நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

200 சொல்லதிகாரம் - வினையியல் புறநடை 350. வினைமுற் றேவினை யெச்ச மாகலும் குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே. சூ-ம், தெரிநிலை வினைமுற்றுக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கட்கு எய்தாதோர் இயல்பு கூறியது. (இ-ள்) வினைமுற்றே வினையெச்ச மாகலும் - தெரிநிலை வினை முற்றுச் சொல் வினையெச்சமாகி வருதலும், குறிப்பு முற்று ஈரெச்ச மாகலு முளவே - குறிப்பு வினைமுற்றுச் சொல்லாயது வினையெச்ச மாகியும் பெயரெச்சமாகியும் வருதலுமுள என்றவாறு. உ-ம்: “காணான் கழிதலு முண்டென் றொருநாள்” (கலி.37), “மோயின ளுயிர்த்த காலை” (அகம்.5), மொய்த்து “முகந்தனர் கொடுப்ப” (புறம்.33), “விளிப்பது பயிலுங் குறும்பர் துந் துமியொடு”, “எருவைநுண் டாது குடைவன வாடி” (குறு.46) என வரும். “பெயர்த்தனன் முயங்கியான்” (குறு.84), “மக்களு ளிர்ட்டையாய் மாறினம் பிறந்துயாம்” என வரும். “சேர்ந்தனை சென்மோ பைந்தார் மார்ப்” (“எம்மூ ரல்லது” எனத் தொடங்கும் ' பாடல்), “கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின்” (பெரும் பாண்.392) என மூவிடத்து ஐம்பாலினும் வந்த தெரிநிலை வினைமுற்று வினையெச்சமாயின. “வரிபுனை வில்ல னிருகனை தெரிந்துகொண்டு” (அகம்.48), “அளிநிலை பெறாஅ தமரிய முகத்தள், விளிநிலை கேளாள்” (அகம். 5), “உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து” (திருமுருகு.185), “விழுமிது கழிவ தாயினும்” (குற.253), “நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்து” (புறம்.44) என வரும். “துணைமி னெஞ்சினேன் றுயருழந் தினையேன்”, “நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சி” (113) என வரும். “நீர்வார் கண்ணை நீயிவணொழிய” (குறு.22), “வெள்வேல் வலத்தினிர் பொருடரல் வேட்கையி, னுள்ளிர்” (கலி.4), “பெருவரை மிசையது” (குறு.74) என வினைக்குறிப்புமுற்றுத் தன்வினை வினையெச்சக் குறிப்பாயினவாறு காண்க. "வெந்துப்பினன் விறல்வழுதி”, “அஞ்சாயல ளாயிழை”, “கடற் றானை யார்த்தார் வேந்தர்”, “பெருவரை மிசையது நெடுவெள் ளருவி” (குறு.74), “புன்றா ளோமைய சுரனிறந் தோரே” (குறு. 260), “பெருவேட்கையே னென்னிற் பிரிந்து”, “கண்புரை காதலே மெம்மு முள்ளோர்”, “உலங்கொ டோளினை நின்னால் வந்தேன்",
200 சொல்லதிகாரம் - வினையியல் புறநடை 350. வினைமுற் றேவினை யெச்ச மாகலும் குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே . சூ - ம் தெரிநிலை வினைமுற்றுக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கட்கு எய்தாதோர் இயல்பு கூறியது . ( - ள் ) வினைமுற்றே வினையெச்ச மாகலும் - தெரிநிலை வினை முற்றுச் சொல் வினையெச்சமாகி வருதலும் குறிப்பு முற்று ஈரெச்ச மாகலு முளவே - குறிப்பு வினைமுற்றுச் சொல்லாயது வினையெச்ச மாகியும் பெயரெச்சமாகியும் வருதலுமுள என்றவாறு . - ம் : காணான் கழிதலு முண்டென் றொருநாள் ( கலி .37 ) மோயின ளுயிர்த்த காலை ( அகம் .5 ) மொய்த்து முகந்தனர் கொடுப்ப ( புறம் .33 ) விளிப்பது பயிலுங் குறும்பர் துந் துமியொடு எருவைநுண் டாது குடைவன வாடி ( குறு .46 ) என வரும் . பெயர்த்தனன் முயங்கியான் ( குறு .84 ) மக்களு ளிர்ட்டையாய் மாறினம் பிறந்துயாம் என வரும் . சேர்ந்தனை சென்மோ பைந்தார் மார்ப் ( எம்மூ ரல்லது எனத் தொடங்கும் ' பாடல் ) கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின் ( பெரும் பாண் .392 ) என மூவிடத்து ஐம்பாலினும் வந்த தெரிநிலை வினைமுற்று வினையெச்சமாயின . வரிபுனை வில்ல னிருகனை தெரிந்துகொண்டு ( அகம் .48 ) அளிநிலை பெறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கேளாள் ( அகம் . 5 ) உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ( திருமுருகு .185 ) விழுமிது கழிவ தாயினும் ( குற .253 ) நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்து ( புறம் .44 ) என வரும் . துணைமி னெஞ்சினேன் றுயருழந் தினையேன் நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சி ( 113 ) என வரும் . நீர்வார் கண்ணை நீயிவணொழிய ( குறு .22 ) வெள்வேல் வலத்தினிர் பொருடரல் வேட்கையி னுள்ளிர் ( கலி .4 ) பெருவரை மிசையது ( குறு .74 ) என வினைக்குறிப்புமுற்றுத் தன்வினை வினையெச்சக் குறிப்பாயினவாறு காண்க . வெந்துப்பினன் விறல்வழுதி அஞ்சாயல ளாயிழை கடற் றானை யார்த்தார் வேந்தர் பெருவரை மிசையது நெடுவெள் ளருவி ( குறு .74 ) புன்றா ளோமைய சுரனிறந் தோரே ( குறு . 260 ) பெருவேட்கையே னென்னிற் பிரிந்து கண்புரை காதலே மெம்மு முள்ளோர் உலங்கொ டோளினை நின்னால் வந்தேன்