நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

252 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் ஏகார இடைச்சொல் 421. பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம் இசைநிறை யெனவா றேகா ரம்மே. சூ-ம், வேற்றுமையுருபு முதலான நாலும் மேலே சொல்லப்பட்டன; தத்தம் பொருட்டு வருவனவும் இசை நிறைப்பனவும் அசைநிலையும் குறிப்புமாவன உணர்த்தத் தொடங்கினார்; இது ஏகார இடைச்சொல் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) பிரிநிலை வினா - ஒரு குழுவின் ஒன்றைப் பிரித்தற்கண்ணும் வினாதற்கண்ணும், அவனே கொண்டான் என்பது பிரிநிலை ஏகாரம். நீயே கொண்டாய் என்பது வினா ஏகாரம். எண் - பலவற்றை அடுக்கி எண்ணுதற்கண்ணும், நிலனே நீரே தீயே வளியே என்பது எண்ணேகாரம். ஈற்றசை - ஈற்றிலே பொருள் வேண்டா இடத்தும், கடல்போல் றோன்றல காடிறந் தோரே (அகம்.1) என்பது ஈற்றசை ஏகாரம். தேற்றம் - ஒரு பொருளைத் துணியுமிடத்தும், பொருள் கொள்வார் மேற்றே புகழ் என்பது தேற்றேகாரம். இசைநிறை - ஓசை நிறைக்க வேண்டுமிடத்தும், ஏஏ யிவளொருத்தி பேடியோ வென்றார் (சீவக.652) என்பது இசைநிறை ஏகாரம். எனவா - றேகா ரம்மே - அவ்வப் பெயரால் ஆறு கூற்றதாம் ஏகா ரம் என்றவாறு. (3) ஓகார இடைச்சொல் 422. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே. சூ-ம், ஓகார இடைச்சொல்லினது இயல்பு கூறுகின்றது. (இ-ள்) ஒழியிசை - ஒரு சொல் ஒழிவு பட வந்து ஒழியிசை ஓகார மாகியும், வினா - ஒன்றை வினாதற்கண் வந்து வினா ஓகாரமாகியும்,
252 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் ஏகார இடைச்சொல் 421. பிரிநிலை வினாவெண் ணீற்றசை தேற்றம் இசைநிறை யெனவா றேகா ரம்மே . சூ - ம் வேற்றுமையுருபு முதலான நாலும் மேலே சொல்லப்பட்டன ; தத்தம் பொருட்டு வருவனவும் இசை நிறைப்பனவும் அசைநிலையும் குறிப்புமாவன உணர்த்தத் தொடங்கினார் ; இது ஏகார இடைச்சொல் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) பிரிநிலை வினா - ஒரு குழுவின் ஒன்றைப் பிரித்தற்கண்ணும் வினாதற்கண்ணும் அவனே கொண்டான் என்பது பிரிநிலை ஏகாரம் . நீயே கொண்டாய் என்பது வினா ஏகாரம் . எண் - பலவற்றை அடுக்கி எண்ணுதற்கண்ணும் நிலனே நீரே தீயே வளியே என்பது எண்ணேகாரம் . ஈற்றசை - ஈற்றிலே பொருள் வேண்டா இடத்தும் கடல்போல் றோன்றல காடிறந் தோரே ( அகம் .1 ) என்பது ஈற்றசை ஏகாரம் . தேற்றம் - ஒரு பொருளைத் துணியுமிடத்தும் பொருள் கொள்வார் மேற்றே புகழ் என்பது தேற்றேகாரம் . இசைநிறை - ஓசை நிறைக்க வேண்டுமிடத்தும் ஏஏ யிவளொருத்தி பேடியோ வென்றார் ( சீவக .652 ) என்பது இசைநிறை ஏகாரம் . எனவா - றேகா ரம்மே - அவ்வப் பெயரால் ஆறு கூற்றதாம் ஏகா ரம் என்றவாறு . ( 3 ) ஓகார இடைச்சொல் 422. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே . சூ - ம் ஓகார இடைச்சொல்லினது இயல்பு கூறுகின்றது . ( - ள் ) ஒழியிசை - ஒரு சொல் ஒழிவு பட வந்து ஒழியிசை ஓகார மாகியும் வினா - ஒன்றை வினாதற்கண் வந்து வினா ஓகாரமாகியும்