நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

266 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் சூ-ம், மேலதற்கோர் புறநடை கூறுகின்றது. (இ-ள்) ஒற்றுமை நயத்தின் - ஒன்றுபட்ட தன்மையால், ஒன்றெனத் தோன்றினும் - ஒன்றுபோலத் தோன்றுவன ஆயினும், வேற்றுமை நயத்தின் - வேற்றுமைப் பட்ட தன்மைகளால், வேறே யுடலுயிர் - உடம்பும் உயிரும் தம்முள் வேறேயாம் என்றவாறு. புல், மரம் முதலானவை அறிவுடலும் உயிரும் அவ்வாறாம் என்க. (10) உயிர்ப்பண்பு 451. அறிவரு ளாசை யச்ச மானம் நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல் நினைவு வெறுப்புவப் பிரக்க நாண் வெகுளி துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல் துன்ப மின்ப மிளமை மூப்பிகல் வென்றி பொச்சாப் பூக்க மறமதம் மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம். சூ-ம், உடலொடு கூடிய உயிர்ப்பொருட் பண்பு கூறுகின்றது. (இ-ள்) அறிவு - "அறிவுடையா ராவ தறிவார்” (குறள். 427), அருள் - "அருளில்லார்க் கவ்வுலக மில்லை” (குறள்.247), ஆசை - “ஆசை மாக்களோ டந்தணர்க் காகென்" (சீவக. 911), அச்சம் "கல்லாமை யச்சம் கயவர் தொழிலச்சம்" (நாலடி.145), மானம் - "மான முடையார் மனம்” (நாலடி.291), நிறை - “நிறையுடைமை நீங்காமை” (குறள்.154), பொறை - “பொறையுடைமை போற்றி யொழுகப்படும்” (குறள்.154), ஓர்ப்பு - “ஓர்த்துள்ள முள்ள துண ரின்" (குறள்.357), கடைப்பிடி - "அற்ற தறிந்து கடைப்பிடித்து " (குறள். 944), மையல் - “மையல் யானையின் மும்மத மார்ந்து" (சீவக. 37), நினைவு - “நினைத்துத்தன் கைகுறைத்தான்” (பழ மொழி. 102), வெறுப்பு - “வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப் பரே" (நாலடி. 222), உவப்பு - "பேணலு முவப்பின்மை” (சீவக. 2816), இரக்கம் - “இரக்கமிலுள்ளத் தவர்”, நாண் - “நாணாமை நாடாமை' (குறள். 833), வெகுளி - “வெல்வது, வேண்டில் வெகுளி விடல்" (நான்மணி.17), துணிவு - “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்” (குறள். 671), அழுக்காறு - “அழுக்கா றெனவொரு பாவி” (குறள். 168), அன்பு - “அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை" (குறள்.78), எளிமை - 11
266 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் சூ - ம் மேலதற்கோர் புறநடை கூறுகின்றது . ( - ள் ) ஒற்றுமை நயத்தின் - ஒன்றுபட்ட தன்மையால் ஒன்றெனத் தோன்றினும் - ஒன்றுபோலத் தோன்றுவன ஆயினும் வேற்றுமை நயத்தின் - வேற்றுமைப் பட்ட தன்மைகளால் வேறே யுடலுயிர் - உடம்பும் உயிரும் தம்முள் வேறேயாம் என்றவாறு . புல் மரம் முதலானவை அறிவுடலும் உயிரும் அவ்வாறாம் என்க . ( 10 ) உயிர்ப்பண்பு 451. அறிவரு ளாசை யச்ச மானம் நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல் நினைவு வெறுப்புவப் பிரக்க நாண் வெகுளி துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல் துன்ப மின்ப மிளமை மூப்பிகல் வென்றி பொச்சாப் பூக்க மறமதம் மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம் . சூ - ம் உடலொடு கூடிய உயிர்ப்பொருட் பண்பு கூறுகின்றது . ( - ள் ) அறிவு - அறிவுடையா ராவ தறிவார் ( குறள் . 427 ) அருள் - அருளில்லார்க் கவ்வுலக மில்லை ( குறள் .247 ) ஆசை - ஆசை மாக்களோ டந்தணர்க் காகென் ( சீவக . 911 ) அச்சம் கல்லாமை யச்சம் கயவர் தொழிலச்சம் ( நாலடி .145 ) மானம் - மான முடையார் மனம் ( நாலடி .291 ) நிறை - நிறையுடைமை நீங்காமை ( குறள் .154 ) பொறை - பொறையுடைமை போற்றி யொழுகப்படும் ( குறள் .154 ) ஓர்ப்பு - ஓர்த்துள்ள முள்ள துண ரின் ( குறள் .357 ) கடைப்பிடி - அற்ற தறிந்து கடைப்பிடித்து ( குறள் . 944 ) மையல் - மையல் யானையின் மும்மத மார்ந்து ( சீவக . 37 ) நினைவு - நினைத்துத்தன் கைகுறைத்தான் ( பழ மொழி . 102 ) வெறுப்பு - வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப் பரே ( நாலடி . 222 ) உவப்பு - பேணலு முவப்பின்மை ( சீவக . 2816 ) இரக்கம் - இரக்கமிலுள்ளத் தவர் நாண் - நாணாமை நாடாமை ' ( குறள் . 833 ) வெகுளி - வெல்வது வேண்டில் வெகுளி விடல் ( நான்மணி .17 ) துணிவு - சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் ( குறள் . 671 ) அழுக்காறு - அழுக்கா றெனவொரு பாவி ( குறள் . 168 ) அன்பு - அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை ( குறள் .78 ) எளிமை - 11