நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 6 நன்னூல் ஆசிரியர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டின் பிற் பகுதி அல்லது 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கண்டோம். மயிலைநாதர் தம்முடைய நன்னூல் உரையில் சீயகங்கனையும் கங்கர் குடியையும் பாராட்டியுள்ளார் (நன்னூல் 359, 369, 413). கங்கர் தமிழகத்தில் பெருமையோடு இருந்த காலம் கி.பி. 13 அல்லது 14ஆம் நூற்றாண்டு ஆகும். எனவே மயிலைநாதர் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். நன்னூலாசிரியர் வாழ்ந்த காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் மயிலை நாதர். எனவே மயிலைநாதர் எழுதிய உரை மூலநூல் ஆசிரியரின் கருத்துக்கு ஏற்ப அமைகிறது. மயிலைநாதர் சமண சமயத்தைச் சார்ந்தவர். எனவே அவர் தம்முடைய உரையில் அருகதேவனைப் போற்றிய பாடல்களையும் சமண சமய வழக்காறுகளையும் எடுத்துக் காட்டுகளாகத் தந்துள்ளார். மயிலைநாதர் உரையைக் காண்டிகை யுரை' என்று உ.வே. சா. குறிப்பிடுவார். பேராசிரியர் க.ப. அற வாணன் அக்கருத்தை மறுத்துள்ளார். 'ஏடு எழுதியவர் பிழை என்று அவருடைய எழு நூறு ஆண்டுகளில் நன்னூல்' என்ற ஆய்வு நூலில் சுட்டியுள்ளார். நன்னூலுக்கு உரை வகுத்த முதல் உரையாசிரியர் மயினல நாதர் உரையைப் பதிப்புத்துறையின் முன்னோடி டாக்டர் உ.வே.சா. 1918இல் பதிப்பித்தார். ஆண்டிப்புலவர் செஞ்சிப் பகுதியில் உள்ள ஊற்றங்கால் என்ற ஊரில் பிறந் தவர் ஆண்டிப்புலவர். அகவற்பாக்கள் பாடுவதில் வல்லவர். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆசிரிய நிகண்டு' என்னும் நூலை இயற்றியவர். நன்னூலுக்குப் பாட்டாலேயே உரை எழுதியுள்ளார். அதற்கு உரையறி நன்னூல்' என்று பெயரிட்டுள்ளார். வ்வுரை இன்று நமக்குக் கிடைக்கவில்லை. மதுரைத் தமிழ்ச் சங்கப் பாதுகாப்பில் உள்ள சுவடிகளில் 'நன்னூல் உரை' எனும் சுவடி இடம்பெற்றுள்ளது. ஆயின் அது ஆண்டிப்புலவர் உரை அன்று என்று மு. இராகவையங்கார் குறிப் பிட்டுள்ளார். எனவே இதுகாறும் தமிழ் உலகிற்கு வெளிவராமல் மறைந்து இருக்கும் 'உரையறி நன்னூலைத் தமிழ் அறிஞர்கள் வெளிக்கொணர முன்வருதல் வேண்டும்.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 6 நன்னூல் ஆசிரியர் வாழ்ந்த காலம் 12 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதி அல்லது 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கண்டோம் . மயிலைநாதர் தம்முடைய நன்னூல் உரையில் சீயகங்கனையும் கங்கர் குடியையும் பாராட்டியுள்ளார் ( நன்னூல் 359 369 413 ) . கங்கர் தமிழகத்தில் பெருமையோடு இருந்த காலம் கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு ஆகும் . எனவே மயிலைநாதர் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம் . நன்னூலாசிரியர் வாழ்ந்த காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் மயிலை நாதர் . எனவே மயிலைநாதர் எழுதிய உரை மூலநூல் ஆசிரியரின் கருத்துக்கு ஏற்ப அமைகிறது . மயிலைநாதர் சமண சமயத்தைச் சார்ந்தவர் . எனவே அவர் தம்முடைய உரையில் அருகதேவனைப் போற்றிய பாடல்களையும் சமண சமய வழக்காறுகளையும் எடுத்துக் காட்டுகளாகத் தந்துள்ளார் . மயிலைநாதர் உரையைக் காண்டிகை யுரை ' என்று உ.வே. சா . குறிப்பிடுவார் . பேராசிரியர் க.ப. அற வாணன் அக்கருத்தை மறுத்துள்ளார் . ' ஏடு எழுதியவர் பிழை என்று அவருடைய எழு நூறு ஆண்டுகளில் நன்னூல் ' என்ற ஆய்வு நூலில் சுட்டியுள்ளார் . நன்னூலுக்கு உரை வகுத்த முதல் உரையாசிரியர் மயினல நாதர் உரையைப் பதிப்புத்துறையின் முன்னோடி டாக்டர் உ.வே.சா. 1918 இல் பதிப்பித்தார் . ஆண்டிப்புலவர் செஞ்சிப் பகுதியில் உள்ள ஊற்றங்கால் என்ற ஊரில் பிறந் தவர் ஆண்டிப்புலவர் . அகவற்பாக்கள் பாடுவதில் வல்லவர் . கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் . ஆசிரிய நிகண்டு ' என்னும் நூலை இயற்றியவர் . நன்னூலுக்குப் பாட்டாலேயே உரை எழுதியுள்ளார் . அதற்கு உரையறி நன்னூல் ' என்று பெயரிட்டுள்ளார் . வ்வுரை இன்று நமக்குக் கிடைக்கவில்லை . மதுரைத் தமிழ்ச் சங்கப் பாதுகாப்பில் உள்ள சுவடிகளில் ' நன்னூல் உரை ' எனும் சுவடி இடம்பெற்றுள்ளது . ஆயின் அது ஆண்டிப்புலவர் உரை அன்று என்று மு . இராகவையங்கார் குறிப் பிட்டுள்ளார் . எனவே இதுகாறும் தமிழ் உலகிற்கு வெளிவராமல் மறைந்து இருக்கும் ' உரையறி நன்னூலைத் தமிழ் அறிஞர்கள் வெளிக்கொணர முன்வருதல் வேண்டும் .