நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

238) சொல்லதிகாரம் - பொதுவியல் 408. கேட்குந போலவுங் கிளக்குந போலவும் இயங்குந போலவு மியற்றுந போலவும் அஃறிணை மருங்கினு மறையப் பெறுமே. சூ-ம், தொழில் இல்லாத அஃறிணைப் பொருட்கண்ணும் வினா விடை நிகழ்ந்ததுபோல் கூறலாமென்று கூறுகின்றது. (இ-ள்) கேட்குந போலரவம் - ஒருவர் சொல்லிய சொற்களைக் கேட் பன போலவும், கிளக்குந போலவும் - தாம் வேண்டிய சொற்களைச் சொல்லுவன போலவும், இயங்குந போலவும் - தாம் தாமே நடக்கின் றன போலவும், இயற்றுந போலவும் - தாம் தாமே செய்தன போல வும், அஃறிணை மருங்கினும் - இந்நால் வகைத் தொழிலும் இல் லாத அஃறிணையிடத்து, அறையப் பெறுமே - உள்ளதாகச் சொல் லப் பெறும் என்றவாறு. உ-ம்: “நன்னீரை வாழி யனிச்சம்” (குறள்.1111), "கரவல மென் றோரைக் கண்ட திலையோ, இரவெலா நின்றாயா லீர்ங் கதிர்த் திங்களாய்” (“அரவளை மென்றோள்” என்று தொடங் கும் பாடல்) எனவும் “மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்க லும், உடைமையைத் திங்கள் செப்புமால்” (சீவக. 2932) எனவும் இவ்வழி அவ்வூர்க்குப் போம், இம்மலை இவ்வழி வந்து கிடக்கும், நிலம் இத்துணை அகன்று கிடக்கும் எனவும் “தன்னெஞ்சே தன்னைச் சுடும்” (குறள்.293), “மடிமை குடி மைக்கட் டங்கிற்றன் னென்னார்க் கடிமை புகுத்தி விடும்” (குறள். 608) எனவும் வரும். (58) வழுவமைப்பும் புறநடையும் 409. உருவக முவமையிற் றிணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே. சூ-ம், மரபு வழுவமைப்பும் இவ்வியலுக்குப் புறநடையும் கூறு கின்றது. (இ-ள்) உருவக முவமையில் - உருவக அலங்காரமும் உவமை அலங்காரமும் என்னும் இவ்விரு அலங்காரங்கட்கு ஏற்புழி, திணை - இரு திணையும் தம்முள் மயங்கலும், சினை முதல்கள் - சினையும் முதலும் தம்முள் மயங்கலும், பிறழ்தலும் மயங்கலும் என்றது பொருள், இச்சொல்லை முன்னிரண்டினோடும் கூட்டுக; பிறவும் - இவ்வோத்தினுள் சொல்லாது ஒழிந்தனவும், பேணினர் கொளலே - போற்றி அறிந்து கொள்க.
238 ) சொல்லதிகாரம் - பொதுவியல் 408. கேட்குந போலவுங் கிளக்குந போலவும் இயங்குந போலவு மியற்றுந போலவும் அஃறிணை மருங்கினு மறையப் பெறுமே . சூ - ம் தொழில் இல்லாத அஃறிணைப் பொருட்கண்ணும் வினா விடை நிகழ்ந்ததுபோல் கூறலாமென்று கூறுகின்றது . ( - ள் ) கேட்குந போலரவம் - ஒருவர் சொல்லிய சொற்களைக் கேட் பன போலவும் கிளக்குந போலவும் - தாம் வேண்டிய சொற்களைச் சொல்லுவன போலவும் இயங்குந போலவும் - தாம் தாமே நடக்கின் றன போலவும் இயற்றுந போலவும் - தாம் தாமே செய்தன போல வும் அஃறிணை மருங்கினும் - இந்நால் வகைத் தொழிலும் இல் லாத அஃறிணையிடத்து அறையப் பெறுமே - உள்ளதாகச் சொல் லப் பெறும் என்றவாறு . - ம் : நன்னீரை வாழி யனிச்சம் ( குறள் .1111 ) கரவல மென் றோரைக் கண்ட திலையோ இரவெலா நின்றாயா லீர்ங் கதிர்த் திங்களாய் ( அரவளை மென்றோள் என்று தொடங் கும் பாடல் ) எனவும் மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்க லும் உடைமையைத் திங்கள் செப்புமால் ( சீவக . 2932 ) எனவும் இவ்வழி அவ்வூர்க்குப் போம் இம்மலை இவ்வழி வந்து கிடக்கும் நிலம் இத்துணை அகன்று கிடக்கும் எனவும் தன்னெஞ்சே தன்னைச் சுடும் ( குறள் .293 ) மடிமை குடி மைக்கட் டங்கிற்றன் னென்னார்க் கடிமை புகுத்தி விடும் ( குறள் . 608 ) எனவும் வரும் . ( 58 ) வழுவமைப்பும் புறநடையும் 409. உருவக முவமையிற் றிணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே . சூ - ம் மரபு வழுவமைப்பும் இவ்வியலுக்குப் புறநடையும் கூறு கின்றது . ( - ள் ) உருவக முவமையில் - உருவக அலங்காரமும் உவமை அலங்காரமும் என்னும் இவ்விரு அலங்காரங்கட்கு ஏற்புழி திணை - இரு திணையும் தம்முள் மயங்கலும் சினை முதல்கள் - சினையும் முதலும் தம்முள் மயங்கலும் பிறழ்தலும் மயங்கலும் என்றது பொருள் இச்சொல்லை முன்னிரண்டினோடும் கூட்டுக ; பிறவும் - இவ்வோத்தினுள் சொல்லாது ஒழிந்தனவும் பேணினர் கொளலே - போற்றி அறிந்து கொள்க .