நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

190 சொல்லதிகாரம் - வினையியல் சூ-ம், தன்மையொடு கூடிய முன்னிலை படர்க்கைகள் தன்மையான் அமைந்தன என்றார்; முன்னிலையோடு கூடிய படர்க்கை முன்னிலை யாமோவென்று ஐயுற்றார்க்கு ஐயமறுத்தல் கூறுகின்றது. (இ-ள்) முன்னிலை கூடிய படர்க்கையும் - தன்மையொடு கூடிய படர்க்கை தன்மையானது போல முன்னிலையோடு கூடிய படர்க்கை யும், முன்னிலை - முன்னிலையான் முடிக்க என்றவாறு. உ-ம்: அவனும் நீயும் போமின், அவரும் நீரும் வம்மின், “ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய், வண்டூது பூங்கானல் வைகலுஞ் சேறிரால்” எனவும் வரும். (15) முன்னிலையொருமை வினைமுற்று 334. ஐயா யிகர வீற்ற மூன்றும் ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும் முப்பா லொருமை முன்னிலை மொழியே. சூ-ம், விரவுத் திணை, முன்னிலையொருமைத் தெரிநிலை வினை முற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது. . (இ-ள்) ஐயா மிகர வீற்ற மூன்றும் - ஐ, ஆய், இ என்னும் இம்மூன்று விகுதியும் ஈறாகவுடைய மொழிகளும், ஏவலின் வருஉ மெல்லா வீற்றவும் - ஏவற்கண் வரும் இருபத்து மூன்று ஈற்றவுமான மொழி களும், முப்பா லொருமை - ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் மூன்றற் கும் பொதுவான ஒருமைப்பாலையுடைய, முன்னிலை மொழியே - முன்னிலைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு. உ-ம்: உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய்; உண்டி, சென்றி; நட, வா, மடி, சீ, விடு, கூ, ஏ, ஐ முதலாயினவும் கொள்க. தாரினை, தரை யினை, காரினை, காலினை, வலியை, வரவினை தாராய் என வினைக்குறிப்பு முற்று வந்தன. நீ என்னும் பெயர் வருவித்துக் கொள்க. (16) 335. முன்னிலை முன்ன ரீயு மேயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. சூ-ம், மேலதற்கு எய்தியதோர் விதி கூறுகின்றது.
190 சொல்லதிகாரம் - வினையியல் சூ - ம் தன்மையொடு கூடிய முன்னிலை படர்க்கைகள் தன்மையான் அமைந்தன என்றார் ; முன்னிலையோடு கூடிய படர்க்கை முன்னிலை யாமோவென்று ஐயுற்றார்க்கு ஐயமறுத்தல் கூறுகின்றது . ( - ள் ) முன்னிலை கூடிய படர்க்கையும் - தன்மையொடு கூடிய படர்க்கை தன்மையானது போல முன்னிலையோடு கூடிய படர்க்கை யும் முன்னிலை - முன்னிலையான் முடிக்க என்றவாறு . - ம் : அவனும் நீயும் போமின் அவரும் நீரும் வம்மின் ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய் வண்டூது பூங்கானல் வைகலுஞ் சேறிரால் எனவும் வரும் . ( 15 ) முன்னிலையொருமை வினைமுற்று 334. ஐயா யிகர வீற்ற மூன்றும் ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும் முப்பா லொருமை முன்னிலை மொழியே . சூ - ம் விரவுத் திணை முன்னிலையொருமைத் தெரிநிலை வினை முற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது . . ( - ள் ) ஐயா மிகர வீற்ற மூன்றும் - ஆய் என்னும் இம்மூன்று விகுதியும் ஈறாகவுடைய மொழிகளும் ஏவலின் வருஉ மெல்லா வீற்றவும் - ஏவற்கண் வரும் இருபத்து மூன்று ஈற்றவுமான மொழி களும் முப்பா லொருமை - ஒருவன் ஒருத்தி ஒன்று என்னும் மூன்றற் கும் பொதுவான ஒருமைப்பாலையுடைய முன்னிலை மொழியே - முன்னிலைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு . - ம் : உண்டனை உண்ணாநின்றனை உண்குவை உண்டாய் உண்ணாநின்றாய் உண்பாய் ; உண்டி சென்றி ; நட வா மடி சீ விடு கூ முதலாயினவும் கொள்க . தாரினை தரை யினை காரினை காலினை வலியை வரவினை தாராய் என வினைக்குறிப்பு முற்று வந்தன . நீ என்னும் பெயர் வருவித்துக் கொள்க . ( 16 ) 335. முன்னிலை முன்ன ரீயு மேயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே . சூ - ம் மேலதற்கு எய்தியதோர் விதி கூறுகின்றது .