நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 123 உ-ம்: மட்குடம், சாடி, தாழி, பானை எனவும்; பொற்குடம், சாடி, தாழி, பானை எனவும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வலிவரத் திரிந்தன. மண், பொன் ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை என வேற்றுமைக்கண் மெல்லினமும் இடையினமும் வர இயல்பாயின. மண், பொன் கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என அல்வழிக் கண் மூவினமும் வர இயல்பாயின பிறவுமன்ன. (6) 209, குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. சூ-ம், தனியே ஒரு குற்றெழுத்தை ஒழிந்த ணகார னகரவீற்றுச் சொற் கள் புணருமாறு கூறியது. (இ-ள்) குறிலணவில்லா ணனக்கள் - நிலைமொழி தனிக் குற் றெழுத்தையடுத்து வராத ஒரு மொழி தொடர் மொழிகளைச் சார்ந்த ணகார னகாரங்கள், வந்த நகரந் திரிந்துழி - வருமொழி முதலாய் வந்த நகரம் ஈற்று ணகார னகாரமாகத் திரிந்த பின்பு, நண்ணும் கேடே - நிலைமொழி ஈற்று ணகார னகாரம் கெடுவனவாம் என்றவாறு. உ-ம்: பாண், பரண், பசுமண், பண்மணிப்பூண், பைங்கண், வான், வலன், வயான், வலியன், வாலன், பல்லன், அருமணவன் என நிறுத்தி நன்று எனவும் நன்மை எனவும் இருவழியும் ஒட்டி வந்த நகரம் திரிந்து நிலை மொழி ஈறு கெட்டவாறு காண்க. (7) 210. சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற டவ்வா கலுமா மல்வழி யும்மே. க சூ-ம், ணகாரவீற்றுச் சில சொற்புணர்ச்சி விகாரம் கூறியது. (இ-ள்) சாதி குழூஉ - சாதி பற்றியும் திரள் பற்றியும் வரும் பெயர் களும், பரண் கவண் பெயரிறுதி - பரண் கவண் என்னும் இவ்விரு பெயர்களுமான இவ்வீற்று ணகாரம், இயல்பாம் வேற்றுமைக்கு - வல்லினம் வந்தால் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இயல்பேயாம். உணவெண் சாண் பிற - எண்ணென்னும் உணவுப் பெயரும் சா ணென்னும் நீட்சியளவுப் பெயரும், டவ்வாகலுமாம் - வல்லெழுத்து வந்தால் அவ்வீற்று னகாரம் டகாரமாகவும் பெறும், அல்வழியும்மே - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே என்றவாறு. உ-ம்: பாண், உமண், உவண் குடி, சேரி, தோட்டம், பாடி எனச் சாதிப் பெயரும் அமண் குடி, சேரி, தோட்டம், பாடி எனக் குழூஉப் பெயரும், பரண் கால், கவண் கால் என வரும் தனிப்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 123 - ம் : மட்குடம் சாடி தாழி பானை எனவும் ; பொற்குடம் சாடி தாழி பானை எனவும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வலிவரத் திரிந்தன . மண் பொன் ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வலிமை என வேற்றுமைக்கண் மெல்லினமும் இடையினமும் வர இயல்பாயின . மண் பொன் கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என அல்வழிக் கண் மூவினமும் வர இயல்பாயின பிறவுமன்ன . ( 6 ) 209 குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே . சூ - ம் தனியே ஒரு குற்றெழுத்தை ஒழிந்த ணகார னகரவீற்றுச் சொற் கள் புணருமாறு கூறியது . ( - ள் ) குறிலணவில்லா ணனக்கள் - நிலைமொழி தனிக் குற் றெழுத்தையடுத்து வராத ஒரு மொழி தொடர் மொழிகளைச் சார்ந்த ணகார னகாரங்கள் வந்த நகரந் திரிந்துழி - வருமொழி முதலாய் வந்த நகரம் ஈற்று ணகார னகாரமாகத் திரிந்த பின்பு நண்ணும் கேடே - நிலைமொழி ஈற்று ணகார னகாரம் கெடுவனவாம் என்றவாறு . - ம் : பாண் பரண் பசுமண் பண்மணிப்பூண் பைங்கண் வான் வலன் வயான் வலியன் வாலன் பல்லன் அருமணவன் என நிறுத்தி நன்று எனவும் நன்மை எனவும் இருவழியும் ஒட்டி வந்த நகரம் திரிந்து நிலை மொழி ஈறு கெட்டவாறு காண்க . ( 7 ) 210. சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற டவ்வா கலுமா மல்வழி யும்மே . சூ - ம் ணகாரவீற்றுச் சில சொற்புணர்ச்சி விகாரம் கூறியது . ( - ள் ) சாதி குழூஉ - சாதி பற்றியும் திரள் பற்றியும் வரும் பெயர் களும் பரண் கவண் பெயரிறுதி - பரண் கவண் என்னும் இவ்விரு பெயர்களுமான இவ்வீற்று ணகாரம் இயல்பாம் வேற்றுமைக்கு - வல்லினம் வந்தால் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இயல்பேயாம் . உணவெண் சாண் பிற - எண்ணென்னும் உணவுப் பெயரும் சா ணென்னும் நீட்சியளவுப் பெயரும் டவ்வாகலுமாம் - வல்லெழுத்து வந்தால் அவ்வீற்று னகாரம் டகாரமாகவும் பெறும் அல்வழியும்மே - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே என்றவாறு . - ம் : பாண் உமண் உவண் குடி சேரி தோட்டம் பாடி எனச் சாதிப் பெயரும் அமண் குடி சேரி தோட்டம் பாடி எனக் குழூஉப் பெயரும் பரண் கால் கவண் கால் என வரும் தனிப்