நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 101 தனக்குப் பற்றுக்கோடாகிய மெய் நிற்கத் தான் கெடும், யவ்வரின் - வருமொழி முதலாக யகரம் வந்தால், இய்யாம் - நிலைமொழி ஈற்றிற் குற்றியலுகரம் இகரமாய்த் திரியும், முற்றுமற்று - முற்றியலுகரமும் அத்தன்மைத்தாம், ஒரோ வழி - ஒரோ இடங்களில் என்றவாறு. உ-ம்: நாகழகிது, நாகியாது எனவும்; நாகின் வளர்ச்சி, நாகி யமன் கொள்ளான் எனவும்; அதழகு, இதழகு, தரவு, தெருவு, கதவு, புதவு, இழவு, விழவு, வரவு, செலவு, உணர்வு, புணர்வு, நோவு, நுகர்வு, அழகிது, யாது எனவும் வரும்.(14) உயிரீற்று முன் வல்லினம் 165. இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் க ச த ப மிகும்வித வாதன மன்னே. சூ-ம், உயிரீற்றின் முன் வல்லினம் புணருமாறு கூறியது. (இ-ள்) இயல்பினும் விதியினும் - இயல்பினாலும் ஆக்கப் பாட்டினா லும், நின்ற உயிர் முன் - நிலைமொழி ஈறாக நின்ற உயிர் முன், க சத பமிகும் - வருமொழி முதலாக வந்த கசதபக்கள் மிக்கு முடியும், வித வாதன மன்னே - பெரும்பாலும் எடுத்து விரிக்கப்படாத சொற்களுக் கெல்லாம் என்றவாறு. உ-ம்: மக, விள, நுண், அத, மூங்கா, தாரா, யா, கிளி, புலி, நரி, ஈ, தீ, கடு, தழு, கொண்மூ, ஏஎ, சே, சோ, கோ, கௌ, கொக்கு என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது எனவும்; கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வருவித்து இயல்பாக நிற்கும் உயிரீற்றுப்பெயர்ப் பதமுன் இருவழியும் மிக்கவாறு காண்க. யானைக்கால், யானைச்செவி, யானைத்தலை, யானைப் புறம் என ஐகாரவீற்றுப் பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மிக்கன. உண், தா, சால், உண்ணா, தின்னா, ஓடி, ஆடி, பாடி, தழீஇ, நிறீஇ, அடித்து, பிடித்து, உண்ணு, ஒல்லை, வல்லை என நிறுத்தி, கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வருவித்து இயல்பாய் நின்ற உயிரீற்று வினையெச்சத்தின் முன் வந்த வல்லினம் மிக்கவாறு காண்க. உண்ணா தின்னா என நிறுத்தி, சாத்தன், கொற்றன், தேவன், பூதன் என வருவித்து ஆகாரவீற்று எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிக்கவாறு காண்க. நொ, து என நிறுத்தி கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வருவித்து இவ்விரண்டீற்று வினைச்சொல் முன் வல்லினம் மிக்கவாறு காண்க. கொள்ளோ, ஆங்க, புலி போல், மூவினமெனா, தனி நிலையெனா, அணி பெற்று என நிறுத்தி, கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வருவித்து உயிர் ஈற்று இடைப்பதமுன் மி ாறு காண்க.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 101 தனக்குப் பற்றுக்கோடாகிய மெய் நிற்கத் தான் கெடும் யவ்வரின் - வருமொழி முதலாக யகரம் வந்தால் இய்யாம் - நிலைமொழி ஈற்றிற் குற்றியலுகரம் இகரமாய்த் திரியும் முற்றுமற்று - முற்றியலுகரமும் அத்தன்மைத்தாம் ஒரோ வழி - ஒரோ இடங்களில் என்றவாறு . - ம் : நாகழகிது நாகியாது எனவும் ; நாகின் வளர்ச்சி நாகி யமன் கொள்ளான் எனவும் ; அதழகு இதழகு தரவு தெருவு கதவு புதவு இழவு விழவு வரவு செலவு உணர்வு புணர்வு நோவு நுகர்வு அழகிது யாது எனவும் வரும் . ( 14 ) உயிரீற்று முன் வல்லினம் 165. இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன் மிகும்வித வாதன மன்னே . சூ - ம் உயிரீற்றின் முன் வல்லினம் புணருமாறு கூறியது . ( - ள் ) இயல்பினும் விதியினும் - இயல்பினாலும் ஆக்கப் பாட்டினா லும் நின்ற உயிர் முன் - நிலைமொழி ஈறாக நின்ற உயிர் முன் சத பமிகும் - வருமொழி முதலாக வந்த கசதபக்கள் மிக்கு முடியும் வித வாதன மன்னே - பெரும்பாலும் எடுத்து விரிக்கப்படாத சொற்களுக் கெல்லாம் என்றவாறு . - ம் : மக விள நுண் அத மூங்கா தாரா யா கிளி புலி நரி தீ கடு தழு கொண்மூ ஏஎ சே சோ கோ கௌ கொக்கு என நிறுத்தி கடிது சிறிது தீது பெரிது எனவும் ; கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வருவித்து இயல்பாக நிற்கும் உயிரீற்றுப்பெயர்ப் பதமுன் இருவழியும் மிக்கவாறு காண்க . யானைக்கால் யானைச்செவி யானைத்தலை யானைப் புறம் என ஐகாரவீற்றுப் பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மிக்கன . உண் தா சால் உண்ணா தின்னா ஓடி ஆடி பாடி தழீஇ நிறீஇ அடித்து பிடித்து உண்ணு ஒல்லை வல்லை என நிறுத்தி கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வருவித்து இயல்பாய் நின்ற உயிரீற்று வினையெச்சத்தின் முன் வந்த வல்லினம் மிக்கவாறு காண்க . உண்ணா தின்னா என நிறுத்தி சாத்தன் கொற்றன் தேவன் பூதன் என வருவித்து ஆகாரவீற்று எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிக்கவாறு காண்க . நொ து என நிறுத்தி கொற்றா சாத்தா தேவா பூதா என வருவித்து இவ்விரண்டீற்று வினைச்சொல் முன் வல்லினம் மிக்கவாறு காண்க . கொள்ளோ ஆங்க புலி போல் மூவினமெனா தனி நிலையெனா அணி பெற்று என நிறுத்தி கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வருவித்து உயிர் ஈற்று இடைப்பதமுன் மி ாறு காண்க .