நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

254 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் என்பது பண்பு. இனி, என்று என்பதையும் இவ்வாறே வருவிக்க. இவை பெயரினிடத்தினும் வினையினிடத்தும் உவமை உருபாகி இடைச்சொல்லாகி வரும். காரென யார்க்கும் பொழிந்தான், புலி பாய்ந்தெனப் பாய்ந்தான் என வரும். (5) உம்மை இடைச்சொல் 424. எதிர்மறை சிறப்பைய மெச்சமுற் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே. சூ-ம், உம்மை இடைச்சொல்லினது இயல்பு கூறுகின்றது. (இ-ள்) எதிர்மறை - எதிர்மறைப் பொருண்மைக்கண்ணும், சிறப்பை யும் - சிறப்புப் பொருண்மைக்கண்ணும் ஐயப் பொருண்மைக் கண் ணும், எச்சமுற்று - எச்சப் பொருண்மைக்கண்ணும் முற்றுப் பொருண் மைக்கண்ணும், அளவை - பலவற்றை அடுக்கி எண்ணுதற் கண்ணும், தெரிநிலை - தெளிவுபடுத்த வரும் தெரிநிலைப் பொருண்மைக் கண் ணும், ஆக்கமோடு - ஆக்கப் பொருண்மைக்கண்ணொடும், உம்மை யெட்டே - இவ்வெட்டுப் பொருண்மைக்கண்ணும் வரும் உம் என்னும் இடைச்சொல் என்றவாறு. உ-ம்: கொற்றன் வருதற்கும் உரியன் என்பது எதிர்மறை; வாரான் என்பதற்கும் உரித்தாகலின், “குறவரு மருளுங் குன்றம்” (மலைபடு.125) என்பது சிறப்பு; யாவரும் செல்லக்கூடாது என்பது பட நிற்றலின். பத்தேனும் எட்டே னும் கொடு என்பது ஐயம்; ஒன்று துணியாமையின். சாத்தனும் வந்தான் என்பது எச்சம்; அவனேயன்றி பிறனையும் வரவு விளக்க லின். தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் என்பது முற்று ; மூவரன்றி வேறில்லையெனக் காட்டலின். ஒன்றும் இரண்டும், பொன்னும் மணியும் என்பது எண்ணின் அளவை; பலமும் கஃசும் என்பது நிறை அளவை; உழக்கும் ஆழாக்கும் என்பது முகத்தல் அளவை ; ஒரு கோலும் அரைக்கோலும் என்பது நீட்டல் அளவை. நன்றுமன்று தீது மன்று என்பது தெரிநிலை; இடை நிகர்த்தது என்பது தெரித்தமை யின். நெடியனும் வலியனும் என்பது ஆக்கம். (6) முற்றும்மையின் இயல்பு 425. முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும்.
254 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் என்பது பண்பு . இனி என்று என்பதையும் இவ்வாறே வருவிக்க . இவை பெயரினிடத்தினும் வினையினிடத்தும் உவமை உருபாகி இடைச்சொல்லாகி வரும் . காரென யார்க்கும் பொழிந்தான் புலி பாய்ந்தெனப் பாய்ந்தான் என வரும் . ( 5 ) உம்மை இடைச்சொல் 424. எதிர்மறை சிறப்பைய மெச்சமுற் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே . சூ - ம் உம்மை இடைச்சொல்லினது இயல்பு கூறுகின்றது . ( - ள் ) எதிர்மறை - எதிர்மறைப் பொருண்மைக்கண்ணும் சிறப்பை யும் - சிறப்புப் பொருண்மைக்கண்ணும் ஐயப் பொருண்மைக் கண் ணும் எச்சமுற்று - எச்சப் பொருண்மைக்கண்ணும் முற்றுப் பொருண் மைக்கண்ணும் அளவை - பலவற்றை அடுக்கி எண்ணுதற் கண்ணும் தெரிநிலை - தெளிவுபடுத்த வரும் தெரிநிலைப் பொருண்மைக் கண் ணும் ஆக்கமோடு - ஆக்கப் பொருண்மைக்கண்ணொடும் உம்மை யெட்டே - இவ்வெட்டுப் பொருண்மைக்கண்ணும் வரும் உம் என்னும் இடைச்சொல் என்றவாறு . - ம் : கொற்றன் வருதற்கும் உரியன் என்பது எதிர்மறை ; வாரான் என்பதற்கும் உரித்தாகலின் குறவரு மருளுங் குன்றம் ( மலைபடு .125 ) என்பது சிறப்பு ; யாவரும் செல்லக்கூடாது என்பது பட நிற்றலின் . பத்தேனும் எட்டே னும் கொடு என்பது ஐயம் ; ஒன்று துணியாமையின் . சாத்தனும் வந்தான் என்பது எச்சம் ; அவனேயன்றி பிறனையும் வரவு விளக்க லின் . தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் என்பது முற்று ; மூவரன்றி வேறில்லையெனக் காட்டலின் . ஒன்றும் இரண்டும் பொன்னும் மணியும் என்பது எண்ணின் அளவை ; பலமும் கஃசும் என்பது நிறை அளவை ; உழக்கும் ஆழாக்கும் என்பது முகத்தல் அளவை ; ஒரு கோலும் அரைக்கோலும் என்பது நீட்டல் அளவை . நன்றுமன்று தீது மன்று என்பது தெரிநிலை ; இடை நிகர்த்தது என்பது தெரித்தமை யின் . நெடியனும் வலியனும் என்பது ஆக்கம் . ( 6 ) முற்றும்மையின் இயல்பு 425. முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும் .