நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 143 செய்தான் என இயல்பாய் வருமிடத்துத் தாய்- கொலை செய் தான் எனத் தோன்றல் விகாரம் ஆயிற்று. மண் கொணர்ந்தான், பொன் கொணர்ந்தான் என்பது விகாரத்தியல்பு. நம்பியைக் கொணர்ந்தான், நங்கையைக் கொணர்ந்தான் என உயர்திணை யிடத்து விரிந்து நின்றது. மகற் பெற்றான், மகட் பெற்றான் என்பது இரண்டனுருபு தொக்கு வந்தது. ஆடூஉ அறிசொல் என்பதுமது. கொற்றனைக் கொணர்ந்தான் கொற்றியைக் கொணர்ந்தான் என்பது விரவுப்பெயர் ஈற்றின் ஐயுருபு கொள் ளுக. மகப் பெற்றான் என விரவுப் பெயர்க்கண்ணும் கெடுதல் கொள்க. “பிறவு”மென்ற இலேசானே விளங் குறைத்தான் என்பதனை விளக்குறைத்தான் எனவும் மரக்குறைத்தான் என வல்லெழுத்து மிகு மிடத்து மரங் குறைத்தான் என மெல்லெழுத்தோடு தோன்றலும் பலாக் குறைத்தான், கடுக் குறைத்தான், சேக் கட்டினான் என உயிர் வருமிடத்து உயிர் கெட்டு வருதலும் கொள்க. 16) மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குரிய முடிபு 255. புள்ளியு முயிரு மாயிறு சொன்முன் தம்மி னாகிய தொழின் மொழி வரினே வல்லினம் விகற்பமு மியல்பு மாகும். சூ-ம், மேல் உயிரீற்றுக்கும் புள்ளியிற்றுக்கும் வேற்றுமைக் கண் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமை முடிவு கூறியது. (இ-ள்) புள்ளியும் உயிரும் ஆயிரு சொன்முன் - நிலைமொழி ஒற்றும் உயிரும் ஈறாகிய சொல், தம்மினாகிய தொழின்மொழி - மூன்றாவதற் குரிய வினைமுதற் பொருளாகிய தொழிற்சொல், வரின் - வருமொழி யாக வந்தால், வல்லினம் விகற்பமும் - வந்த வல்லெழுத்து உறழ்ச்சி விதி பெறுதலும், இயல்புமாகும் - இயல்பாய் முடிதலுமாம் என்றவாறு. உ-ம்: நாய், புலி என நிறுத்தி கோட்பட்டான், பாய்ப்பட்டான் என வருவித்து இயல்பாயினவாறு காண்க. பேய் கோட்பட்டான், பேய்க் கோட்பட்டான், வளிகோட்பட்டான், வளிக்கோட்பட்டான் என இவை உறழ்ந்தன. நாய் கவ்வப்பட்டான், புலி கவ்வப் பட்டான் எனவுமாம். (17) புறநடை 256. இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும் விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 143 செய்தான் என இயல்பாய் வருமிடத்துத் தாய்- கொலை செய் தான் எனத் தோன்றல் விகாரம் ஆயிற்று . மண் கொணர்ந்தான் பொன் கொணர்ந்தான் என்பது விகாரத்தியல்பு . நம்பியைக் கொணர்ந்தான் நங்கையைக் கொணர்ந்தான் என உயர்திணை யிடத்து விரிந்து நின்றது . மகற் பெற்றான் மகட் பெற்றான் என்பது இரண்டனுருபு தொக்கு வந்தது . ஆடூஉ அறிசொல் என்பதுமது . கொற்றனைக் கொணர்ந்தான் கொற்றியைக் கொணர்ந்தான் என்பது விரவுப்பெயர் ஈற்றின் ஐயுருபு கொள் ளுக . மகப் பெற்றான் என விரவுப் பெயர்க்கண்ணும் கெடுதல் கொள்க . பிறவு மென்ற இலேசானே விளங் குறைத்தான் என்பதனை விளக்குறைத்தான் எனவும் மரக்குறைத்தான் என வல்லெழுத்து மிகு மிடத்து மரங் குறைத்தான் என மெல்லெழுத்தோடு தோன்றலும் பலாக் குறைத்தான் கடுக் குறைத்தான் சேக் கட்டினான் என உயிர் வருமிடத்து உயிர் கெட்டு வருதலும் கொள்க . 16 ) மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குரிய முடிபு 255. புள்ளியு முயிரு மாயிறு சொன்முன் தம்மி னாகிய தொழின் மொழி வரினே வல்லினம் விகற்பமு மியல்பு மாகும் . சூ - ம் மேல் உயிரீற்றுக்கும் புள்ளியிற்றுக்கும் வேற்றுமைக் கண் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமை முடிவு கூறியது . ( - ள் ) புள்ளியும் உயிரும் ஆயிரு சொன்முன் - நிலைமொழி ஒற்றும் உயிரும் ஈறாகிய சொல் தம்மினாகிய தொழின்மொழி - மூன்றாவதற் குரிய வினைமுதற் பொருளாகிய தொழிற்சொல் வரின் - வருமொழி யாக வந்தால் வல்லினம் விகற்பமும் - வந்த வல்லெழுத்து உறழ்ச்சி விதி பெறுதலும் இயல்புமாகும் - இயல்பாய் முடிதலுமாம் என்றவாறு . - ம் : நாய் புலி என நிறுத்தி கோட்பட்டான் பாய்ப்பட்டான் என வருவித்து இயல்பாயினவாறு காண்க . பேய் கோட்பட்டான் பேய்க் கோட்பட்டான் வளிகோட்பட்டான் வளிக்கோட்பட்டான் என இவை உறழ்ந்தன . நாய் கவ்வப்பட்டான் புலி கவ்வப் பட்டான் எனவுமாம் . ( 17 ) புறநடை 256. இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும் விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே .