நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 45 (இ-ள்) ஒரு குறி கேட்போன் - ஒரு கால் கேட்டுச் சிந்தித்துத் தெளிய வல்லான், இரு காற் கேட்பின் - இரண்டு முறை கேட்டானாயின், பெருகி நூலிற் - மிகுதியாகவும் நூலிலக்கண வழக்கிலே, பிழை பாடிலனே - குற்றப்பாடு இல்லாதவனாம் என்றவாறு. எனவே சிறு பான்மை நூலிலே குற்றப்பாடு பெறுமென்க. (43) 44. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். சூ-ம், இதுவுமது. (இ-ள்) முக்காற் கேட்பின் - மூன்று முறை நூலுரை கேட்பானாயின், முறை அறிந்து உரைக்கும் - நூலது இலக்கணத்தின் முறையை அறிந்து கூறுமென்றவாறு. (14) 45. ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல வாகும் அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற் செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும். சூ-ம், இதுவுமது. (இ-ள்) ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் - ஆசான் உரைத்த நூற்பொருள் அடங்கலும் அமைவு பெறக் கொள்ளுவானாயினும், காற்கூறு அல்லது பற்றலவாகும் - அவ்விலக்கணத்திற் காற்கூறே யன்றி அமைவு பெறானாம், அவ்வினையாளரொடு பயில் வகை ஒரு கால் - கேட்கும் இயல்பினை யுடைய தன்னோடொத்த மாணாக்கரோ டும் பயில்வகையில் ஒரு காலும், செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் - அவ்விலக்கணம் பிறர்க்கு உணர்த்தும் வகையிலொழிந்த இரு காலும், மையறு புலமை - குற்றமற்ற புலமை செலுத்தும் தன்மை, மாண்புடைத்தாகும் - மாட்சிமை உடைத்தாம் என்றவாறு. (45) 46. வழிபாடு அழலி னீங்கா னணுகா னஞ்சி, நிழலி நீங்கா னிறைந்த நெஞ்சமொ டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே. சூ-ம், மேற்கூறிய வழிபடுதற்கு இலக்கணம் இதுவெனக் கூறு கின்றது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 45 ( - ள் ) ஒரு குறி கேட்போன் - ஒரு கால் கேட்டுச் சிந்தித்துத் தெளிய வல்லான் இரு காற் கேட்பின் - இரண்டு முறை கேட்டானாயின் பெருகி நூலிற் - மிகுதியாகவும் நூலிலக்கண வழக்கிலே பிழை பாடிலனே - குற்றப்பாடு இல்லாதவனாம் என்றவாறு . எனவே சிறு பான்மை நூலிலே குற்றப்பாடு பெறுமென்க . ( 43 ) 44. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) முக்காற் கேட்பின் - மூன்று முறை நூலுரை கேட்பானாயின் முறை அறிந்து உரைக்கும் - நூலது இலக்கணத்தின் முறையை அறிந்து கூறுமென்றவாறு . ( 14 ) 45 . ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் காற்கூ றல்லது பற்றல வாகும் அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற் செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் - ஆசான் உரைத்த நூற்பொருள் அடங்கலும் அமைவு பெறக் கொள்ளுவானாயினும் காற்கூறு அல்லது பற்றலவாகும் - அவ்விலக்கணத்திற் காற்கூறே யன்றி அமைவு பெறானாம் அவ்வினையாளரொடு பயில் வகை ஒரு கால் - கேட்கும் இயல்பினை யுடைய தன்னோடொத்த மாணாக்கரோ டும் பயில்வகையில் ஒரு காலும் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் - அவ்விலக்கணம் பிறர்க்கு உணர்த்தும் வகையிலொழிந்த இரு காலும் மையறு புலமை - குற்றமற்ற புலமை செலுத்தும் தன்மை மாண்புடைத்தாகும் - மாட்சிமை உடைத்தாம் என்றவாறு . ( 45 ) 46 . வழிபாடு அழலி னீங்கா னணுகா னஞ்சி நிழலி நீங்கா னிறைந்த நெஞ்சமொ டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே . சூ - ம் மேற்கூறிய வழிபடுதற்கு இலக்கணம் இதுவெனக் கூறு கின்றது .