நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

28 பாயிரம் சார்பு நூல் 9. இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூ லாகும் சூ-ம், சார்பு நூலாவது இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) இருவர் நூற்கும் - முன்னோர் பின்னோர் என்னும் இவ்விரு வர் செய்த முதல் நூற்கும் வழி நூற்கும், ஒரு சிறை தொடங்கி - வேறிடமாகத் தொடங்கி, திரிபு வேறுடையது - சொல் திரிபும் பொருள் திரிபுமான வேறுபாடு உடையது, புடை நூலாகும் - சார்பு நூலாகும் என்றவாறு. இம்மூன்றினுள் ஒன்றாய் வருவது நூலென்று அறிக. (9) வழி நூல் சார்பு நூற் சிறப்பு விதி 10. முன்னோர் மொழிபொருளே யன்றி யவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும் முன்னோரின் வேறுநூல் செய்துமெனு மேற்கோளில் லென்பதற்கும் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள். சூ-ம், தொல்லாசிரியர் சூத்திரங்களையும் இந்த நூலில் வைத்துக் கூறலாம் என்கின்றது. (இ-ள்) முன்னோர் மொழி பொருளேயன்றி - முன் பழைய ஆசிரியர் நூலின் மொழிந்த பொருளேயன்றி, அவர் மொழியும் - அப்பொருளை அவர் பொதிந்த மொழியையும், பொன்னேபோல் - பொன்னின் மூடின சீலையும் பொன் போல் எடுத்தது போலப் பொருள் பொதிந்த சொல் லையும் பொருளே போல, போற்றுவம் என்பதற்கும் - பேணி வைத்துக் கொள்வோம் என்பது காண்டற்கும், முன்னோரின் - பழைய ஆசிரியர் செய்த நூல் போல, வேறு நூல் செய்துமென்னும் - வேறு நூல் செய் கின்றோம் என்னும், மேற்கோள் இல்லென்பதற்கும் - மேலாய்க் கோட் பாடில்லை என்பதற்கும், கூறு பழஞ் சூத்திரத்தின் கோள் - பழஞ் சூத் திரத்தின் கொள்கையைக் கூறுக என்றவாறு. (10) நாற்பொருள் பயன் 11. அறம்பொரு ளின்பம்வி டடைதனூற் பயனே சூ-ம், முறையே நாற்பொருட் பயன் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) அறம் பொருள் இன்பம் வீடு - அறப்பயன் எனவும் பொருட் பயன் எனவும் காமப்பயன் எனவும் வீட்டுப்பயன் எனவும், அடைதல் -
28 பாயிரம் சார்பு நூல் 9 . இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூ லாகும் சூ - ம் சார்பு நூலாவது இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) இருவர் நூற்கும் - முன்னோர் பின்னோர் என்னும் இவ்விரு வர் செய்த முதல் நூற்கும் வழி நூற்கும் ஒரு சிறை தொடங்கி - வேறிடமாகத் தொடங்கி திரிபு வேறுடையது - சொல் திரிபும் பொருள் திரிபுமான வேறுபாடு உடையது புடை நூலாகும் - சார்பு நூலாகும் என்றவாறு . இம்மூன்றினுள் ஒன்றாய் வருவது நூலென்று அறிக . ( 9 ) வழி நூல் சார்பு நூற் சிறப்பு விதி 10 . முன்னோர் மொழிபொருளே யன்றி யவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும் முன்னோரின் வேறுநூல் செய்துமெனு மேற்கோளில் லென்பதற்கும் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள் . சூ - ம் தொல்லாசிரியர் சூத்திரங்களையும் இந்த நூலில் வைத்துக் கூறலாம் என்கின்றது . ( - ள் ) முன்னோர் மொழி பொருளேயன்றி - முன் பழைய ஆசிரியர் நூலின் மொழிந்த பொருளேயன்றி அவர் மொழியும் - அப்பொருளை அவர் பொதிந்த மொழியையும் பொன்னேபோல் - பொன்னின் மூடின சீலையும் பொன் போல் எடுத்தது போலப் பொருள் பொதிந்த சொல் லையும் பொருளே போல போற்றுவம் என்பதற்கும் - பேணி வைத்துக் கொள்வோம் என்பது காண்டற்கும் முன்னோரின் - பழைய ஆசிரியர் செய்த நூல் போல வேறு நூல் செய்துமென்னும் - வேறு நூல் செய் கின்றோம் என்னும் மேற்கோள் இல்லென்பதற்கும் - மேலாய்க் கோட் பாடில்லை என்பதற்கும் கூறு பழஞ் சூத்திரத்தின் கோள் - பழஞ் சூத் திரத்தின் கொள்கையைக் கூறுக என்றவாறு . ( 10 ) நாற்பொருள் பயன் 11 . அறம்பொரு ளின்பம்வி டடைதனூற் பயனே சூ - ம் முறையே நாற்பொருட் பயன் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) அறம் பொருள் இன்பம் வீடு - அறப்பயன் எனவும் பொருட் பயன் எனவும் காமப்பயன் எனவும் வீட்டுப்பயன் எனவும் அடைதல் -