நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 109 சூ-ம், ஈகாரவீற்றிற்கு எய்தியது விலக்கலும் எய்தாதது எய்துவித்த லும் கூறியது. (இ-ள்) பவ்வீ நீ மீ முன்னர் - இடக்கர்ப் பெயராகிய பகரத்தோடு கூடி நின்ற ஈகாரவீற்றுப் பெயர் முன்னரும் நீயென்னும் முன்னிலைப் பெயர் முன்னரும் மீயென்னும் பெயர் முன்னரும், அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, இயல்பாம் - வருமொழிமுதல் வல்லினம் வந்தால் மிகாது இயல்பாய் முடியும், வலிமெலி மிகலுமாமீக்கே - மீ யென்னும் சொல் முன்னர் ஒரோவிடத்து வல்லெழுத்து மெல்லெழுத்து மிகவும் பெறும் என்றவாறு. உ-ம்: பீ குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; நீ குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும்; மீகண், செவி, தலை, புறம் எனவும் இயல்பாயின. மீக்கோள், மீப்பாய், மீங்குழி, மீந்தோல் என வலி மெலி மிக்கன. மீகண் என்பது மேலிடத்துக்கண். இது வேற்றுமைப் புணர்ச்சி எனினும் இயல்பு பற்றி உடன் கூறி னார். (28) முற்றுகரவீற்றுச் சிறப்புவிதி 179. மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ றாகு முகர முன்ன ரியல்பாம் அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின் சூ-ம், முற்றுகரத்திற்கு எய்தியது விலக்கலும் பிறிது விதி வகுத் தலும் கூறியது. (இ-ள்) மூன்றாறுருபு - மூன்றாம் வேற்றுமை ஒடுவென்னும் உரு பின் முன்னரும் ஆறாம் வேற்றுமை அறுவென்னும் ஒருமையுருபின் முன்னரும், எண் - முற்றுகரமாய் வந்த எண்ணுப் பெயர் முன்னரும், வினைத்தொகை - உகரவீறாய் வந்த வினைத்தொகைச் சொல் முன்ன ரும், சுட்டீறாகும் உகரமுன்னர் - சுட்டுச் சொல் ஈற்றினின்ற உகரத் தின் முன்னரும், இயல்பாம் - வருமொழிமுதல் வல்லினம் வந்தால் மிகாது இயல்பாய் முடியும், அதுமுன் வருமன்று - அதுவென்னும் சுட்டின் முன் வந்த அன்றென்னும் மறைமொழி, ஆன்றாந் தூக்கின் - செய்யுளிடத்து வந்தால் முதனீளும் என்றவாறு. உ-ம்: சாத்தனொடு கொண்டான், சென்றான், தந்தான், போயி னான் எனவும்; சாத்தனது கை, செவி, தலை, புறம் எனவும்; ஒரு காசு, சின்னம் , தலை, பகல், இரு கண், எழு கண், எழு கடல், அறு கலம் எனவும்; அடு களிறு, சேனை, தானை, படை எனவும்; அது, இது, உது குறிது, சிறிது, தீது, பெரிது எனவும் முறையே இயல்பாயின. அதான்று என வருமொழி முதல் ஆகாரம் நீண்டது. (29)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 109 சூ - ம் ஈகாரவீற்றிற்கு எய்தியது விலக்கலும் எய்தாதது எய்துவித்த லும் கூறியது . ( - ள் ) பவ்வீ நீ மீ முன்னர் - இடக்கர்ப் பெயராகிய பகரத்தோடு கூடி நின்ற ஈகாரவீற்றுப் பெயர் முன்னரும் நீயென்னும் முன்னிலைப் பெயர் முன்னரும் மீயென்னும் பெயர் முன்னரும் அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே இயல்பாம் - வருமொழிமுதல் வல்லினம் வந்தால் மிகாது இயல்பாய் முடியும் வலிமெலி மிகலுமாமீக்கே - மீ யென்னும் சொல் முன்னர் ஒரோவிடத்து வல்லெழுத்து மெல்லெழுத்து மிகவும் பெறும் என்றவாறு . - ம் : பீ குறிது சிறிது தீது பெரிது எனவும் ; நீ குறியை சிறியை தீயை பெரியை எனவும் ; மீகண் செவி தலை புறம் எனவும் இயல்பாயின . மீக்கோள் மீப்பாய் மீங்குழி மீந்தோல் என வலி மெலி மிக்கன . மீகண் என்பது மேலிடத்துக்கண் . இது வேற்றுமைப் புணர்ச்சி எனினும் இயல்பு பற்றி உடன் கூறி னார் . ( 28 ) முற்றுகரவீற்றுச் சிறப்புவிதி 179. மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ றாகு முகர முன்ன ரியல்பாம் அதுமுன் வருமன் றான்றாந் தூக்கின் சூ - ம் முற்றுகரத்திற்கு எய்தியது விலக்கலும் பிறிது விதி வகுத் தலும் கூறியது . ( - ள் ) மூன்றாறுருபு - மூன்றாம் வேற்றுமை ஒடுவென்னும் உரு பின் முன்னரும் ஆறாம் வேற்றுமை அறுவென்னும் ஒருமையுருபின் முன்னரும் எண் - முற்றுகரமாய் வந்த எண்ணுப் பெயர் முன்னரும் வினைத்தொகை - உகரவீறாய் வந்த வினைத்தொகைச் சொல் முன்ன ரும் சுட்டீறாகும் உகரமுன்னர் - சுட்டுச் சொல் ஈற்றினின்ற உகரத் தின் முன்னரும் இயல்பாம் - வருமொழிமுதல் வல்லினம் வந்தால் மிகாது இயல்பாய் முடியும் அதுமுன் வருமன்று - அதுவென்னும் சுட்டின் முன் வந்த அன்றென்னும் மறைமொழி ஆன்றாந் தூக்கின் - செய்யுளிடத்து வந்தால் முதனீளும் என்றவாறு . - ம் : சாத்தனொடு கொண்டான் சென்றான் தந்தான் போயி னான் எனவும் ; சாத்தனது கை செவி தலை புறம் எனவும் ; ஒரு காசு சின்னம் தலை பகல் இரு கண் எழு கண் எழு கடல் அறு கலம் எனவும் ; அடு களிறு சேனை தானை படை எனவும் ; அது இது உது குறிது சிறிது தீது பெரிது எனவும் முறையே இயல்பாயின . அதான்று என வருமொழி முதல் ஆகாரம் நீண்டது . ( 29 )