நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

258 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் உ-ம்: மாலை யென்மனார் மயங்கி யோரே (கலி 119) என அசைநிலைக்கண் வந்தது. “பண்டு கூரியதோர் வாண்மன்' என்பது வாய் போயிற்று என்றேனும் இந்நீர்த்து ஆயிற்று என்றேனும் சொல்லொழிய வருதலின் ஒழியிசைக்கண் வந்தது. “பண்டு காடுமன்” என்பது இப்பொழுது வயல் ஆயிற்று குளம் ஆயிற்று என ஆக்கப் பொருண்மைக்கள் வந்தது. சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறம். 235) என்பது இப்பொழுது கழிந்ததெனக் கழிவின்கண் வந்தது. மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி (சிலம்பு. கானல்.3) என்பது மிகுதிக்கண் வந்தது. பூமன்னு பொழில் வாழ்க மன்னே என்பது நிலைபேற்றின்கண் வந்தது. (13) மற்றென்னும் இடைச்சொல் 432. வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே. சூ-ம், மற்றென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) வினைமாற்று - வினைமாற்றுப் பொருண்மைக்கண்ணும், அசை நிலை - அசைநிலைப் பொருண்மைக்கண்ணும், பிறிது - பிறி தென்னும் பொருண்மைக்கண்ணும், எனு மற்றே - என்று சொல்லப்படும் இம் மூன்று பொருண்மைக்கண்ணும் மற்று என்னும் இடைச் சொல் வரும் என்றவாறு. உ-ம்: மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது (நாலடி.19) என்பது வினைமாற்று. மற்றடிகள் கண்டருளிச் செய்ய மலரடிக்கீழ் (சீவக.1873) என்பது அசைநிலை. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (குறள்.380) என்பது பிறிதின்மேல் வந்தது. (14)
258 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் - ம் : மாலை யென்மனார் மயங்கி யோரே ( கலி 119 ) என அசைநிலைக்கண் வந்தது . பண்டு கூரியதோர் வாண்மன் ' என்பது வாய் போயிற்று என்றேனும் இந்நீர்த்து ஆயிற்று என்றேனும் சொல்லொழிய வருதலின் ஒழியிசைக்கண் வந்தது . பண்டு காடுமன் என்பது இப்பொழுது வயல் ஆயிற்று குளம் ஆயிற்று என ஆக்கப் பொருண்மைக்கள் வந்தது . சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே ( புறம் . 235 ) என்பது இப்பொழுது கழிந்ததெனக் கழிவின்கண் வந்தது . மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி ( சிலம்பு . கானல் .3 ) என்பது மிகுதிக்கண் வந்தது . பூமன்னு பொழில் வாழ்க மன்னே என்பது நிலைபேற்றின்கண் வந்தது . ( 13 ) மற்றென்னும் இடைச்சொல் 432. வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே . சூ - ம் மற்றென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) வினைமாற்று - வினைமாற்றுப் பொருண்மைக்கண்ணும் அசை நிலை - அசைநிலைப் பொருண்மைக்கண்ணும் பிறிது - பிறி தென்னும் பொருண்மைக்கண்ணும் எனு மற்றே - என்று சொல்லப்படும் இம் மூன்று பொருண்மைக்கண்ணும் மற்று என்னும் இடைச் சொல் வரும் என்றவாறு . - ம் : மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது ( நாலடி .19 ) என்பது வினைமாற்று . மற்றடிகள் கண்டருளிச் செய்ய மலரடிக்கீழ் ( சீவக .1873 ) என்பது அசைநிலை . ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் ( குறள் .380 ) என்பது பிறிதின்மேல் வந்தது . ( 14 )