நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 113 187. எண்ணுப் பெயர்கட்குச் சிறப்புவிதி எண்ணிறை யளவும் பிற மெய்தின் ஒன்று முதலெட் மறா மெண்ணுள் முதலி ரெண்முத னீளு மூன்றா றேழ்குறு கும்மா றேழல் லவற்றின் ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும் ஏகு மேற்புழி யென்மனார் புலவர். சூ-ம், எண்பெயருடனே எண்ணாதி நாற்பெயரும் புணருமாறு கூறி யது. (இ-ள்) எண்ணிறை யளவும் பிறவும் - எண்ணுப்பெயரும் நிறைப் பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும், எய்தின் - இந்நால்வகைப் பெயரும் வருமொழியாக வரில், ஒன்று முதல் எட்டீறாம் - ஒன்று முதலாக எட்டீறாக, எண்ணுள் - நின்ற எண் வகை எண்களுக்கு, முதலீ ரெண் - முதற்கணின்ற ஒன்றென்னும் எண்ணும் இரண்டென்னு மெண் ணும், முதனீளும் - இவ்விரண்டெண்ணும் முதலுயீர் நீளும், மூன்றா றேழ் குறுகும் - மூன்று ஆறு ஏழு என்னும் இம்மூன்றெண்ணும் முதலு யிர் குறுகும், ஆறேழல்லவற்றின் - ஆறும் ஏழும் ஒழிந்த எண்களி னின்ற, ஈற்றுயிர்மெய்யும் - ஈற்றுயிர்மெய்யும் கெடும், ஏழனுயிரும் ஏகும் - ஏழென்னும் எண்ணின் ஈற்றினின்ற உயிரும் கெடும், ஏற்புழி என்மனார் புலவர் - ஏற்றுமிடத்தென்று சொல்லுவர் அறிவுடையோர் என்றவாறு. உ-ம்: ஓரொன்று, ஓரிடை, ஒருழக்கு, ஓர் யாண்டு, ஈரொன்று, ஈரிடை, ஈருழக் ஈரிலையென முதல் ஈரெண் முதல் நீண்டன. முப்பது, முக்கழஞ்சு, முக்கலம், முப்பழம் எனவும்; அறுபது, அறுகழஞ்சு, அறுகலம், அறுமீன் எனவும்; எழுபது, எழு கழஞ்சு, எழுகலம், எழுபிறப்பு எனவும் மூன்று, ஆறு, ஏழ் குறு கின. ஒன், இரண், மூன், நாண், ஐந், எட் என ஆறேழ் அல்ல வற்றின் ஈற்றுயிர்மெய் கெட்டன. ஏழ் என ஏழு என்னும் எண் ணின் ஈற்றுயிரும் ஏகிற்று. இதனுள் “எண்ணிறை யளவும் பிறவும்” என்பதனை மேல்வரும் ஐந்து சூத்திரத்தோடும் கூட்டுக. “ஏற்புழி” என்பதனை இப் பொருண்மை அதிகாரம் முற்றும் எடுத்துக்கொள்க. (37) 188. ஒன்றன் புள்ளி ரகர மாக இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 113 187 . எண்ணுப் பெயர்கட்குச் சிறப்புவிதி எண்ணிறை யளவும் பிற மெய்தின் ஒன்று முதலெட் மறா மெண்ணுள் முதலி ரெண்முத னீளு மூன்றா றேழ்குறு கும்மா றேழல் லவற்றின் ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும் ஏகு மேற்புழி யென்மனார் புலவர் . சூ - ம் எண்பெயருடனே எண்ணாதி நாற்பெயரும் புணருமாறு கூறி யது . ( - ள் ) எண்ணிறை யளவும் பிறவும் - எண்ணுப்பெயரும் நிறைப் பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் எய்தின் - இந்நால்வகைப் பெயரும் வருமொழியாக வரில் ஒன்று முதல் எட்டீறாம் - ஒன்று முதலாக எட்டீறாக எண்ணுள் - நின்ற எண் வகை எண்களுக்கு முதலீ ரெண் - முதற்கணின்ற ஒன்றென்னும் எண்ணும் இரண்டென்னு மெண் ணும் முதனீளும் - இவ்விரண்டெண்ணும் முதலுயீர் நீளும் மூன்றா றேழ் குறுகும் - மூன்று ஆறு ஏழு என்னும் இம்மூன்றெண்ணும் முதலு யிர் குறுகும் ஆறேழல்லவற்றின் - ஆறும் ஏழும் ஒழிந்த எண்களி னின்ற ஈற்றுயிர்மெய்யும் - ஈற்றுயிர்மெய்யும் கெடும் ஏழனுயிரும் ஏகும் - ஏழென்னும் எண்ணின் ஈற்றினின்ற உயிரும் கெடும் ஏற்புழி என்மனார் புலவர் - ஏற்றுமிடத்தென்று சொல்லுவர் அறிவுடையோர் என்றவாறு . - ம் : ஓரொன்று ஓரிடை ஒருழக்கு ஓர் யாண்டு ஈரொன்று ஈரிடை ஈருழக் ஈரிலையென முதல் ஈரெண் முதல் நீண்டன . முப்பது முக்கழஞ்சு முக்கலம் முப்பழம் எனவும் ; அறுபது அறுகழஞ்சு அறுகலம் அறுமீன் எனவும் ; எழுபது எழு கழஞ்சு எழுகலம் எழுபிறப்பு எனவும் மூன்று ஆறு ஏழ் குறு கின . ஒன் இரண் மூன் நாண் ஐந் எட் என ஆறேழ் அல்ல வற்றின் ஈற்றுயிர்மெய் கெட்டன . ஏழ் என ஏழு என்னும் எண் ணின் ஈற்றுயிரும் ஏகிற்று . இதனுள் எண்ணிறை யளவும் பிறவும் என்பதனை மேல்வரும் ஐந்து சூத்திரத்தோடும் கூட்டுக . ஏற்புழி என்பதனை இப் பொருண்மை அதிகாரம் முற்றும் எடுத்துக்கொள்க . ( 37 ) 188. ஒன்றன் புள்ளி ரகர மாக இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே .