நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 107 இறுதிக்கண் நின்ற இகரம், தொடர்பினுள் உகரமாய் செய்யு ளுள்ளே உகரமாகியும் வரப்பெறும், வரின் இயல்பே - அவ்வழி வந்த விடத்து மேல்வரும் வல்லின மகரம் இயல்பாய் முடியும் என்றவாறு. உ-ம்: “வாளன்று பிடியா வன்க ணாடவர்'', “நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்" (புறம்.124) எனவும் இது முற்றியலிகரம் குற்றியலிகரமாய் நின்றது. “உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யோனே” எனவும் வரும். (23) 174. உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட மருவும் டகர முரியின் வழியே யகர வுயிர் மெய்யா மேற்பன வரினே. சூ-ம், முதலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியும் ஏனையதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதியும் கூறியது. (இ-ள்) உரி வரின் - உரியென்னும் அளவுச் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நாழியின் ஈற்றுயிர்மெய் கெட - நாழியென்னும் அள வுப் பெயரீற்று நின்ற உயிர்மெய் கெட, மருவும் டகரம் - அவ்விடத்து, டகரவொற்று வரும், உரியின் வழியே - உரியென்னும் அளவுப் பெயர் முன், யகர உயிர்மெய்யாம் - யகர உயிர்மெய் தோன்றி நிற்கும், ஏற் பன வரினே - ஏற்ற மொழிகள் வருமொழியாக வந்தவிடத்து என்ற வாறு. உ-ம்: நாடுரி எனவும், உரிய உப்பு, கொள்ளா, சாமை, தினை, பயறு, மிளகு, வரகு எனவும் ஒட்டுக. “ஏற்பன” என்றதனால் உரியரிசி, உரியாழாக்கு, உரியெண்ணெய் முத லானவற்றில் யகர உயிர்மெய் மிகாதெனக் கொள்க. (24) 175. சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும். சூ-ம், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறியது. (இ-ள்) சுவைப்புளி முன் - மரமல்லாத சுவைப்புளி முன்னர் வல் லெழுத்து வந்தால், இன மென்மையும் தோன்றும் - அதற்கினமான மெல்லெழுத்துக்களும் மிகப்பெறும் என்றவாறு. உ-ம்: புளிங்கறி, சோறு, தயிர், பாளிதம் என ஒட்டுக. உம்மையால் பொதுவிதியான் வந்த வல்லெழுத்துப் பேறும் கொள்க. (25)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 107 இறுதிக்கண் நின்ற இகரம் தொடர்பினுள் உகரமாய் செய்யு ளுள்ளே உகரமாகியும் வரப்பெறும் வரின் இயல்பே - அவ்வழி வந்த விடத்து மேல்வரும் வல்லின மகரம் இயல்பாய் முடியும் என்றவாறு . - ம் : வாளன்று பிடியா வன்க ணாடவர் ' ' நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் ( புறம் .124 ) எனவும் இது முற்றியலிகரம் குற்றியலிகரமாய் நின்றது . உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யோனே எனவும் வரும் . ( 23 ) 174. உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட மருவும் டகர முரியின் வழியே யகர வுயிர் மெய்யா மேற்பன வரினே . சூ - ம் முதலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதியும் ஏனையதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதியும் கூறியது . ( - ள் ) உரி வரின் - உரியென்னும் அளவுச் சொல் வருமொழியாய் வருங்காலத்து நாழியின் ஈற்றுயிர்மெய் கெட - நாழியென்னும் அள வுப் பெயரீற்று நின்ற உயிர்மெய் கெட மருவும் டகரம் - அவ்விடத்து டகரவொற்று வரும் உரியின் வழியே - உரியென்னும் அளவுப் பெயர் முன் யகர உயிர்மெய்யாம் - யகர உயிர்மெய் தோன்றி நிற்கும் ஏற் பன வரினே - ஏற்ற மொழிகள் வருமொழியாக வந்தவிடத்து என்ற வாறு . - ம் : நாடுரி எனவும் உரிய உப்பு கொள்ளா சாமை தினை பயறு மிளகு வரகு எனவும் ஒட்டுக . ஏற்பன என்றதனால் உரியரிசி உரியாழாக்கு உரியெண்ணெய் முத லானவற்றில் யகர உயிர்மெய் மிகாதெனக் கொள்க . ( 24 ) 175. சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும் . சூ - ம் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறியது . ( - ள் ) சுவைப்புளி முன் - மரமல்லாத சுவைப்புளி முன்னர் வல் லெழுத்து வந்தால் இன மென்மையும் தோன்றும் - அதற்கினமான மெல்லெழுத்துக்களும் மிகப்பெறும் என்றவாறு . - ம் : புளிங்கறி சோறு தயிர் பாளிதம் என ஒட்டுக . உம்மையால் பொதுவிதியான் வந்த வல்லெழுத்துப் பேறும் கொள்க . ( 25 )