நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 8 வித்துவான் ச. தண்டபாணி தேசிகர், இவ்விரு அறிஞர் பெரு மக்க ளின் உரையையும் தனித்தனியே பிரித்துத் திருவாவடுதுறை ஆதீனம் வழியாகப் பதிப்பித்துள்ளார். கூழங்கைத் தம்பிரான் சிவஞான முனிவர் எழுதிய நன்னூல் விருத்தியுரைக்குப் பிறகு நன்னூலுக்கு உரை எழுதியவர் கூழங்கைத்தம்பிரான் ஆவார். தம்பி ரான் பிறந்தது காஞ்சிபுரம். இவருடைய காலம் 18ஆம் நூற்றாண்டு. வடமொழி, தமிழ்மொழி, தத்துவம் முதலிய துறைகளில் வல்லவராக விளங்கியவர். இவர் திருவாவடுதுறை மடத்தில் தம்பிரானாக இருந் தார் என்றும் திருவாரூர் மடத்தில் தம்பிரானாக இருந்தார் என்றும் திருவத்தூர் மடத்தில் தம்பிரானாக இருந்தார் என்றும் மூன்று வேறு பட்ட கருத்துகளை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவர் கூழங் கைத் தம்பிரான் என்று பெயர் பெற்றதற்குரிய காரணத்தைத் தமிழ்ப் புலவர் அகராதி பின்வருமாறு விளக்குகிறது. “இவரது இயற்பெயர் தெரியவில்லை. கை கூழையானது பற்றி இவர் இப்பெயர் பெற்றார். இவர் திருவாரூர் மடத்தில் சில காலம் தம்பிரானாக இருந்தபோது மடாதிபதி சாட்டிய குற்றச்சாட்டை மறுத்து, தான் குற்றமற்றவர் என்று காட்டப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் பிடித்தமையால் இவரது கை கூழையாயிற்று" (தமிழ்ப்புலவர் அகராதி - பக்கம் 138). தமிழிலக்கண வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்ப் புலவர் அகராதி குறிப்பிடுவது போன்று கூழங்கைத் தம்பிரான் பெயர் பெற்ற வர லாற்றைக் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவர் உரையைப் பதிப் பித்த முனைவர் அ. தாமோதரன் அவர்கள் கருதுவதைப் போன்று இது புனைகதை போன்று தோன்றுகிறது. தமிழகத்தில் வாழ்ந்த கூழங்கைத் தம்பிரான் யாழ்ப்பாணம் சென்று வள்ளல் வைத்தியலிங்கம் செட்டியார் ஆதரவில் வண்ணார் பண்ணையில் வாழ்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம் பலருக்குக் கற்பித்தார். ஆறுமுக நாவலரின் தந்தையார் கந்தப்பிள்ளை, மயில் வாகனப் புலவர், இருபாலை நெல்லை முதலியார் இவருடைய மாண வர்கள் ஆவார். அப்போது கிறித்தவப் பாதிரிமார்களின் உறவும் பல் கிற்று. கபிரியேல் பச்சேக்கோ இவரிடம் தமிழ் பயின்றார். சித்தி விநாயகர் திருவிரட்டை மணிமாலை, கூழங்கையார் வண்ணம், நல் லைக் கலிவெண்பா ஆகிய நூற்களை இயற்றியுள்ளார்.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 8 வித்துவான் . தண்டபாணி தேசிகர் இவ்விரு அறிஞர் பெரு மக்க ளின் உரையையும் தனித்தனியே பிரித்துத் திருவாவடுதுறை ஆதீனம் வழியாகப் பதிப்பித்துள்ளார் . கூழங்கைத் தம்பிரான் சிவஞான முனிவர் எழுதிய நன்னூல் விருத்தியுரைக்குப் பிறகு நன்னூலுக்கு உரை எழுதியவர் கூழங்கைத்தம்பிரான் ஆவார் . தம்பி ரான் பிறந்தது காஞ்சிபுரம் . இவருடைய காலம் 18 ஆம் நூற்றாண்டு . வடமொழி தமிழ்மொழி தத்துவம் முதலிய துறைகளில் வல்லவராக விளங்கியவர் . இவர் திருவாவடுதுறை மடத்தில் தம்பிரானாக இருந் தார் என்றும் திருவாரூர் மடத்தில் தம்பிரானாக இருந்தார் என்றும் திருவத்தூர் மடத்தில் தம்பிரானாக இருந்தார் என்றும் மூன்று வேறு பட்ட கருத்துகளை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் . இவர் கூழங் கைத் தம்பிரான் என்று பெயர் பெற்றதற்குரிய காரணத்தைத் தமிழ்ப் புலவர் அகராதி பின்வருமாறு விளக்குகிறது . இவரது இயற்பெயர் தெரியவில்லை . கை கூழையானது பற்றி இவர் இப்பெயர் பெற்றார் . இவர் திருவாரூர் மடத்தில் சில காலம் தம்பிரானாக இருந்தபோது மடாதிபதி சாட்டிய குற்றச்சாட்டை மறுத்து தான் குற்றமற்றவர் என்று காட்டப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் பிடித்தமையால் இவரது கை கூழையாயிற்று ( தமிழ்ப்புலவர் அகராதி - பக்கம் 138 ) . தமிழிலக்கண வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்ப் புலவர் அகராதி குறிப்பிடுவது போன்று கூழங்கைத் தம்பிரான் பெயர் பெற்ற வர லாற்றைக் குறிப்பிட்டுள்ளனர் . எனினும் இவர் உரையைப் பதிப் பித்த முனைவர் . தாமோதரன் அவர்கள் கருதுவதைப் போன்று இது புனைகதை போன்று தோன்றுகிறது . தமிழகத்தில் வாழ்ந்த கூழங்கைத் தம்பிரான் யாழ்ப்பாணம் சென்று வள்ளல் வைத்தியலிங்கம் செட்டியார் ஆதரவில் வண்ணார் பண்ணையில் வாழ்ந்து தமிழ் இலக்கியம் இலக்கணம் பலருக்குக் கற்பித்தார் . ஆறுமுக நாவலரின் தந்தையார் கந்தப்பிள்ளை மயில் வாகனப் புலவர் இருபாலை நெல்லை முதலியார் இவருடைய மாண வர்கள் ஆவார் . அப்போது கிறித்தவப் பாதிரிமார்களின் உறவும் பல் கிற்று . கபிரியேல் பச்சேக்கோ இவரிடம் தமிழ் பயின்றார் . சித்தி விநாயகர் திருவிரட்டை மணிமாலை கூழங்கையார் வண்ணம் நல் லைக் கலிவெண்பா ஆகிய நூற்களை இயற்றியுள்ளார் .