நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

114 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் சூ-ம், ஒன்று இரண்டு என்னும் இருவகை எண்ணின் முன் எண்ணாதி நால்வகைப் பெயரும் புணருமாறு கூறியது. (இ-ள்) ஒன்றன் புள்ளி ரகரமாக - ஒன்றென்னும் எண்ணிடை நின்ற னகரவொற்று ரகரவொற்றாக, இரண்டனொற்றுயிரேக - இரண்டென் னும் எண்ணிடைநின்ற னகரமும் ரகரமிசை நின்ற அகரமும் போக, உவ்வருமே - இவ்விரண்டெண்ணின் ரகரத்தின் மேலும் உகரம் வரும் என்றவாறு. உ-ம்: ஒருபது, ஒரு கழஞ்சு, ஒரு கலம், ஒரு பிறப்பு எனவும் இருபது, இரு கழஞ்சு, இரு கலம், இரு பிறப்பு எனவும் வரும். (38) 189. மூன்றானுறுப் பழிவும் வந்தது மாகும். சூ-ம், மூன்றென்னும் எண்ணின் விகாரம் கூறியது. (இ-ள்) மூன்றனுறுப் பழிவும் - மூன்றென்னும் எண்ணிடைநின்ற ஒற் றுக்கெடுதலும், வந்தது மாகும் - வருமொழி முதல் வந்த ஒற்றாய்த் திரிதலுமாம் என்றவாறு. உ-ம்: மூவொன்று, மூவிடை, மூவுழக்கு, மூவுலகு எனவும்; முப்பது, முக்கழஞ்சு, முந்நாழி, மும்மொழி எனவும் வரும். (39) 190. நான்கன் மெய்யே லறவா கும்மே. சூ-ம், நான்கென்னும் எண்ணின் விகாரம் கூறியது. (இ-ள்), நான்கன் மெய்யே - நான்கென்னும் எண்ணிடைநின்ற னகர ஒற்று, லறவாகும்மே - லகாரமும் றகாரமுமாய்த் திரியும் என்றவாறு. உ-ம்: நாலொன்று, நாலிடை, நாலுழக்கு, நால்யானை எனவும்; நாற்பது, நாற்கழஞ்சு, நாற்கலம், நாற்கவி எனவும் வரும். (40) 191. ஐந்தனொற் றடைவது மினமுங் கெடும் சூ-ம், ஐந்தென்னும் எண்ணின் விகாரம் கூறியது. (இ-ள்) ஐந்தனொற்று - ஐந்தென்னும் எண்ணிடையே நின்ற நகார ஒற்று, அடைவதும் - வருமொழி முதல் வந்த ஒற்றாய்த் திரிதலும், இனமும் கெடும் - அதற்கு இனமாய்த் திரிதலும் கெடுதலும் இம் மூன்றினாலும் முடியும் என்றவாறு.
114 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் சூ - ம் ஒன்று இரண்டு என்னும் இருவகை எண்ணின் முன் எண்ணாதி நால்வகைப் பெயரும் புணருமாறு கூறியது . ( - ள் ) ஒன்றன் புள்ளி ரகரமாக - ஒன்றென்னும் எண்ணிடை நின்ற னகரவொற்று ரகரவொற்றாக இரண்டனொற்றுயிரேக - இரண்டென் னும் எண்ணிடைநின்ற னகரமும் ரகரமிசை நின்ற அகரமும் போக உவ்வருமே - இவ்விரண்டெண்ணின் ரகரத்தின் மேலும் உகரம் வரும் என்றவாறு . - ம் : ஒருபது ஒரு கழஞ்சு ஒரு கலம் ஒரு பிறப்பு எனவும் இருபது இரு கழஞ்சு இரு கலம் இரு பிறப்பு எனவும் வரும் . ( 38 ) 189. மூன்றானுறுப் பழிவும் வந்தது மாகும் . சூ - ம் மூன்றென்னும் எண்ணின் விகாரம் கூறியது . ( - ள் ) மூன்றனுறுப் பழிவும் - மூன்றென்னும் எண்ணிடைநின்ற ஒற் றுக்கெடுதலும் வந்தது மாகும் - வருமொழி முதல் வந்த ஒற்றாய்த் திரிதலுமாம் என்றவாறு . - ம் : மூவொன்று மூவிடை மூவுழக்கு மூவுலகு எனவும் ; முப்பது முக்கழஞ்சு முந்நாழி மும்மொழி எனவும் வரும் . ( 39 ) 190. நான்கன் மெய்யே லறவா கும்மே . சூ - ம் நான்கென்னும் எண்ணின் விகாரம் கூறியது . ( - ள் ) நான்கன் மெய்யே - நான்கென்னும் எண்ணிடைநின்ற னகர ஒற்று லறவாகும்மே - லகாரமும் றகாரமுமாய்த் திரியும் என்றவாறு . - ம் : நாலொன்று நாலிடை நாலுழக்கு நால்யானை எனவும் ; நாற்பது நாற்கழஞ்சு நாற்கலம் நாற்கவி எனவும் வரும் . ( 40 ) 191. ஐந்தனொற் றடைவது மினமுங் கெடும் சூ - ம் ஐந்தென்னும் எண்ணின் விகாரம் கூறியது . ( - ள் ) ஐந்தனொற்று - ஐந்தென்னும் எண்ணிடையே நின்ற நகார ஒற்று அடைவதும் - வருமொழி முதல் வந்த ஒற்றாய்த் திரிதலும் இனமும் கெடும் - அதற்கு இனமாய்த் திரிதலும் கெடுதலும் இம் மூன்றினாலும் முடியும் என்றவாறு .