நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 193 களம், பொராநின்ற களம், பொரும் களம், செய்த செயல், செய் கின்ற செயல், செய்யும் செயல், வாழ்ந்த நாள், வாழாநின்ற நாள், வாழும் நாள், வனைந்த குடம், வனைகின்ற குடம், வனை யும் குடம் என வரும். இவ்வாறே ஒழிந்த பால் இடங்களினும் ஒட்டித் தெரிநிலை வினைப் பெயரெச்சம் வந்தவாறு காண்க. கரிய கொற்றன், சிறிய காலம், சிறிய கால், நல்ல குணம், நல்ல செயல் என வரும். ஒழிந்த் பால் இடங்களினும் ஒட்டிக் குறிப்புவினைப் பெயரெச் சம் வந்தவாறு காண்க. ஓடாக் குதிரை, பாடாப் பாணன், கேளா நூல், காணாத நூல் என எதிர்மறைத் தெரிநிலைவினைப் பெயரெச்சம்; இவற்றிற்கு வாய்பாடு ஓடாமலைச் செய்த, பாடாமலைச் செய்த என்று கொள்க. ஓடுதலைச் செய்யாத, பாடுதலைச் செய்யாத என்றுமாம். அல்லாத குதிரை, பொல்லாத பாணன் எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சம். (21) 340. செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலும் செய்யுளு ளும்முந் தாகலு முற்றேல் உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே. சூ-ம், எதிர்காலத் தெரிநிலைப் பெயரெச்சத்துக்கும் தெரிநிலை வினைமுற்றுக்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலும் - செய்யும் என்னும் பெயரெச்ச வாய்பாட்டுச் சொற்களுட் சில மொழியீற்று உயிர்மெய் கெடுதலும், செய்யுளுளும்முந்தாகலும் - செய்யுட்கண் சில உம் உந் தென்று தோன்றுதலும், முற்றேல் - செய்யுமென்னும் வாய்பாட்டுச் சொல் தெரிநிலை வினைமுற்றாயின், உமிரு முயிர் மெய்யு மேகலும் - சில ஈற்றுயிர் கெடுதலும் சில ஈற்றுயிர் மெய் கெடுதலும், உளவே - உளவாம் என்றவாறு. உ-ம்: “ஆம்பொருள்கள்” (சீவக.848), போம் பொருள்கள், “வாம்புரவி வழுதி”. இவை எதிர்காலப் பெயரெச்சம்; உயிர் மெய் கெட்டன. “கடற்றிரை மிசைப்பாயுந்து” (புறம்.24), "நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து" (புறம்.395), "ஆதித்தன் மேற்கே பாயுந்து”. இவை உம் உந்தென்றாயின. “அம்பலூரு மவனொடு மொழிமே” (குறு.51), “சார னடாவென் றோழியுங் கலுழ்மே,”... “பசுத்தான், வெருளினு மெல்லாம வெருண்ம்,"
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 193 களம் பொராநின்ற களம் பொரும் களம் செய்த செயல் செய் கின்ற செயல் செய்யும் செயல் வாழ்ந்த நாள் வாழாநின்ற நாள் வாழும் நாள் வனைந்த குடம் வனைகின்ற குடம் வனை யும் குடம் என வரும் . இவ்வாறே ஒழிந்த பால் இடங்களினும் ஒட்டித் தெரிநிலை வினைப் பெயரெச்சம் வந்தவாறு காண்க . கரிய கொற்றன் சிறிய காலம் சிறிய கால் நல்ல குணம் நல்ல செயல் என வரும் . ஒழிந்த் பால் இடங்களினும் ஒட்டிக் குறிப்புவினைப் பெயரெச் சம் வந்தவாறு காண்க . ஓடாக் குதிரை பாடாப் பாணன் கேளா நூல் காணாத நூல் என எதிர்மறைத் தெரிநிலைவினைப் பெயரெச்சம் ; இவற்றிற்கு வாய்பாடு ஓடாமலைச் செய்த பாடாமலைச் செய்த என்று கொள்க . ஓடுதலைச் செய்யாத பாடுதலைச் செய்யாத என்றுமாம் . அல்லாத குதிரை பொல்லாத பாணன் எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சம் . ( 21 ) 340. செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலும் செய்யுளு ளும்முந் தாகலு முற்றேல் உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே . சூ - ம் எதிர்காலத் தெரிநிலைப் பெயரெச்சத்துக்கும் தெரிநிலை வினைமுற்றுக்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலும் - செய்யும் என்னும் பெயரெச்ச வாய்பாட்டுச் சொற்களுட் சில மொழியீற்று உயிர்மெய் கெடுதலும் செய்யுளுளும்முந்தாகலும் - செய்யுட்கண் சில உம் உந் தென்று தோன்றுதலும் முற்றேல் - செய்யுமென்னும் வாய்பாட்டுச் சொல் தெரிநிலை வினைமுற்றாயின் உமிரு முயிர் மெய்யு மேகலும் - சில ஈற்றுயிர் கெடுதலும் சில ஈற்றுயிர் மெய் கெடுதலும் உளவே - உளவாம் என்றவாறு . - ம் : ஆம்பொருள்கள் ( சீவக .848 ) போம் பொருள்கள் வாம்புரவி வழுதி . இவை எதிர்காலப் பெயரெச்சம் ; உயிர் மெய் கெட்டன . கடற்றிரை மிசைப்பாயுந்து ( புறம் .24 ) நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து ( புறம் .395 ) ஆதித்தன் மேற்கே பாயுந்து . இவை உம் உந்தென்றாயின . அம்பலூரு மவனொடு மொழிமே ( குறு .51 ) சார னடாவென் றோழியுங் கலுழ்மே ... பசுத்தான் வெருளினு மெல்லாம வெருண்ம்