நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

132 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் சூ-ம், லகர ளகரவீற்றுப் புடை பெயர்ச்சித் தொழிற்பெயர்ப் புணர்ச்சி கூறியது. (இ-ள்) லளவிறு தொழிற்பெயர் - நிலைமொழியான் லகர ளகரவீற் றுப் புடைபெயர்ச்சித் தொழிற்பெயர்க்கண் முக்கணம் வரினும், ஈரிடத்தும் - அல்வழி வேற்றுமை இரண்டிடத்தும், உவ்வுறா - மேல் விதித்த உகரம் இவ்வீற்று லளக்கள் ஏலாதாம், வலி வரின் அல்வழி - வல்லினம் வந்தால் அல்வழிப் புணர்ச்சிக்கண்ணே, இயல்பும் ஆவன வுள - மேற்சொன்ன உறழ்வு உறழாது இயல்பாய் முடிவனவும் உள என்றவாறு. உ-ம்: ஆடல், பாடல், ஓதல், ஈதல், முன்னல், பின்னல், உள் ளல், துள்ளல், செய்யுள், விளையுள், கோள் கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் கடுமை, சிறுமை எனவும் இருவழியும் உகரம் ஏலாது இயல்பாய் முடிந்தன. (27) 230. வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும் பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். சூ-ம், வல்லென்னும் லகரவீற்றுப் பெயர்ப் புணர்ச்சி கூறியது. (இ-ள்) வல்லே - வல் என்னும் லகர ஒற்றீற்றுச் சொல மூவினம் வரி னும், தொழிற்பெயரற்று - முதனிலை தனிநிலை தொழிற்பெயரே போல உகரம் பெற்றும், இருவழியும் - அல்வழி வேற்றுமை இரண் டிடத்துமாம், பலகை நாய் வரினும் - பலகையும் நாயும் வருமொழி யாக வரில், வேற்றுமைக்கு - வேற்றுமைப் புணர்ச்சிக்கண், அவ்வுமாம் - உகரமேயன்றி அகரமும் பெறும் என்றவாறு. உ-ம்: வல்லுக் கடிது, ஞான்றது, வலிது எனவும் கடுமை, ஞாற்சி, வலிமை எனவும் இருவழியும் மூவினம் வர உகரம் பெற்றது. வல்லப் பலகை, வல்லநாய் என வேற்றுமைக்கண் அகரம் பெற்றது. (28) 231. நெல்லுள் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்வழி யானும் றகர மாகும். சூ-ம், நெல் செல் கொல் சொல் என்னும் இந்நான்கு சொல்லும் புணரு மாறு கூறியது. (இ-ள்) நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் - நெல் செல் கொல் சொல் என்னும் இந்நான்கு சொல்லும், அல்வழியானும் - அல் வழிப்பொருட் புணர்ச்சிக்கண், றக்ர மாகும் - அவ்வீற்று லகரம் றகர மாகத் திரிந்து வரும் என்றவாறு.
132 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் சூ - ம் லகர ளகரவீற்றுப் புடை பெயர்ச்சித் தொழிற்பெயர்ப் புணர்ச்சி கூறியது . ( - ள் ) லளவிறு தொழிற்பெயர் - நிலைமொழியான் லகர ளகரவீற் றுப் புடைபெயர்ச்சித் தொழிற்பெயர்க்கண் முக்கணம் வரினும் ஈரிடத்தும் - அல்வழி வேற்றுமை இரண்டிடத்தும் உவ்வுறா - மேல் விதித்த உகரம் இவ்வீற்று லளக்கள் ஏலாதாம் வலி வரின் அல்வழி - வல்லினம் வந்தால் அல்வழிப் புணர்ச்சிக்கண்ணே இயல்பும் ஆவன வுள - மேற்சொன்ன உறழ்வு உறழாது இயல்பாய் முடிவனவும் உள என்றவாறு . - ம் : ஆடல் பாடல் ஓதல் ஈதல் முன்னல் பின்னல் உள் ளல் துள்ளல் செய்யுள் விளையுள் கோள் கடிது சிறிது தீது பெரிது எனவும் கடுமை சிறுமை எனவும் இருவழியும் உகரம் ஏலாது இயல்பாய் முடிந்தன . ( 27 ) 230. வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும் பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம் . சூ - ம் வல்லென்னும் லகரவீற்றுப் பெயர்ப் புணர்ச்சி கூறியது . ( - ள் ) வல்லே - வல் என்னும் லகர ஒற்றீற்றுச் சொல மூவினம் வரி னும் தொழிற்பெயரற்று - முதனிலை தனிநிலை தொழிற்பெயரே போல உகரம் பெற்றும் இருவழியும் - அல்வழி வேற்றுமை இரண் டிடத்துமாம் பலகை நாய் வரினும் - பலகையும் நாயும் வருமொழி யாக வரில் வேற்றுமைக்கு - வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அவ்வுமாம் - உகரமேயன்றி அகரமும் பெறும் என்றவாறு . - ம் : வல்லுக் கடிது ஞான்றது வலிது எனவும் கடுமை ஞாற்சி வலிமை எனவும் இருவழியும் மூவினம் வர உகரம் பெற்றது . வல்லப் பலகை வல்லநாய் என வேற்றுமைக்கண் அகரம் பெற்றது . ( 28 ) 231. நெல்லுள் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்வழி யானும் றகர மாகும் . சூ - ம் நெல் செல் கொல் சொல் என்னும் இந்நான்கு சொல்லும் புணரு மாறு கூறியது . ( - ள் ) நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் - நெல் செல் கொல் சொல் என்னும் இந்நான்கு சொல்லும் அல்வழியானும் - அல் வழிப்பொருட் புணர்ச்சிக்கண் றக்ர மாகும் - அவ்வீற்று லகரம் றகர மாகத் திரிந்து வரும் என்றவாறு .