நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

106 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் ஏவல்வினையைக் கருதி வரும் எதிர்முகமாக்கும் சொல்லினைச் சேர்ந்த மியாவென்னும் உரையசை இடைச்சொல்லும், முற்று - அஃ றிணைப் பன்மைப் பொருளையுணர்த்தும் ஆகாரவீற்று எதிர் மறை முற்றுவினைச் சொல்லும், முன் மிகா - இச்சொற்களின் முன் வல்லி னம் இயல்பாய் முடியும் என்றவாறு. உ-ம்: ஆ குறிது, மா குறிது, சிறிது, தீது, பெரிது, குறிய, சிறிய, தீய, பெரிய என ஒட்டி இயல்பாயினவாறு காண்க. கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா என ஒட்டி இயல் பாயினவாறு காண்க. உண்ணா, தின்னா குதிரை, செந்நாய், தகர், பன்றி என இயல்பாயினவாறு காண்க. ஆமா என்பதனை ஒரு சொல்லாக வைத்து முடிப்பினுமாம். ஆமா வென்பது காட்டா. ஆமா குறிது, சிறிது, தீது, பெரிது, குறிய, சிறிய, பெரிய என ஒட்டுக. (21) 172. குறியதன் கீழாக் குறுகலு மதனோ டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின். சூ-ம், ஆகாரவீற்றுள் சிலவற்றிற்குச் செய்யுள் முடிவு கூறியது. (இ-ள்) குறியதன் கீழாக் குறுகலும் - குற்றெழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்திரையிலே ஒரு மாத்திரை கெட்டு அது அகரமாய் நிற்றலும், அதனோடுகர மேற்றலும், - அந்த அகரத் துடனே இறுதியுகரம் வருதலும், இயல்புமாம் - இவ்விரண்டு விதிய மின்றி இயல்பாதலும், தூக்கின் - இம்மூவிதியும் செய்யுளிடத்து உரித்தாம் என்றவாறு. உ-ம்: “சுறமறிவன துறையெல்லாம்”, “நிலவிரி கானல்வாய்" எனவும் “இறவுப் புறத்தன்ன” (நற்.19), “சுறவுக் கோட் டன்ன” (நற்.19), “நிலாச் சுறவினும் பொன் போன்றன”, “நிலாவணங்கு மென்மணன்மே னின்று” என முறையே காண்க. ஈண்டு இயல்பு ஐயமறுத்தற்கு உரைத்தார். (22) இகரவீற்றுச் சிறப்புவிதி 173. அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே. சூ-ம், ஈகாரவீற்றுள் சில சொற்களுக்குச் செய்யுள் முடிவு கூறியது. (இ-ள்) அன்றி இன்றியென் - அன்றியென்றும் இன்றியென்றும் சொல்லப்படும், வினையெஞ்சிகரம் - வினையெச்சக் குறிப்பின்
106 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் ஏவல்வினையைக் கருதி வரும் எதிர்முகமாக்கும் சொல்லினைச் சேர்ந்த மியாவென்னும் உரையசை இடைச்சொல்லும் முற்று - அஃ றிணைப் பன்மைப் பொருளையுணர்த்தும் ஆகாரவீற்று எதிர் மறை முற்றுவினைச் சொல்லும் முன் மிகா - இச்சொற்களின் முன் வல்லி னம் இயல்பாய் முடியும் என்றவாறு . - ம் : குறிது மா குறிது சிறிது தீது பெரிது குறிய சிறிய தீய பெரிய என ஒட்டி இயல்பாயினவாறு காண்க . கேண்மியா கொற்றா சாத்தா தேவா பூதா என ஒட்டி இயல் பாயினவாறு காண்க . உண்ணா தின்னா குதிரை செந்நாய் தகர் பன்றி என இயல்பாயினவாறு காண்க . ஆமா என்பதனை ஒரு சொல்லாக வைத்து முடிப்பினுமாம் . ஆமா வென்பது காட்டா . ஆமா குறிது சிறிது தீது பெரிது குறிய சிறிய பெரிய என ஒட்டுக . ( 21 ) 172. குறியதன் கீழாக் குறுகலு மதனோ டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின் . சூ - ம் ஆகாரவீற்றுள் சிலவற்றிற்குச் செய்யுள் முடிவு கூறியது . ( - ள் ) குறியதன் கீழாக் குறுகலும் - குற்றெழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்திரையிலே ஒரு மாத்திரை கெட்டு அது அகரமாய் நிற்றலும் அதனோடுகர மேற்றலும் - அந்த அகரத் துடனே இறுதியுகரம் வருதலும் இயல்புமாம் - இவ்விரண்டு விதிய மின்றி இயல்பாதலும் தூக்கின் - இம்மூவிதியும் செய்யுளிடத்து உரித்தாம் என்றவாறு . - ம் : சுறமறிவன துறையெல்லாம் நிலவிரி கானல்வாய் எனவும் இறவுப் புறத்தன்ன ( நற் .19 ) சுறவுக் கோட் டன்ன ( நற் .19 ) நிலாச் சுறவினும் பொன் போன்றன நிலாவணங்கு மென்மணன்மே னின்று என முறையே காண்க . ஈண்டு இயல்பு ஐயமறுத்தற்கு உரைத்தார் . ( 22 ) இகரவீற்றுச் சிறப்புவிதி 173. அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே . சூ - ம் ஈகாரவீற்றுள் சில சொற்களுக்குச் செய்யுள் முடிவு கூறியது . ( - ள் ) அன்றி இன்றியென் - அன்றியென்றும் இன்றியென்றும் சொல்லப்படும் வினையெஞ்சிகரம் - வினையெச்சக் குறிப்பின்