நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 93 கொள்க. கொல்யானை, அரிவாள், எரி முட்டையென வினைத் தொகை பெயரொடு புணர்ந்து தொக்கு வந்தன. ஆயனாய சாத்தன் ஆயன் சாத்தன், கேழலாய பன்றி கேழற்பன்றி, வேழமாய கரும்பு வேழக் கரும்பு எனவும், வேயனைய தோள் வேய்த்தோள், துடிபோலு மிடை துடியிடை, பால் போலுமொழி பான்மொழி எனவும் தீயுநீரம் தீநீர், கல்லாடரும் மாமூலரும் கல்லாடர்மாமூலர், சேரரும் சோழரும் பாண்டியரும் சேர சோழ பாண்டியர் எனவும் பொற்றாலி பூண்டாள் பொற்றாலி, தாழ்குழலுடையர் தாழ்குழல் எனவும் பண்புமுதல் நான் கும் விரிந்தும் தொக்கும் அவ்வப் பொருளை உணர்த்தி முறையே வந்தவாறு காண்க. கொற்றன் கொடுத்தான் எழுவாய்ப் புணர்ச்சி கொற்றன் கொள் விளிப்புணர்ச்சி. உண்ட சாத்தன், உண்கின்ற சாத்தன், உண்ணும் சாத்தன் பெயரெச்சப் புணர்ச்சி, உண்டு வந்தான், உண்ண வந்தான் என வினையெச்சப் புணர்ச்சி. உண்டான் போனான், உண்டான் தின்றான் எனத் தெரிநிலை வினைமுற்றுப் புணர்ச்சி. குண்டுகட்டெருமை, குண்டுகட்கு வந்தது குறிப்பு வினைமுற்றுப் புணர்ச்சி. “சின்மொழி அரிவையை பெறுகதில் யானே," வந்தாள் கொல் பாங்கி “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு " (குறள். 1081) என இடைச்சொற் புணர்ச்சி. நனிபேதை, சாலக் கொண்டான் உரிச்சொற் புணர்ச்சி. பாம்பு பாம்பு, தீத்தீ, வருக வருக அடுக்குப் புணர்ச்சி. முறையே அல் வழிப் புணர்ச்சி பதினான்கும் வந்தவாறு காண்க. (2) இயல்புப் புணர்ச்சி 153. விகார மனைத்து மேவல தியல்பே. சூ-ம், மேல் 'இயல்பொடு விகாரத் தென்றார்; அவற்றுள் இயல் பாவது இதுவென உரைத்தது. (இ-ள்) விகார மனைத்தும் - மேற்கூறப்பட்ட விகார வகை மூன்றும், மேவலதியல்பே - மேவாதது யாது அது இயல்புப் புணர்ச்சியாம் என்ற வாறு. உ-ம்: மண் மலை, கொற்றன் வந்தான், பாடினான் வந்தான், பாடினான் சாத்தன் என வரும். (3) விகாரப் புணர்ச்சி 154. தோன்ற றிரிதல் கெடுதல் விகாரம் மூன்று மொழிமூ விடத்து மாகும்.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 93 கொள்க . கொல்யானை அரிவாள் எரி முட்டையென வினைத் தொகை பெயரொடு புணர்ந்து தொக்கு வந்தன . ஆயனாய சாத்தன் ஆயன் சாத்தன் கேழலாய பன்றி கேழற்பன்றி வேழமாய கரும்பு வேழக் கரும்பு எனவும் வேயனைய தோள் வேய்த்தோள் துடிபோலு மிடை துடியிடை பால் போலுமொழி பான்மொழி எனவும் தீயுநீரம் தீநீர் கல்லாடரும் மாமூலரும் கல்லாடர்மாமூலர் சேரரும் சோழரும் பாண்டியரும் சேர சோழ பாண்டியர் எனவும் பொற்றாலி பூண்டாள் பொற்றாலி தாழ்குழலுடையர் தாழ்குழல் எனவும் பண்புமுதல் நான் கும் விரிந்தும் தொக்கும் அவ்வப் பொருளை உணர்த்தி முறையே வந்தவாறு காண்க . கொற்றன் கொடுத்தான் எழுவாய்ப் புணர்ச்சி கொற்றன் கொள் விளிப்புணர்ச்சி . உண்ட சாத்தன் உண்கின்ற சாத்தன் உண்ணும் சாத்தன் பெயரெச்சப் புணர்ச்சி உண்டு வந்தான் உண்ண வந்தான் என வினையெச்சப் புணர்ச்சி . உண்டான் போனான் உண்டான் தின்றான் எனத் தெரிநிலை வினைமுற்றுப் புணர்ச்சி . குண்டுகட்டெருமை குண்டுகட்கு வந்தது குறிப்பு வினைமுற்றுப் புணர்ச்சி . சின்மொழி அரிவையை பெறுகதில் யானே வந்தாள் கொல் பாங்கி அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு ( குறள் . 1081 ) என இடைச்சொற் புணர்ச்சி . நனிபேதை சாலக் கொண்டான் உரிச்சொற் புணர்ச்சி . பாம்பு பாம்பு தீத்தீ வருக வருக அடுக்குப் புணர்ச்சி . முறையே அல் வழிப் புணர்ச்சி பதினான்கும் வந்தவாறு காண்க . ( 2 ) இயல்புப் புணர்ச்சி 153. விகார மனைத்து மேவல தியல்பே . சூ - ம் மேல் ' இயல்பொடு விகாரத் தென்றார் ; அவற்றுள் இயல் பாவது இதுவென உரைத்தது . ( - ள் ) விகார மனைத்தும் - மேற்கூறப்பட்ட விகார வகை மூன்றும் மேவலதியல்பே - மேவாதது யாது அது இயல்புப் புணர்ச்சியாம் என்ற வாறு . - ம் : மண் மலை கொற்றன் வந்தான் பாடினான் வந்தான் பாடினான் சாத்தன் என வரும் . ( 3 ) விகாரப் புணர்ச்சி 154. தோன்ற றிரிதல் கெடுதல் விகாரம் மூன்று மொழிமூ விடத்து மாகும் .