நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

134 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் (இ-ள்) சுட்டு வகரம் - சுட்டெழுத்தை முதலாகவுடைய ஈற்று நின்ற வகரவொற்று, மூவினமுற - வருமொழி முதல் வலி மெல் இடை வந் தால், முறையே ஆய்தமும் மென்மையும் இயல்புமாகும் - முறையே வலி வர ஆய்தமும் மெலி வர மெல்லெழுத்தும் இடை வர இயல்பு மாம் என்றவாறு. உ-ம்: அஃகடிய, குறிய, சிறிய, தீய, பெரிய எனவும் அஞ் ஞான்றன, நீண்டன, மாண்டன எனவும் அவ்வலிய, அவ்யானை என முறையே காண்க. (32) 235. தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே மவ்வரின் வஃகான் மவ்வு மாகும். சூ-ம், தெவ்வென்றும் வகரவீற்றுச் சொற் புணர்ச்சி கூறியது. (இ-ள்) தெவ்வென் மொழியே - தெவ்வென்னும் நிலைமொழி ஈற்றி னின்ற வகரவொற்று மூவினமும் வரவும் தொழிற்பெய ரற்றே - முதனி லைத் தொழிற்பெயரே போல உகரம் பெற்றுப் புணரும் இருவழியும், மவ்வரின் - வருமொழி முதலாக மகரம் வந்தால், வஃகான் மவ்வுமா கும் - ஈற்று வகரமும் மகரமாம் என்றவாறு. உ-ம்: தெவ்வுக் கடிது, ஞான்றது, வலிது எனவும் தெவ்வுக் கடுமை, ஞாற்சி, வலிமை எனவும் இருவலியும் மூவினமும் வா உகரம் பெற்றது. தெம்மன்னர், தெம்முனை என ஈற்று வகரம் மகரமாயின. (34) வருமொழித் தகர நகரத் திரிபு 236. லனமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகுந் தநக்க ளாயுங் காலே. சூ-ம், வருமொழி முதல் வந்த தகர நகர விகாரம் கூறியது. (இ-ள்) ல ன முன் - லகார னகாரங்கள் முன்னர், றனவும் - தகார நகா ரங்கள் வந்தால் றவ்வும் னவ்வுமாம், ணள முன் - ணகார ளகாரங்கள் முன்னர், ட ணவும் - தக ர நக ரங்கள் வந்தால் டவ்வும் ணவ்வுமாம், ஆகுந் தநக்கள் - என்பதனை இரண்டொடும் கூட்டுக, ஆயங்காலே - ஆராயுமிடத்து என்றவாறு. உ-ம்: கற்றீது, பொற்றீது, கன்னன்று, பொன்னன்று எனவும் கற்றீமை, பொற்றீமை, கன்னன்மை, பொன்னன்மை எனவும் இரு வழியும் லன உறழ்ந்த த ந க்கள் வரத் த றவ்வும் ந னவ்வுமாயிற்று. மட்டீது, முட்டீது, மண்ணன்று, முண்ணன்று எனவும் மட்டீமை, முட்டீமை, மண்ணன்மை, முன்ணன்மை
134 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் ( - ள் ) சுட்டு வகரம் - சுட்டெழுத்தை முதலாகவுடைய ஈற்று நின்ற வகரவொற்று மூவினமுற - வருமொழி முதல் வலி மெல் இடை வந் தால் முறையே ஆய்தமும் மென்மையும் இயல்புமாகும் - முறையே வலி வர ஆய்தமும் மெலி வர மெல்லெழுத்தும் இடை வர இயல்பு மாம் என்றவாறு . - ம் : அஃகடிய குறிய சிறிய தீய பெரிய எனவும் அஞ் ஞான்றன நீண்டன மாண்டன எனவும் அவ்வலிய அவ்யானை என முறையே காண்க . ( 32 ) 235. தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே மவ்வரின் வஃகான் மவ்வு மாகும் . சூ - ம் தெவ்வென்றும் வகரவீற்றுச் சொற் புணர்ச்சி கூறியது . ( - ள் ) தெவ்வென் மொழியே - தெவ்வென்னும் நிலைமொழி ஈற்றி னின்ற வகரவொற்று மூவினமும் வரவும் தொழிற்பெய ரற்றே - முதனி லைத் தொழிற்பெயரே போல உகரம் பெற்றுப் புணரும் இருவழியும் மவ்வரின் - வருமொழி முதலாக மகரம் வந்தால் வஃகான் மவ்வுமா கும் - ஈற்று வகரமும் மகரமாம் என்றவாறு . - ம் : தெவ்வுக் கடிது ஞான்றது வலிது எனவும் தெவ்வுக் கடுமை ஞாற்சி வலிமை எனவும் இருவலியும் மூவினமும் வா உகரம் பெற்றது . தெம்மன்னர் தெம்முனை என ஈற்று வகரம் மகரமாயின . ( 34 ) வருமொழித் தகர நகரத் திரிபு 236. லனமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகுந் தநக்க ளாயுங் காலே . சூ - ம் வருமொழி முதல் வந்த தகர நகர விகாரம் கூறியது . ( - ள் ) முன் - லகார னகாரங்கள் முன்னர் றனவும் - தகார நகா ரங்கள் வந்தால் றவ்வும் னவ்வுமாம் ணள முன் - ணகார ளகாரங்கள் முன்னர் ணவும் - தக நக ரங்கள் வந்தால் டவ்வும் ணவ்வுமாம் ஆகுந் தநக்கள் - என்பதனை இரண்டொடும் கூட்டுக ஆயங்காலே - ஆராயுமிடத்து என்றவாறு . - ம் : கற்றீது பொற்றீது கன்னன்று பொன்னன்று எனவும் கற்றீமை பொற்றீமை கன்னன்மை பொன்னன்மை எனவும் இரு வழியும் லன உறழ்ந்த க்கள் வரத் றவ்வும் னவ்வுமாயிற்று . மட்டீது முட்டீது மண்ணன்று முண்ணன்று எனவும் மட்டீமை முட்டீமை மண்ணன்மை முன்ணன்மை