நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

108) எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் இகர ஐகாரவீற்றுச் சிறப்புவிதி 176. அல்வழி இ ஐ முன்ன ராயின் இயல்பு மிகலும் விகற்பமு மாகும். - சூ-ம், எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமற் காத் தலும் கூறியது. (இ-ள்) அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, இ ஐ முன்னராயின் - இகர ஐகாரத்தின் முன்னே வருமொழி வல்லெழுத்து வந்ததாயின், இயல்புமிகலும் - இயல்பாய் முடிதலும் மிக்கு முடி தலும், விகற்பமுமாகும் - ஒன்றற்கே ஒருகால் மிக்கும் மிகாதும் வரு வனவாம் என்றவாறு. உ-ம்: பருத்தி, பொதி, யானை, குதிரை குறிது, சிறிது, தீது, பெரிது என இயல்பாயின. “ஆடித்திங்கள்” (சிலம்பு. கட்டுரை. 133), அலிக்கொற்றன் எனவும்; சித்திரைத் திங்கள் (சிலம்பு. இந்திர. 64), புலைக்கொற்றன் எனவும் மிக்கு முடிந்தன. கிளிகுறிது, கிளிக்குறிது எனவும் தினைகுறிது, தினைக்குறிது எனவும் உறழ்ந்து வந்தன. பிறவுமன்ன, மிகுதி இறந்துபடாமற்கு ஈண்டுக் கூறினாரென்க. (26) ஈகாரவீற்றுச் சிறப்புவிதி 177. ஆமுன் பகரவி யனைத்தும்வரக் குறுகும் மேலன வல்வழி யியல்பா கும்மே. சூ-ம், ஈகாரவீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறியது. (இ-ள்) ஆமுன் பகரவீ - ஆவென்னும் பெயரீற்று நின்ற பகரவீகாரம், அனைத்தும் வரக் குறுகும் - இருவழியும் நாற்கணத்தோடும் புணரு மிடத்துக் குறுகும், மேலன - அங்ஙனம் குறுகி நின்ற ஈகாரத்தின் மேலே வரும் வல்லினம், அல்வழி - அல்வழிப் பொருட்புணர்ச்சிக் கண்ணே, இயல்பாகும்மே - மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு. உ-ம்: ஆப்பியரிது, குளிரும், நன்று, வலிது எனவும்; ஆப்பி யருமை, குளிர்ச்சி, நன்மை, வன்மை எனவும் இரு வழியும் குறுகின. ஆப்பி குறிது, சிறிது, தீது, பெரிது என இயல் பாயின. ஆப்பிப்புழு என வேற்றுமைக்கண் மிக்கது. (27) 178. பவ்வீ நீமீ முன்ன ரல்வழி இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே.
108 ) எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் இகர ஐகாரவீற்றுச் சிறப்புவிதி 176. அல்வழி முன்ன ராயின் இயல்பு மிகலும் விகற்பமு மாகும் . - சூ - ம் எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமற் காத் தலும் கூறியது . ( - ள் ) அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே முன்னராயின் - இகர ஐகாரத்தின் முன்னே வருமொழி வல்லெழுத்து வந்ததாயின் இயல்புமிகலும் - இயல்பாய் முடிதலும் மிக்கு முடி தலும் விகற்பமுமாகும் - ஒன்றற்கே ஒருகால் மிக்கும் மிகாதும் வரு வனவாம் என்றவாறு . - ம் : பருத்தி பொதி யானை குதிரை குறிது சிறிது தீது பெரிது என இயல்பாயின . ஆடித்திங்கள் ( சிலம்பு . கட்டுரை . 133 ) அலிக்கொற்றன் எனவும் ; சித்திரைத் திங்கள் ( சிலம்பு . இந்திர . 64 ) புலைக்கொற்றன் எனவும் மிக்கு முடிந்தன . கிளிகுறிது கிளிக்குறிது எனவும் தினைகுறிது தினைக்குறிது எனவும் உறழ்ந்து வந்தன . பிறவுமன்ன மிகுதி இறந்துபடாமற்கு ஈண்டுக் கூறினாரென்க . ( 26 ) ஈகாரவீற்றுச் சிறப்புவிதி 177. ஆமுன் பகரவி யனைத்தும்வரக் குறுகும் மேலன வல்வழி யியல்பா கும்மே . சூ - ம் ஈகாரவீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறியது . ( - ள் ) ஆமுன் பகரவீ - ஆவென்னும் பெயரீற்று நின்ற பகரவீகாரம் அனைத்தும் வரக் குறுகும் - இருவழியும் நாற்கணத்தோடும் புணரு மிடத்துக் குறுகும் மேலன - அங்ஙனம் குறுகி நின்ற ஈகாரத்தின் மேலே வரும் வல்லினம் அல்வழி - அல்வழிப் பொருட்புணர்ச்சிக் கண்ணே இயல்பாகும்மே - மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு . - ம் : ஆப்பியரிது குளிரும் நன்று வலிது எனவும் ; ஆப்பி யருமை குளிர்ச்சி நன்மை வன்மை எனவும் இரு வழியும் குறுகின . ஆப்பி குறிது சிறிது தீது பெரிது என இயல் பாயின . ஆப்பிப்புழு என வேற்றுமைக்கண் மிக்கது . ( 27 ) 178. பவ்வீ நீமீ முன்ன ரல்வழி இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே .