நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 39 கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் உடையோ ரிலரா சிரியரா குதலே. சூ-ம், கற்கப்படாத ஆசிரியரது இயல்பு கூறுகின்றது. (இ-ள்) மொழி குணமின்மையும் - நூற் குணமின்றி சொல்வன்மை இல்லாதனாகவும், இழி குண இயல்பும் - இழிவாகிய குணத் தியற்கையானாதலும், அழுக்காறு - பிறராக்கம் பொறாமை உடை யோனாகியும், அவா - ஐயறிவினாலும் கண்டகண்ட புலன்களின் மேற் செல்கின்ற ஆசையை உடையவனாகியும், வஞ்சம் - காமம் தன் கண்ணே தோன்றி நலியாநிற்கவும் அதனதின்மை கூறிப் புறத்தாரை வஞ்சிக்கும் வஞ்சம் உடையானாகியும், அச்சமாடலும் - எதிர்வாதி களிடத்து அச்சம் உடையானாகியும், கழற்குடம் - கழற்சிக் குடம் ஒப்பானாகியும், மடற்பனை - கருக்குப் பனை ஒப்பானாகியும், பருத் திக் குண்டிகை - பருத்திக் குண்டிகை ஒப்பானாகியும், முடத் தெங்கு ஒப்பென - முடத்தெங்கு ஒப்பானாகியும், முரண் கொள் சிந்தையும் - மாறுகொள்ளுதலிலே வலிமை உடையோனாகியும், உடையோர் இத் 'தன்மை உடையோர், இலர் ஆசிரியர் ஆகுதலே - ஆசிரியர் ஆகுதல் இலராமென்க. (32) கழற்குடத்தின் தன்மை பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே சூ-ம், கழற்குடத்தின் தன்மை இவையெனக் கூறுகின்றது. 33. (இ-ள்) பெய்த முறையன்றிப் - சிறிது சிறிதாகப் பெய்யத் தானுட் கொண்ட முறையேயன்றி, பிறழ உடன் தரும் செய்தி - பின்பு சொரி யத் தானுட்கொண்டதெல்லாம் ஒருங்கு சொரிதல், கழற் பெய் குடத் தின் சீரே - கழற்சியை உட்கொண்ட குடத்தினது தன்மையாம எனற வாறு. இதுபோலக் கொள்வோன் உணர்வு சிறிதாயினும் தான் கற்ற தெல்லாம் ஒருங்குரைத்தல், (33) மடற்பனையினது தன்மை தானே தரக்கொளி னன்றித் தன்பால் மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை. சூ-ம், மடற்பனையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது. 34.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 39 கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் உடையோ ரிலரா சிரியரா குதலே . சூ - ம் கற்கப்படாத ஆசிரியரது இயல்பு கூறுகின்றது . ( - ள் ) மொழி குணமின்மையும் - நூற் குணமின்றி சொல்வன்மை இல்லாதனாகவும் இழி குண இயல்பும் - இழிவாகிய குணத் தியற்கையானாதலும் அழுக்காறு - பிறராக்கம் பொறாமை உடை யோனாகியும் அவா - ஐயறிவினாலும் கண்டகண்ட புலன்களின் மேற் செல்கின்ற ஆசையை உடையவனாகியும் வஞ்சம் - காமம் தன் கண்ணே தோன்றி நலியாநிற்கவும் அதனதின்மை கூறிப் புறத்தாரை வஞ்சிக்கும் வஞ்சம் உடையானாகியும் அச்சமாடலும் - எதிர்வாதி களிடத்து அச்சம் உடையானாகியும் கழற்குடம் - கழற்சிக் குடம் ஒப்பானாகியும் மடற்பனை - கருக்குப் பனை ஒப்பானாகியும் பருத் திக் குண்டிகை - பருத்திக் குண்டிகை ஒப்பானாகியும் முடத் தெங்கு ஒப்பென - முடத்தெங்கு ஒப்பானாகியும் முரண் கொள் சிந்தையும் - மாறுகொள்ளுதலிலே வலிமை உடையோனாகியும் உடையோர் இத் ' தன்மை உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே - ஆசிரியர் ஆகுதல் இலராமென்க . ( 32 ) கழற்குடத்தின் தன்மை பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே சூ - ம் கழற்குடத்தின் தன்மை இவையெனக் கூறுகின்றது . 33 . ( - ள் ) பெய்த முறையன்றிப் - சிறிது சிறிதாகப் பெய்யத் தானுட் கொண்ட முறையேயன்றி பிறழ உடன் தரும் செய்தி - பின்பு சொரி யத் தானுட்கொண்டதெல்லாம் ஒருங்கு சொரிதல் கழற் பெய் குடத் தின் சீரே - கழற்சியை உட்கொண்ட குடத்தினது தன்மையாம எனற வாறு . இதுபோலக் கொள்வோன் உணர்வு சிறிதாயினும் தான் கற்ற தெல்லாம் ஒருங்குரைத்தல் ( 33 ) மடற்பனையினது தன்மை தானே தரக்கொளி னன்றித் தன்பால் மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை . சூ - ம் மடற்பனையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது . 34 .