நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

102 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் ஏஎக் கொற்றா, ஓஒக் கொற்றா என ஒகர ஈற்று முன்னிலை யிடைச்சொல் மிக்கது காண்க. தில்லைச்சொல், கொன்னைச் சொல்லென ஐகாரவீற்று இடைச்சொல் மிகக் காண்க. தடக்கை, தவக் கொண்டான், வயக்களிறு, குழக்கன்று எனவும் இயல்பாகா உரிச்சொல்லீற்று முன் மிக்கன. உசா, வயா என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வருவித்து இயல்பாய் நின்ற ஆகாரவீற்றுப் பதமுன் மிக்கவாறு காண்க. கடிக்கமலம், செண்பகம், தாமரை, பங்கயம் என இகர வீற்றுப் பதமுன் மிக்கன. தீக் கதி, சிறை, தொழில், புலன் என ஈகாரவீற்று உரிப்பத முன் மிக்கன . அதிர்ப்பு என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வும் வருவித்து உகரவீற்றுப் பதமுன் இருவழியும் மிக்கவாறு காண்க. பணைத்தோள் என ஐகாரவிற்றுப் பதமுன் மிக்கது. வட்டக்கடல், சுனை, தாழி, பானை என ஈற்று மகாரம் கெட்டு விதியகரவீற்றுப் பெயராய் இவை முன் வந்த வல்லினம் மிக்கன. தாழக்கோல், தமிழ்ப் பல்லவதரையர் என ஈற்று மெய்மேல் அகரச் சாரியை பெற்று விதி அகரவீற்றுப் பெயராய் அவற்றின் முன் இரு வழியும் அடைவே மிக்கன. இயல்புயிரும் விதியுயிரும் இவ்வாறே. ஒழிந்த வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொற்கும் அறிந்து முடிக்க. ஊர்வழிக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என இகர வீற்றுருபுப் பதமுன் மிக்கன. ஊர்க்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என உகரவீற்றுருபுப் பதமுன் மிக்கன. யானையைக் காத்தான், செகுத்தான், தடுத்தான், பிடித்தான் என ஐகாரவீற்று ருபுப் பதமுன் மிக்கன. ஈண்டுக் காட்டாதனவும் வந்த வழிக் கண்டு இதுவே நிலனாக முடித்துக் கொள்க. இதனுள் “மன்னே”யென்ற மிகையானே விதவாதவற்றுள்ளும் சிறுபான்மை மிகாதனவும் உளவெனக் கொள்க. அவை குண கடல், குடகடல், வடதலை, மழகளிறு, குழவிகை, ஏரிகரை, மீகண், “மலை கிழவோனே” (திருமுருகு.317), குழந்தை கை, என்னை காணுமாதோ என வருவனவும் எல்லாம் இதுவே விதியாக முடிக்க. (15) 166. மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து வரப்பெறு நவுமுள வேற்றுமை வழியே. சூ-ம், உயிரீற்று மரப்பெயர்கட்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறி யது. (இ-ள்) மரப் பெயர் முன்னர் - உயிரீற்று மரப்பெயர்கண்முன், இன மெல்லெழுத்து - மேலைப் பொதுவிதியால் இரு வழியும் வல்
102 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் ஏஎக் கொற்றா ஓஒக் கொற்றா என ஒகர ஈற்று முன்னிலை யிடைச்சொல் மிக்கது காண்க . தில்லைச்சொல் கொன்னைச் சொல்லென ஐகாரவீற்று இடைச்சொல் மிகக் காண்க . தடக்கை தவக் கொண்டான் வயக்களிறு குழக்கன்று எனவும் இயல்பாகா உரிச்சொல்லீற்று முன் மிக்கன . உசா வயா என நிறுத்தி கடிது சிறிது தீது பெரிது எனவும் கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வருவித்து இயல்பாய் நின்ற ஆகாரவீற்றுப் பதமுன் மிக்கவாறு காண்க . கடிக்கமலம் செண்பகம் தாமரை பங்கயம் என இகர வீற்றுப் பதமுன் மிக்கன . தீக் கதி சிறை தொழில் புலன் என ஈகாரவீற்று உரிப்பத முன் மிக்கன . அதிர்ப்பு என நிறுத்தி கடிது சிறிது தீது பெரிது எனவும் கடுமை சிறுமை தீமை பெருமை என வும் வருவித்து உகரவீற்றுப் பதமுன் இருவழியும் மிக்கவாறு காண்க . பணைத்தோள் என ஐகாரவிற்றுப் பதமுன் மிக்கது . வட்டக்கடல் சுனை தாழி பானை என ஈற்று மகாரம் கெட்டு விதியகரவீற்றுப் பெயராய் இவை முன் வந்த வல்லினம் மிக்கன . தாழக்கோல் தமிழ்ப் பல்லவதரையர் என ஈற்று மெய்மேல் அகரச் சாரியை பெற்று விதி அகரவீற்றுப் பெயராய் அவற்றின் முன் இரு வழியும் அடைவே மிக்கன . இயல்புயிரும் விதியுயிரும் இவ்வாறே . ஒழிந்த வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொற்கும் அறிந்து முடிக்க . ஊர்வழிக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என இகர வீற்றுருபுப் பதமுன் மிக்கன . ஊர்க்குக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என உகரவீற்றுருபுப் பதமுன் மிக்கன . யானையைக் காத்தான் செகுத்தான் தடுத்தான் பிடித்தான் என ஐகாரவீற்று ருபுப் பதமுன் மிக்கன . ஈண்டுக் காட்டாதனவும் வந்த வழிக் கண்டு இதுவே நிலனாக முடித்துக் கொள்க . இதனுள் மன்னே யென்ற மிகையானே விதவாதவற்றுள்ளும் சிறுபான்மை மிகாதனவும் உளவெனக் கொள்க . அவை குண கடல் குடகடல் வடதலை மழகளிறு குழவிகை ஏரிகரை மீகண் மலை கிழவோனே ( திருமுருகு .317 ) குழந்தை கை என்னை காணுமாதோ என வருவனவும் எல்லாம் இதுவே விதியாக முடிக்க . ( 15 ) 166. மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து வரப்பெறு நவுமுள வேற்றுமை வழியே . சூ - ம் உயிரீற்று மரப்பெயர்கட்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறி யது . ( - ள் ) மரப் பெயர் முன்னர் - உயிரீற்று மரப்பெயர்கண்முன் இன மெல்லெழுத்து - மேலைப் பொதுவிதியால் இரு வழியும் வல்