நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 117 இனைத்தே - ஒன்பதென்னும் எண்ணின் பின் இவ்வெண்ணாதிப் பெயர் வந்தால் இவ்விரண்டனுள் ஒன்று ஆண்டுமாம் என்றவாறு. உ-ம்: பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு எனவும் பதினாயிரம், பதின் கோடி, பதின் கழஞ்சு, பதின்றுலாம், பதினாழி, பதின்கலம், பதின்மர், பதின்மடங்கு என இன் சாரியை பெற்றன. பதிற் றொன்று, பதிற்றிரண்டு, பதிற்று மூன்று, பதிற்றுநான்கு, பதிற்றைந்து, பதிற்றாறு, பதிற்றேழு, பதிற்றெட்டு, பதிற் றொன்பது, பதிற்றுப்பத்து, பதிற்றுக்கோடி, பதிற்றுக்கழஞ்சு, பதிற்றுத்துலாம், பதிற்றுத்தூணி, பதிற்று நாழி என இற்றுப் பெற்றன. ஒன்பதினாயிரம், ஒன்பதின்கோடி, ஒன்பதின்கழஞ்சு, ஒன்பதின்கலம், ஒன்பதின்மர் என இன் சாரியை பெற்றன. ஒன் பதிற்றொன்று, ஒன்பதிற்றிரண்டு, ஒன்பதிற்று மூன்று, ஒன் பதிற்று நான்கு, ஒன்பதிற்றைந்து, ஒன்பதிற்றாறு, ஒன்பதிற் றேழு, ஒன்பதிற்றெட்டு, ஒன்பதிற்றொன்பது, ஒன்பதிற்றுப் பத்து, ஒன்பதிற்றுக்கோடி, ஒன்பதிற்றுக்கழஞ்சு, ஒன்பதிற்றுத் தூணி, ஒன்பதிற்றுமடங்கு என இற்றுச் சாரியை பெற்றன. "ஏற்பதேற்கும்” என்பதனால் பத்தின்முன் இரண்டும் ஒன்பதும் பத்தும் வரும் வழி இன் சாரியை பெறாதென்க; ஆயிரம் வரும்வழி இற் றுச்சாரியை பெறாதென்க; இன்வரும். ஒன்பதின்முன் ஒன்று முதல் பத்தெண்ணும் வரும்வழி இன் சாரியை பெறாதென்க... (46) 197. இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய் கரந்திட வொற்று னவ்வாகு மென்ப... சூ-ம், பத்தென்னும் எண்முன் இரண்டென்னும் எண் புணருமாறு கூறியது. (இ-ள்) இரண்டு முன்வரில் - இரண்டென்பது வருமொழியா வரில், பத்தின் ஈற்றுயிர்மெய் கரந்திட - பத்தென்னும் எண்ணின் நிலை மொழி ஈற்றுயிர்மெய் கெட, ஒற்று னவ்வாகு மென்ப - இடையே நின்ற தகர ஒற்று னகரவொற்றாய்த் திரியுமென்று உரைப்பர் புலவர் என்றவாறு. உ-ம்: பத்து இரண்டு என்பது பன்னிரண்டு என வரும். (47) 198. ஒன்ப தொழித்தவெண் ணொன்பத மிரட்டின் முன்னதின் முன்னல வோட வுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி. சூ-ம், ஒன்று முதல் பத்தீறாகவுள்ள எண்கள் தம்மொடு தாம் புண ருமாறு கூறியது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 117 இனைத்தே - ஒன்பதென்னும் எண்ணின் பின் இவ்வெண்ணாதிப் பெயர் வந்தால் இவ்விரண்டனுள் ஒன்று ஆண்டுமாம் என்றவாறு . - ம் : பதினொன்று பதின்மூன்று பதினான்கு பதினைந்து பதினாறு பதினேழு பதினெட்டு எனவும் பதினாயிரம் பதின் கோடி பதின் கழஞ்சு பதின்றுலாம் பதினாழி பதின்கலம் பதின்மர் பதின்மடங்கு என இன் சாரியை பெற்றன . பதிற் றொன்று பதிற்றிரண்டு பதிற்று மூன்று பதிற்றுநான்கு பதிற்றைந்து பதிற்றாறு பதிற்றேழு பதிற்றெட்டு பதிற் றொன்பது பதிற்றுப்பத்து பதிற்றுக்கோடி பதிற்றுக்கழஞ்சு பதிற்றுத்துலாம் பதிற்றுத்தூணி பதிற்று நாழி என இற்றுப் பெற்றன . ஒன்பதினாயிரம் ஒன்பதின்கோடி ஒன்பதின்கழஞ்சு ஒன்பதின்கலம் ஒன்பதின்மர் என இன் சாரியை பெற்றன . ஒன் பதிற்றொன்று ஒன்பதிற்றிரண்டு ஒன்பதிற்று மூன்று ஒன் பதிற்று நான்கு ஒன்பதிற்றைந்து ஒன்பதிற்றாறு ஒன்பதிற் றேழு ஒன்பதிற்றெட்டு ஒன்பதிற்றொன்பது ஒன்பதிற்றுப் பத்து ஒன்பதிற்றுக்கோடி ஒன்பதிற்றுக்கழஞ்சு ஒன்பதிற்றுத் தூணி ஒன்பதிற்றுமடங்கு என இற்றுச் சாரியை பெற்றன . ஏற்பதேற்கும் என்பதனால் பத்தின்முன் இரண்டும் ஒன்பதும் பத்தும் வரும் வழி இன் சாரியை பெறாதென்க ; ஆயிரம் வரும்வழி இற் றுச்சாரியை பெறாதென்க ; இன்வரும் . ஒன்பதின்முன் ஒன்று முதல் பத்தெண்ணும் வரும்வழி இன் சாரியை பெறாதென்க ... ( 46 ) 197. இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய் கரந்திட வொற்று னவ்வாகு மென்ப ... சூ - ம் பத்தென்னும் எண்முன் இரண்டென்னும் எண் புணருமாறு கூறியது . ( - ள் ) இரண்டு முன்வரில் - இரண்டென்பது வருமொழியா வரில் பத்தின் ஈற்றுயிர்மெய் கரந்திட - பத்தென்னும் எண்ணின் நிலை மொழி ஈற்றுயிர்மெய் கெட ஒற்று னவ்வாகு மென்ப - இடையே நின்ற தகர ஒற்று னகரவொற்றாய்த் திரியுமென்று உரைப்பர் புலவர் என்றவாறு . - ம் : பத்து இரண்டு என்பது பன்னிரண்டு என வரும் . ( 47 ) 198. ஒன்ப தொழித்தவெண் ணொன்பத மிரட்டின் முன்னதின் முன்னல வோட வுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி . சூ - ம் ஒன்று முதல் பத்தீறாகவுள்ள எண்கள் தம்மொடு தாம் புண ருமாறு கூறியது .