நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

சொல்லதிகாரம் முதலாவது பெயரியல் சிறப்புப் பாயிரம் 257. முச்சக நிழற்று முழுமதி முக்குடை அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே. சூ-ம், ஒருசார் வேண்டும் சிறப்புப் பாயிரம் கூறியது. (இ-ள்) முச்சக நிழற்றும் - பூமி அந்தர சுவர்க்கமென்னும் இம் மூன்று உலகத்து உயிர்கட்கெல்லாம் நிழலைச் செய்யும், முழுமதி முக்குடை - நிறைந்த மதியைப் போன்ற மூன்று குடையையுடைய, அச்சுதன் அடி தொழுது - கேடில்லானது திருவடிகளை வணங்கி, அறைகுவன் சொல்லே - சொல்லிலக்கணத்தைச் சொல்வேன் யான் என்றது. (1) சொல்லின் இயல்பு 258. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும் மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே சூ-ம், சொல்லின் கூறுபாடும் அதன் இயல்பும் கூறுகின்றது. (இ-ள்) ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா - ஒரு மொழி யும் தொடர் மொழியும் பொது மொழியும் என்னும் இக்கூறுபட்ட தாய், இருதிணை ஐம்பாற் பொருளையும் - உயர்திணை அஃறிணை
சொல்லதிகாரம் முதலாவது பெயரியல் சிறப்புப் பாயிரம் 257. முச்சக நிழற்று முழுமதி முக்குடை அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே . சூ - ம் ஒருசார் வேண்டும் சிறப்புப் பாயிரம் கூறியது . ( - ள் ) முச்சக நிழற்றும் - பூமி அந்தர சுவர்க்கமென்னும் இம் மூன்று உலகத்து உயிர்கட்கெல்லாம் நிழலைச் செய்யும் முழுமதி முக்குடை - நிறைந்த மதியைப் போன்ற மூன்று குடையையுடைய அச்சுதன் அடி தொழுது - கேடில்லானது திருவடிகளை வணங்கி அறைகுவன் சொல்லே - சொல்லிலக்கணத்தைச் சொல்வேன் யான் என்றது . ( 1 ) சொல்லின் இயல்பு 258. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும் மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே சூ - ம் சொல்லின் கூறுபாடும் அதன் இயல்பும் கூறுகின்றது . ( - ள் ) ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா - ஒரு மொழி யும் தொடர் மொழியும் பொது மொழியும் என்னும் இக்கூறுபட்ட தாய் இருதிணை ஐம்பாற் பொருளையும் - உயர்திணை அஃறிணை