நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 187 மேற்று, வேனிற்று, கோடிற்று, செலவிற்று எனவும் வினைக் குறிப்பு முற்று வந்தன. பலபொருட்டு, ஆதிரைநாட்டு, குண்டு கட்டு அது எனக் குறிப்பு வினைமுற்று வந்தன. (9) பலவின்பால் வினைமுற்று 328. அ ஆ வீற்ற பலவின் படர்க்கை ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும். சூ-ம், அஃறிணைப் பன்மைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது. (இ-ள்) அ ஆ வீற்ற - அகர அகாரங்களை விகுதியாகவுடைய மொழிகள், பலவின் படர்க்கை - அஃறிணைப் பன்மைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம்; ஆவே எதிர் மறைக் கண்ண தாகும் - அவ றுள் ஆகாரவீறு எதிர்மறுத்து உரைக் குமிடத்து வரும் என்றவாறு. உ-ம்: வந்தன, வாராநின்றன, வருவன, வாரா அவை யெனத் தெரிநிலை வினைமுற்று வந்தன. பொருளல, மேல, நாள, கண்ண, கடிய, செயல அவையெனக் குறிப்பு வினைமுற்று வந்தன. (10) இருதிணைப் பொதுவினை 329. தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை உண்டி ரெச்ச மிருதிணைப் பொதுவினை. சூ-ம், பொதுவாகிய தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினை முற்றும் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) தன்மை முன்னிலை வியங்கோள் - தன்மை வினைமுற்றும், முன்னிலை வினைமுற்றும், வியங்கோள் வினைமுற்றும், வேறிலை உண்டு - வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றும், ஈரெச்சம் - பெயரெச்ச வினையெச்சமும், இருதிணைப் பொது வினை - இவ்வெட்டும் இரு திணைக்கும் பொதுவான வினைகளாம் என்றவாறு. வியங்கோள் என்பது ஏவல். (11) தன்மையொருமை வினைமுற்று 330. குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ டல்ல னென்னே னாகு மீற்ற இருதிணை முக்கூற் றொருமைத் தன்மை.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 187 மேற்று வேனிற்று கோடிற்று செலவிற்று எனவும் வினைக் குறிப்பு முற்று வந்தன . பலபொருட்டு ஆதிரைநாட்டு குண்டு கட்டு அது எனக் குறிப்பு வினைமுற்று வந்தன . ( 9 ) பலவின்பால் வினைமுற்று 328. வீற்ற பலவின் படர்க்கை ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும் . சூ - ம் அஃறிணைப் பன்மைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது . ( - ள் ) வீற்ற - அகர அகாரங்களை விகுதியாகவுடைய மொழிகள் பலவின் படர்க்கை - அஃறிணைப் பன்மைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் ; ஆவே எதிர் மறைக் கண்ண தாகும் - அவ றுள் ஆகாரவீறு எதிர்மறுத்து உரைக் குமிடத்து வரும் என்றவாறு . - ம் : வந்தன வாராநின்றன வருவன வாரா அவை யெனத் தெரிநிலை வினைமுற்று வந்தன . பொருளல மேல நாள கண்ண கடிய செயல அவையெனக் குறிப்பு வினைமுற்று வந்தன . ( 10 ) இருதிணைப் பொதுவினை 329. தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை உண்டி ரெச்ச மிருதிணைப் பொதுவினை . சூ - ம் பொதுவாகிய தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினை முற்றும் தொகுத்துக் கூறுகின்றது . ( - ள் ) தன்மை முன்னிலை வியங்கோள் - தன்மை வினைமுற்றும் முன்னிலை வினைமுற்றும் வியங்கோள் வினைமுற்றும் வேறிலை உண்டு - வேறு இல்லை உண்டு என்னும் மூன்று வினைக்குறிப்பு முற்றும் ஈரெச்சம் - பெயரெச்ச வினையெச்சமும் இருதிணைப் பொது வினை - இவ்வெட்டும் இரு திணைக்கும் பொதுவான வினைகளாம் என்றவாறு . வியங்கோள் என்பது ஏவல் . ( 11 ) தன்மையொருமை வினைமுற்று 330. குடுதுறு வென்னுங் குன்றிய லுகரமோ டல்ல னென்னே னாகு மீற்ற இருதிணை முக்கூற் றொருமைத் தன்மை .