நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நான்காவது இடைச்சொல்லியல் கடவுள் திருவடி துணை இடைச்சொல்லின் இயல்பும் பாகுபாடும் 419. வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத் தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல். சூ-ம், இடைச் சொல்லினது இயல்பும் அதன் பகுதியும் கூறு கின்றது. (இ-ள்) வேற்றுமை - ஐ ஆல் முதலாகிய வேற்றுமை உருபும், வினை - அன் ஆன் அள் ஆள் முதலாகிய வினையுருபும், சாரியை - அன் ஆன் இன் அல் முதலாகிய சாரியை உருபும், ஒப்புருபுகள் - போலப் புரைய முதலாகிய உவமை உருபும், தத்தம் பொருள் - ஏ ஓ முதலாகிய பிரி நிலை முதலிய பொருளைத் தோற்றி நிற்கும் தத்தம் பொருளவும், இசைநிறை - ஏ ஓ முதலாகிய இசை நிறைப்பனவும், அசைநிலை - மியா இக மோ முதலாகிய அசைநிலையின் வருவனவும், குறிப்பு - கல்லென் விண்ணென ஒல்லென முதலாகிய குறிப்பின் வருவனவும், எனெண் பகுதியில் - என்று சொல்லப்படும் எட்டுப் பகுதியவாய், தனித் தியலின்றி - தாமாகத் தனித்து நடத்தலின்றி, பெயரினும் வினையினும் - பெயரிடத்தினும் வினையிடத்தினும், பின்முன் னோரிடத்து - பின்னிடத் தாயினும் முன்னிடத்தாயினும் ஓரிடத்தாயினும், ஒன்றும் பலவும் வந்து - ஒன்றானும் பலவானும் வந்து, ஒன்றுவ பலவும் வந்து - ஒன்றானும் பலவானும் வந்து, ஒன்றுவ திடைச்சொல் - பொருந்தி நிற்பது இடைச்சொல்லாம் என்றவாறு.
நான்காவது இடைச்சொல்லியல் கடவுள் திருவடி துணை இடைச்சொல்லின் இயல்பும் பாகுபாடும் 419. வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத் தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல் . சூ - ம் இடைச் சொல்லினது இயல்பும் அதன் பகுதியும் கூறு கின்றது . ( - ள் ) வேற்றுமை - ஆல் முதலாகிய வேற்றுமை உருபும் வினை - அன் ஆன் அள் ஆள் முதலாகிய வினையுருபும் சாரியை - அன் ஆன் இன் அல் முதலாகிய சாரியை உருபும் ஒப்புருபுகள் - போலப் புரைய முதலாகிய உவமை உருபும் தத்தம் பொருள் - முதலாகிய பிரி நிலை முதலிய பொருளைத் தோற்றி நிற்கும் தத்தம் பொருளவும் இசைநிறை - முதலாகிய இசை நிறைப்பனவும் அசைநிலை - மியா இக மோ முதலாகிய அசைநிலையின் வருவனவும் குறிப்பு - கல்லென் விண்ணென ஒல்லென முதலாகிய குறிப்பின் வருவனவும் எனெண் பகுதியில் - என்று சொல்லப்படும் எட்டுப் பகுதியவாய் தனித் தியலின்றி - தாமாகத் தனித்து நடத்தலின்றி பெயரினும் வினையினும் - பெயரிடத்தினும் வினையிடத்தினும் பின்முன் னோரிடத்து - பின்னிடத் தாயினும் முன்னிடத்தாயினும் ஓரிடத்தாயினும் ஒன்றும் பலவும் வந்து - ஒன்றானும் பலவானும் வந்து ஒன்றுவ பலவும் வந்து - ஒன்றானும் பலவானும் வந்து ஒன்றுவ திடைச்சொல் - பொருந்தி நிற்பது இடைச்சொல்லாம் என்றவாறு .