நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

240 சொல்லதிகாரம் - பொதுவியல் செம்பவள மேய்ப்பத் திழ்ந்திலங்கு சீறடியின் வம்பழகு நோக்கி வழிபடுவ தேசாலும் (சூளா. கல்யாணச்.293), மதிநுதன் மாதர் மதலைபின் சென்றாள் கயற்கண் ணாளையுங் காமனன் னானையும் (சீவக. 1346) என இவை திணை மயங்காது முதலும் சினையும் மயங்கின உவமை. மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும் (சீவக. 2780) எனவும் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே (சீவக.53) என இவை திணை மயங்கி வந்த உவமை. இவை பட்டாங்கு உரைத்தலின் உவப்பினுள் அடங்காவெனக் கொள்க. (59) பொருள்கோள் 410. யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் தாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டு கூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே. சூ-ம், பொருள்கோட் பகுதி கூறுகின்றது. (இ-ள்) யாற்றுநீர் - ஆற்றுபுனற் பொருள்கோளும், மொழி மாற்று - மொழிமாற்றுப் பொருள்கோளும், நிரனிறை - நிரனிறைப் பொருள் கோளும், விற்பூண் - விற்பூட்டுப் பொருள்கோளும், தாப்பிசை - தாப் பிசைப் பொருள்கோளும், அளைமறி பாப்பு - அறைமறிபாப்புப் பொருள்கோளும், கொண்டு கூட்டு - கொண்டு கூட்டுப் பொருள் கோளும், அடிமறி மாற்று - அடிமறி மாற்றுப் பொருள்கோளும், எனப் பொருள்கோ ளெட்டே - எனப் பொருள் கொள்ளுமுறைமை எட்டாம் என்றவாறு. (60) யாற்றுநீர்ப் பொருள்கோள் 411. மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொறும் அற்றற் றொழுகமஃ தியாற்றுப் புனலே.
240 சொல்லதிகாரம் - பொதுவியல் செம்பவள மேய்ப்பத் திழ்ந்திலங்கு சீறடியின் வம்பழகு நோக்கி வழிபடுவ தேசாலும் ( சூளா . கல்யாணச் .293 ) மதிநுதன் மாதர் மதலைபின் சென்றாள் கயற்கண் ணாளையுங் காமனன் னானையும் ( சீவக . 1346 ) என இவை திணை மயங்காது முதலும் சினையும் மயங்கின உவமை . மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும் ( சீவக . 2780 ) எனவும் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே ( சீவக .53 ) என இவை திணை மயங்கி வந்த உவமை . இவை பட்டாங்கு உரைத்தலின் உவப்பினுள் அடங்காவெனக் கொள்க . ( 59 ) பொருள்கோள் 410. யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் தாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டு கூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே . சூ - ம் பொருள்கோட் பகுதி கூறுகின்றது . ( - ள் ) யாற்றுநீர் - ஆற்றுபுனற் பொருள்கோளும் மொழி மாற்று - மொழிமாற்றுப் பொருள்கோளும் நிரனிறை - நிரனிறைப் பொருள் கோளும் விற்பூண் - விற்பூட்டுப் பொருள்கோளும் தாப்பிசை - தாப் பிசைப் பொருள்கோளும் அளைமறி பாப்பு - அறைமறிபாப்புப் பொருள்கோளும் கொண்டு கூட்டு - கொண்டு கூட்டுப் பொருள் கோளும் அடிமறி மாற்று - அடிமறி மாற்றுப் பொருள்கோளும் எனப் பொருள்கோ ளெட்டே - எனப் பொருள் கொள்ளுமுறைமை எட்டாம் என்றவாறு . ( 60 ) யாற்றுநீர்ப் பொருள்கோள் 411. மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொறும் அற்றற் றொழுகமஃ தியாற்றுப் புனலே .