நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

76 எழுத்தியல் (இ-ள்) மெய்கள் அகரமும் - மெய்கள் பதினெட்டும் அகரச் சாரியை யும், நெட்டுயிர் காரமும் - நெட்டுயிர் ஏழும் காரச் சாரியையும், ஐ ஔக் கானும் - ஐகார ஒளகாரங்கள் காரத்துடனே கான் சாரியையும், இருமைக் குறில் உயிரும் உயிர்மெய்யுமான குற்றெழுத்து இரண்டு பகுதியும், இவ்விரண்டொடு கரமுமாம் - காரம் கான்களுட னேயும் கரமென்னும் சாரியையும், சாரியை பெறும்பிற - எழுத்துச் சாரி யையாகச் சார்ந்து நடக்கும் என்றவாறு. உ-ம்: க ங ச ஞ ட ணற ன எனவும்; ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஓகாரம், ஔகாரம் எனவும்; ஐகான், ஔகான் எனவும்; அகாரம், அஃகான், அகரம் எனவும்; ககாரம், கஃகான், ககரம் எனவும்; “பிற” என்றதினாலே கான் வருங்காலை ஆய்த மும், ஆன், ஒன் முதலாயினவும் கொள்க. (71) புறநடை 127. மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே சூ-ம், எனைவகை எழுத்துக்கும் இயல்வதோர் இயல்பு கூறியது. (இ-ள்) மொழியாய்த் தொடரினும் - எழுத்துக்கள் பலவற்றையும் கூட்டி நெருக்கி ஒரு தொடராய்க் கூறினாலும், முன்னனைத் தெழுத்தே - தம் வடிவும் அளவும் முதலான இலக்கணம் திரியாது தனித்து நின்றாற் போலுமாம் ஆண்டும் என்றவாறு. உ-ம்: மறு, மன்று; மறு, மற்றை எனவும், “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” (குறள்.391) என வும் இவற்றுள் அரிசனமும் நீறும் கூட்டிச் செவ்வண்ணமானது போல ஆகாமல் எழுத்துக்கள் கூடி நின்றவிடத்துத் தம்மியல்பு திரியாமை நின்றவாறு காண்க. (72) முதலாவது எழுத்தியல் முற்றும்
76 எழுத்தியல் ( - ள் ) மெய்கள் அகரமும் - மெய்கள் பதினெட்டும் அகரச் சாரியை யும் நெட்டுயிர் காரமும் - நெட்டுயிர் ஏழும் காரச் சாரியையும் ஔக் கானும் - ஐகார ஒளகாரங்கள் காரத்துடனே கான் சாரியையும் இருமைக் குறில் உயிரும் உயிர்மெய்யுமான குற்றெழுத்து இரண்டு பகுதியும் இவ்விரண்டொடு கரமுமாம் - காரம் கான்களுட னேயும் கரமென்னும் சாரியையும் சாரியை பெறும்பிற - எழுத்துச் சாரி யையாகச் சார்ந்து நடக்கும் என்றவாறு . - ம் : ணற எனவும் ; ஆகாரம் ஈகாரம் ஊகாரம் ஏகாரம் ஐகாரம் ஓகாரம் ஔகாரம் எனவும் ; ஐகான் ஔகான் எனவும் ; அகாரம் அஃகான் அகரம் எனவும் ; ககாரம் கஃகான் ககரம் எனவும் ; பிற என்றதினாலே கான் வருங்காலை ஆய்த மும் ஆன் ஒன் முதலாயினவும் கொள்க . ( 71 ) புறநடை 127. மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே சூ - ம் எனைவகை எழுத்துக்கும் இயல்வதோர் இயல்பு கூறியது . ( - ள் ) மொழியாய்த் தொடரினும் - எழுத்துக்கள் பலவற்றையும் கூட்டி நெருக்கி ஒரு தொடராய்க் கூறினாலும் முன்னனைத் தெழுத்தே - தம் வடிவும் அளவும் முதலான இலக்கணம் திரியாது தனித்து நின்றாற் போலுமாம் ஆண்டும் என்றவாறு . - ம் : மறு மன்று ; மறு மற்றை எனவும் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக ( குறள் .391 ) என வும் இவற்றுள் அரிசனமும் நீறும் கூட்டிச் செவ்வண்ணமானது போல ஆகாமல் எழுத்துக்கள் கூடி நின்றவிடத்துத் தம்மியல்பு திரியாமை நின்றவாறு காண்க . ( 72 ) முதலாவது எழுத்தியல் முற்றும்