நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 253 சிறப்பு - ஒன்றைச் சிறப்பிக்க வந்து சிறப்பு ஓகாரமாகியும், எதிர்மறை - எதிர்மறுத்தற்கண் வந்து எதிர்மறை ஓகாரமாகியும், கழிவு - ஒரு பொருளைக் கழிக்க வந்து கழிவு ஓகாரமாகியும், அசைநிலை - அசைகளை அசைத்தற்கண் வந்து அசைநிலை ஓகாரமாகியும், பிரிப்பு - ஒரு குழுவின் ஒன்றைப் பிரித்தற்கண் வந்து பிரிநிலை ஓகார மாகியும், எனவெட் டோவே - என்று கூறப்படும் இவ்வெட்டுப் பொரு ளையும் தரும் ஓகார இடைச்சொல் என்றவாறு. (உ-ம்): கொளலோ கொண்டான் என்பது கோடற்குத் தகுமா மினும் கொண்டுய்யப் போயினானல்லன் என ஒரு சொல் ஒழிவு பட வந்தமையால் இது ஒழியிசை. நன்மைக்கோ வந்தான் என்பதுவும் அது. அவனோ அல்லனோ என்பது வினா. ஓஒ பெரியன் என்பது சிறப்பு. யானோ கொண்டேன் என்பது எதிர் மறை. நன்றோ அன்று தீதோ அன்று என்பது தெரிநிலை இடை நிகர்த்தலென்பது தெரித்தமையின். நைதலின்றி நல்ல றஞ் செய்கின்றாலோ உயிருய்யும் என்பது கழிவு. “காணிய வம்மினோ மாலையது நிலையே” என்பது அசை. அவனோ செய்தான் பிரிநிலை. (4) என என்று என்னும் இடைச்சொற்கள் 423. வினைபெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும் எனவெனு மொழிவரு மென்று மற்றே. சூ-ம், எனவெனவும் என்றெனவும் வரும் இடைச்சொற்களது இயல்பு கூறுகின்றது. (இ-ள்) வினைபெயர் - வினைப் பொருண்மைக்கண்ணும் பெயர்ப் பொருண்மைக்கண்ணும், குறிப்பிசை - குறிப்புப் பொருண்மைக் கண் ணும் இசைப் பொருண்மைக்கண்ணும், எண் - பலவற்றை அடுக்கி எண்ணுதற்கண்ணும், பண்பாறினும் - பண்புப் பொருண்மைக் கண்ணும் இவ்வாறு பொருண்மைக்கண்ணும், எனவெனு மொழிவரும் - என வென் னும் இடைச்சொல் வரும்; என்று மற்றே - என்றென்னும் இடைச் சொல் லும் அவ்வாறு பொருளினும் வரும் என்றவாறு. உ-ம்: கொள்ளெனக் கொண்டான் என்பதுவினை. ஊர் எனப்படுவது உறையூர் என்பது பெயர். விண்ணென விசைத்தது என்பது குறிப்பு. ஒல்லென வொலித்தது என்பது இசை. "கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென, உடலென உருமென ஊழித் தீயென” (சீவக.973) என்பது எண். வெள்ளென விளர்த்தது
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 253 சிறப்பு - ஒன்றைச் சிறப்பிக்க வந்து சிறப்பு ஓகாரமாகியும் எதிர்மறை - எதிர்மறுத்தற்கண் வந்து எதிர்மறை ஓகாரமாகியும் கழிவு - ஒரு பொருளைக் கழிக்க வந்து கழிவு ஓகாரமாகியும் அசைநிலை - அசைகளை அசைத்தற்கண் வந்து அசைநிலை ஓகாரமாகியும் பிரிப்பு - ஒரு குழுவின் ஒன்றைப் பிரித்தற்கண் வந்து பிரிநிலை ஓகார மாகியும் எனவெட் டோவே - என்று கூறப்படும் இவ்வெட்டுப் பொரு ளையும் தரும் ஓகார இடைச்சொல் என்றவாறு . ( - ம் ) : கொளலோ கொண்டான் என்பது கோடற்குத் தகுமா மினும் கொண்டுய்யப் போயினானல்லன் என ஒரு சொல் ஒழிவு பட வந்தமையால் இது ஒழியிசை . நன்மைக்கோ வந்தான் என்பதுவும் அது . அவனோ அல்லனோ என்பது வினா . ஓஒ பெரியன் என்பது சிறப்பு . யானோ கொண்டேன் என்பது எதிர் மறை . நன்றோ அன்று தீதோ அன்று என்பது தெரிநிலை இடை நிகர்த்தலென்பது தெரித்தமையின் . நைதலின்றி நல்ல றஞ் செய்கின்றாலோ உயிருய்யும் என்பது கழிவு . காணிய வம்மினோ மாலையது நிலையே என்பது அசை . அவனோ செய்தான் பிரிநிலை . ( 4 ) என என்று என்னும் இடைச்சொற்கள் 423. வினைபெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும் எனவெனு மொழிவரு மென்று மற்றே . சூ - ம் எனவெனவும் என்றெனவும் வரும் இடைச்சொற்களது இயல்பு கூறுகின்றது . ( - ள் ) வினைபெயர் - வினைப் பொருண்மைக்கண்ணும் பெயர்ப் பொருண்மைக்கண்ணும் குறிப்பிசை - குறிப்புப் பொருண்மைக் கண் ணும் இசைப் பொருண்மைக்கண்ணும் எண் - பலவற்றை அடுக்கி எண்ணுதற்கண்ணும் பண்பாறினும் - பண்புப் பொருண்மைக் கண்ணும் இவ்வாறு பொருண்மைக்கண்ணும் எனவெனு மொழிவரும் - என வென் னும் இடைச்சொல் வரும் ; என்று மற்றே - என்றென்னும் இடைச் சொல் லும் அவ்வாறு பொருளினும் வரும் என்றவாறு . - ம் : கொள்ளெனக் கொண்டான் என்பதுவினை . ஊர் எனப்படுவது உறையூர் என்பது பெயர் . விண்ணென விசைத்தது என்பது குறிப்பு . ஒல்லென வொலித்தது என்பது இசை . கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென உடலென உருமென ஊழித் தீயென ( சீவக .973 ) என்பது எண் . வெள்ளென விளர்த்தது