நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 127 (இ-ள்) தன்னென் என்பவற்றீற்றின் - தன் என் என்னும் இவ்விரு சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்று தத்தம் பொருட் புணர்ச்சிக் கண், வன்மையோ டுறழும் - வல்லினம் வந்தால் றகரத்துடன் உறழ்ந்து முடியும், நின்னீறு - நின் என்னும் சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்றுத் தன் பொருட் புணர்ச்சிக்கண், இயல்பாமுறவே - வல்லினம் வந்தால் திரியாமல் இயல்பாய் முடியும் என்றவாறு. உ.ம்: தன் பகை தற் பகை, என் பகை எற் பகை, நின் பகை, செவி, தலை, புறம் என வரும். (15) - மகரவீறு 218. மவ்வி றொற்றழிந் துயிரி றொப்பவும் வன்மைக் கினமாய்த் திரிபவு மாகும். சூ-ம், மகரவீறு புணருமாறு கூறியது. (இ-ள்) மவ்வீறு - நிலைமொழி ஈறாக நின்ற மகரவொற்று, ஒற்ற ழிந்து - மொழி முதல் அனைத்தும் வர இறுதியொற்று அழிந்து, உயிரீ றொப்பவும் - உமிரீறாய் நாற்கணமும் வந்தால் உயிரீற்றுப் பதப்புணர்ச்சி போலாம், வன்மைக் கினமாய்த் திரிபவுமாகும் - வன்மை வந்தால் ஈறு கெடாது அவற்றிற்கு இனமாகிய மென்மை களாய்த் திரிவனவும் உள என்றாறு. உ-ம்: வட்டவடி, ஆடி, இலை எனவும் வட்டக்கல், சுனை, தாழி, பாறை எனவும் வட்டஞான்றது, நீண்டது, மாண்டது, வாரி என வும் விதியுயிரீறாய் உடம்படுமெய்யும் மிகுதியும் இயல்புமாய் அல்வழிக்கண் வந்தது. மரங்குறிது, சிறிது, தீது, பெரிது என அல்வழிக்கண் வல்லினம் வர இனமாய்த் திரிந்தது. மரவடி, ஆட்டம், இலை எனவும் மரக்கோடு, செதிள், தோல், பூ எனவும் மரஞாண், நூல், வடு எனவும் இறுதி கெட்டு விதியுமிரீறாய் உடம்படுமெய்யும் மிகுதியும் இயல்புமாய் வேற்றுமைக்கண் வந்தது. மரவங்கோடு, செதிள், தோல், பூ என வேற்றுமைக் கண் வல்லினம் வர இனமாய்த் திரிந்தது. (16) 219. வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும் அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள. சூ-ம், இதுவுமது. (இ-ள்) வேற்றுமை - வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணே, மப் போய் - நிலைமொழி ஈற்றினின்ற மகரவொற்றுக் கெட்டு, வலிமெலி உறழ்வும் - வல்லெழுத்து வந்தால் வல்லெழுத்து மெல்லெழுத்துக்கு உறழ்வும், அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண், உயிரிடை
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 127 ( - ள் ) தன்னென் என்பவற்றீற்றின் - தன் என் என்னும் இவ்விரு சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்று தத்தம் பொருட் புணர்ச்சிக் கண் வன்மையோ டுறழும் - வல்லினம் வந்தால் றகரத்துடன் உறழ்ந்து முடியும் நின்னீறு - நின் என்னும் சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்றுத் தன் பொருட் புணர்ச்சிக்கண் இயல்பாமுறவே - வல்லினம் வந்தால் திரியாமல் இயல்பாய் முடியும் என்றவாறு . உ.ம் : தன் பகை தற் பகை என் பகை எற் பகை நின் பகை செவி தலை புறம் என வரும் . ( 15 ) - மகரவீறு 218. மவ்வி றொற்றழிந் துயிரி றொப்பவும் வன்மைக் கினமாய்த் திரிபவு மாகும் . சூ - ம் மகரவீறு புணருமாறு கூறியது . ( - ள் ) மவ்வீறு - நிலைமொழி ஈறாக நின்ற மகரவொற்று ஒற்ற ழிந்து - மொழி முதல் அனைத்தும் வர இறுதியொற்று அழிந்து உயிரீ றொப்பவும் - உமிரீறாய் நாற்கணமும் வந்தால் உயிரீற்றுப் பதப்புணர்ச்சி போலாம் வன்மைக் கினமாய்த் திரிபவுமாகும் - வன்மை வந்தால் ஈறு கெடாது அவற்றிற்கு இனமாகிய மென்மை களாய்த் திரிவனவும் உள என்றாறு . - ம் : வட்டவடி ஆடி இலை எனவும் வட்டக்கல் சுனை தாழி பாறை எனவும் வட்டஞான்றது நீண்டது மாண்டது வாரி என வும் விதியுயிரீறாய் உடம்படுமெய்யும் மிகுதியும் இயல்புமாய் அல்வழிக்கண் வந்தது . மரங்குறிது சிறிது தீது பெரிது என அல்வழிக்கண் வல்லினம் வர இனமாய்த் திரிந்தது . மரவடி ஆட்டம் இலை எனவும் மரக்கோடு செதிள் தோல் பூ எனவும் மரஞாண் நூல் வடு எனவும் இறுதி கெட்டு விதியுமிரீறாய் உடம்படுமெய்யும் மிகுதியும் இயல்புமாய் வேற்றுமைக்கண் வந்தது . மரவங்கோடு செதிள் தோல் பூ என வேற்றுமைக் கண் வல்லினம் வர இனமாய்த் திரிந்தது . ( 16 ) 219. வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும் அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள . சூ - ம் இதுவுமது . ( - ள் ) வேற்றுமை - வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணே மப் போய் - நிலைமொழி ஈற்றினின்ற மகரவொற்றுக் கெட்டு வலிமெலி உறழ்வும் - வல்லெழுத்து வந்தால் வல்லெழுத்து மெல்லெழுத்துக்கு உறழ்வும் அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண் உயிரிடை