நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

இரண்டாவது வினையியல் தெரிநிலைவினை 319. செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம் செய்பொரு ளாறுந் தருவது விளையே. சூ-ம், ஏது வகையாற் றெரிநிலை வினைச் சொல்லாது இன்னதென அதன் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) செய்பவன் கருவி நிலம் - கருத்தாவும் கருவியும் நிலனும், செயல் காலம் செய்பொருள் - தொழிலும் காலமும் செயப்படுபொரு ளும், ஆறுந் தருவது வினையே - என்னும் ஆறு பொருளையும் விளக் குவது வினையாம். உ-ம்: வனைந்தான் என்புழி வனைதற்றொழில் செய்தவன் குலாலன், கருமக்கருத்தர்; மண் முதற்கருவி; திரிகை; கோல், - தண்ணீர் முதலானவை துணைக்கருவி; அகம், புறம் நிலம்; வனைதல் தொழில்; வனைந்தான் இறந்தகாலம்; மட்குடம் செயப்படு பொருள்; தண்ணீர் வார்க்க இன்னதற்கு; விலை இன்னது பயன். இவ்வாறன்றி, பகுதி செயலை விளக்கும்; இடைநிலை காலத்தை விளக்கும்; விகுதி செய்பவனை விளக்கும்; ஒழிந்தவை மறைந்து நின்று விளக்கும் என்பார் கருத்தும் கொள்க. வனைவித்தான் என்பது ஏவுதற் கருத்தாவெனக் கொள்க. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும் என ஆசிரியர் தொல்காப்பியனார் (சொல்.195) கூறியவாறு காண்க. கால மறிதொழில் கருத்தனோ டியையப் பால்வகை தோறும் படுமொழி வேறே என ஆசிரியர் அவினயனார் கூறியவாறும் காண்க. (1)
இரண்டாவது வினையியல் தெரிநிலைவினை 319. செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம் செய்பொரு ளாறுந் தருவது விளையே . சூ - ம் ஏது வகையாற் றெரிநிலை வினைச் சொல்லாது இன்னதென அதன் இலக்கணம் கூறுகின்றது . ( - ள் ) செய்பவன் கருவி நிலம் - கருத்தாவும் கருவியும் நிலனும் செயல் காலம் செய்பொருள் - தொழிலும் காலமும் செயப்படுபொரு ளும் ஆறுந் தருவது வினையே - என்னும் ஆறு பொருளையும் விளக் குவது வினையாம் . - ம் : வனைந்தான் என்புழி வனைதற்றொழில் செய்தவன் குலாலன் கருமக்கருத்தர் ; மண் முதற்கருவி ; திரிகை ; கோல் - தண்ணீர் முதலானவை துணைக்கருவி ; அகம் புறம் நிலம் ; வனைதல் தொழில் ; வனைந்தான் இறந்தகாலம் ; மட்குடம் செயப்படு பொருள் ; தண்ணீர் வார்க்க இன்னதற்கு ; விலை இன்னது பயன் . இவ்வாறன்றி பகுதி செயலை விளக்கும் ; இடைநிலை காலத்தை விளக்கும் ; விகுதி செய்பவனை விளக்கும் ; ஒழிந்தவை மறைந்து நின்று விளக்கும் என்பார் கருத்தும் கொள்க . வனைவித்தான் என்பது ஏவுதற் கருத்தாவெனக் கொள்க . வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும் என ஆசிரியர் தொல்காப்பியனார் ( சொல் .195 ) கூறியவாறு காண்க . கால மறிதொழில் கருத்தனோ டியையப் பால்வகை தோறும் படுமொழி வேறே என ஆசிரியர் அவினயனார் கூறியவாறும் காண்க . ( 1 )