது வருவது, வழி நூலாகும் - வழி நூலாவது என்றவாறு. (8)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 27 விருத்திப் பொருளாகவும் விகற்ப நடை பெறுமே - இத்துணை வேறு பாடாகி வரும் இயல்பினை உடையது நூலாம் என்றவாறு . ( 5 ) நூலின் வகை 6 . முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் . சூ - ம் பொதுப் பாயிரம் சிறப்புப் பாயிரம் மேலே கூறினமையாற் பின் முறையே மூன்று நூலால் இவையெனக் கூறுகின்றது . - ( - ள் ) முதல் வழி சார்பென - முதல் நூலென்றும் வழி நூலென்றும் சார்பு நூலென்றும் நூல் மூன்றாகும் - இம்மூன்று கூற்றதாம் நூல் என்றவாறு . ( 6 ) முதல் நூல் 7 . அவற்றுள் வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும் . சூ - ம் முதல் நூல் இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) அவற்றுள் - மேற்கூறிய நூல் மூன்றினுள் வினையின் நீங்கி - அனாதியின் இயல்பாகவே பாசங்களை நீங்கி விளங்கிய அறிவின் விளக்கமாகிய பேரறிவினையுடைய முனைவன் கண்டது - எல்லா உலகிற்கும் முதல்வனாகிய கடவுளால் செய்யப்பட்டது முதல் நூலா கும் - முதல் நூலாவது என்றவாறு . ( 7 ) 8 . வழி நூல் முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூ லாகும் சூ - ம் வழி நூலாவது இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) முன்னோர் - முதல் நூலுடையராகிய பழைய ஆசிரியருடைய நூலின் முடிபு ஒருங்கு ஒத்து - நூலிற் கூறிய பொருள் முடிவு முழு வதும் ஒத்து பின்னோன் - முதல் நூலுடையார்க்குப் பின்னோனாகிய வழி நூற்காரன் வேண்டும் விகற்பம் கூறி - தான் செய்யும் நூலின் வேண் டும் வினா விடை கூறி அழியா மரபினது - முதல் நூல் மரபு அழி யாது வருவது வழி நூலாகும் - வழி நூலாவது என்றவாறு . ( 8 )