நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

86 பதவியல் உற்றன, உற்றேன், உற்றேம், உற்றாய், உற்றீர் எனவும்; உறங்கினான், உறங்கினாள், உறங்கினார், உறங்கிற்று, உறங் கின, உறங்கினேன், உறங்கினேம், உறங்கினாய், உறங்கினீர் எனவும் வரும். (15) 143. ஆநின்று கின் று கிறுமூ விடத்தின் ஐம்பா னிகழ்பொழு தறைவிளை யிடைநிலை. சூ-ம, நிகழ்காலம் காட்டும் வினைப் பகுபத இடைநிலை வருமா கூறியது. (இ-ள்) ஆநின்று கின்று கிறு - ஆநின்று என்பதுவும் கின்று என்பது வும் கிறு என்பதுவும், மூவிடத்தின் ஐம்பால் - ஐம்பான் மூன்றிடத்தும், நிகழ்பொழுது அறை - நிகழ்காலம் காட்டும், வினை இடைநிலை - வினைப்பகுதி இடைநிலையாம் என்றவாறு. உ-ம்: உண்ணாநின்றான், உண்ணாநின்றாள், உண்ணாநின்றார், உண்ணாநின்றது, உண்ணாநின்றன, உண்ணாநின்றேன், உண் ணாநின்றேம், உண்ணாநின்றாய், உண்ணாநின்றீர் எனவும்; உண்கின்றான், உண்கின்றாள், உண்கின்றார், உண்கின்றது, உண்கின்றன, உண்கின்றேன், உண்கின்றேம், உண்கின்றாய், உண்கின்றீர் எனவும்; உண்கிறான், உண்கிறாள், உண்கிறார், உண்கிறது, உண்கின்றன, உண்கிறேன், உண்கிறோம், உண் கிறாய், உண்கிறீர் எனவும் வரும். (16) 144. பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில. சூ-ம், எதிர்காலம் காட்டும் வினைப் பகுபத இடைநிலை வருமாறு கூறியது. (இ-ள்) பவ்வ - பகர வகரங்களான இரண்டொற்றும், மூவிடத் தைம் பால் - ஐம்பான் மூன்றிடத்தும், எதிர் பொழுது இசை - எதிர்காலங் காட்டும், வினை இடைநிலையாம் - வினைப் பகுபத இடை நிலை யாம், இவை - இம் முக்காலமும் காட்டும் இடைநிலையில், சிலவில - சில வினையிடை இல்லையாம் என்றவாறு. உ-ம்: உண்பான், உண்பாள், உண்பார், உண்பது, உண்பன, உண்பேன், உண்பேம், உண்பாய், உண்பீர் எனவும்; உறங்கு வான், உறங்குவாள், உறங்குவார், உறங்குவது, உறங்குவன, உறங்குவேன், உறங்குவேம், உறங்குவாய், உறங்குவீர் என வும் வரும். 'சிலவில' என்பதினானே நக்கான், புக்கான், சொன் னான், போனான், வைச்சான் என்பனவும் கொள்க. (17)
86 பதவியல் உற்றன உற்றேன் உற்றேம் உற்றாய் உற்றீர் எனவும் ; உறங்கினான் உறங்கினாள் உறங்கினார் உறங்கிற்று உறங் கின உறங்கினேன் உறங்கினேம் உறங்கினாய் உறங்கினீர் எனவும் வரும் . ( 15 ) 143. ஆநின்று கின் று கிறுமூ விடத்தின் ஐம்பா னிகழ்பொழு தறைவிளை யிடைநிலை . சூ - நிகழ்காலம் காட்டும் வினைப் பகுபத இடைநிலை வருமா கூறியது . ( - ள் ) ஆநின்று கின்று கிறு - ஆநின்று என்பதுவும் கின்று என்பது வும் கிறு என்பதுவும் மூவிடத்தின் ஐம்பால் - ஐம்பான் மூன்றிடத்தும் நிகழ்பொழுது அறை - நிகழ்காலம் காட்டும் வினை இடைநிலை - வினைப்பகுதி இடைநிலையாம் என்றவாறு . - ம் : உண்ணாநின்றான் உண்ணாநின்றாள் உண்ணாநின்றார் உண்ணாநின்றது உண்ணாநின்றன உண்ணாநின்றேன் உண் ணாநின்றேம் உண்ணாநின்றாய் உண்ணாநின்றீர் எனவும் ; உண்கின்றான் உண்கின்றாள் உண்கின்றார் உண்கின்றது உண்கின்றன உண்கின்றேன் உண்கின்றேம் உண்கின்றாய் உண்கின்றீர் எனவும் ; உண்கிறான் உண்கிறாள் உண்கிறார் உண்கிறது உண்கின்றன உண்கிறேன் உண்கிறோம் உண் கிறாய் உண்கிறீர் எனவும் வரும் . ( 16 ) 144. பவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழு திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில . சூ - ம் எதிர்காலம் காட்டும் வினைப் பகுபத இடைநிலை வருமாறு கூறியது . ( - ள் ) பவ்வ - பகர வகரங்களான இரண்டொற்றும் மூவிடத் தைம் பால் - ஐம்பான் மூன்றிடத்தும் எதிர் பொழுது இசை - எதிர்காலங் காட்டும் வினை இடைநிலையாம் - வினைப் பகுபத இடை நிலை யாம் இவை - இம் முக்காலமும் காட்டும் இடைநிலையில் சிலவில - சில வினையிடை இல்லையாம் என்றவாறு . - ம் : உண்பான் உண்பாள் உண்பார் உண்பது உண்பன உண்பேன் உண்பேம் உண்பாய் உண்பீர் எனவும் ; உறங்கு வான் உறங்குவாள் உறங்குவார் உறங்குவது உறங்குவன உறங்குவேன் உறங்குவேம் உறங்குவாய் உறங்குவீர் என வும் வரும் . ' சிலவில ' என்பதினானே நக்கான் புக்கான் சொன் னான் போனான் வைச்சான் என்பனவும் கொள்க . ( 17 )