நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 237 உ-ம்: பயறுளவோ வணிகரே என்றால் உழுந்துண்டு எனவும், உழுந்தல்லது இல்லை எனவும், இத்துணைப் பயறு உளவென் னும் விடை வருமென்க. நூறு விற்கும் பட்டாடை உளவோ என்றால் ஐந்து விற்கும் கோசியம் உண்டு எனவும், ஐம்பது விற்கும் கோசிகமல்லது இல்லை எனவும், இத்துணைப் பட்டாடை உள எனவும் விடை வரும் என்க. பிறவுமன்ன. (55) இரக்கும் சொல் 406. ஈதா கொடுவெனு மூன்று முறையே இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை. சூ-ம், ஏற்பதற்கு வருவதோர் கேள்விச்சொல் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) ஈதா கொடுவெனு மூன்றும் - ஈ, தா, கொடு என்னும் மூன்று சொல்லும், முறையே - கூறிய முறையே அச்சொற்களில், இழிந் தோன் - ஈயென்னும் சொல் ஈவானின் இழிந்த இரப்பான் சொல்லுவ தாம்; ஒப்போன் - தாவென்னும் சொல் ஈவானோடு ஒக்கும் இரப்பான் சொல்லுவதாம்; மிக்கோ னிரப்புரை - கொடுவென்னும் சொல் ஈவா னின் மிக்கோன் இரப்புரையாம் என்றவாறு. “இரப்புரை” கடைநிலைத் தீபம் என்ப. (56) மரபு வழுவமைதி 407. முன்னத்தி னுணரும் கிளவியு முள வே. சூ-ம், தொடர்மொழிச் சொல் கிடந்த முறையேயன்றி வேறு பொரு ளும் படும் என்கின்றது. (இ-ள்) முன் - தொடர்மொழியின் முன்னம் சொற்பொருள் கிடந்த வாறின்றி, அத்தின் - அத்தொடர்மொழியிடத்து சொல்லுவான் குறிப் பான், உணருங் கிளவியும் - வேறு பொருள்பட வரும் சொற்களும், உளவே - சில உளவாம் என்றவாறு. உ-ம்: செஞ்செவியர், வெள்ளொக்கலர் என்றவழி செவ்வென்று உதிரஞ் சொரியும் செவியர், வெள்ளிய சுற்றத்தார் என்பது பொருளன்று. செவியெல்லாம் சாலச் செம்பொன் அணிந்தவர், முட்டில் செல்வத்துச் சுற்றத்தார் என்பதும் பொருளாம். “குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையவர்” என்றவழி கோழி எறிவாரென்று உணரற்பாலதன்று; ஒன்றானும் முட்டில் செல் வத்தார் என்பதாம். (57)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 237 - ம் : பயறுளவோ வணிகரே என்றால் உழுந்துண்டு எனவும் உழுந்தல்லது இல்லை எனவும் இத்துணைப் பயறு உளவென் னும் விடை வருமென்க . நூறு விற்கும் பட்டாடை உளவோ என்றால் ஐந்து விற்கும் கோசியம் உண்டு எனவும் ஐம்பது விற்கும் கோசிகமல்லது இல்லை எனவும் இத்துணைப் பட்டாடை உள எனவும் விடை வரும் என்க . பிறவுமன்ன . ( 55 ) இரக்கும் சொல் 406. ஈதா கொடுவெனு மூன்று முறையே இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை . சூ - ம் ஏற்பதற்கு வருவதோர் கேள்விச்சொல் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) ஈதா கொடுவெனு மூன்றும் - தா கொடு என்னும் மூன்று சொல்லும் முறையே - கூறிய முறையே அச்சொற்களில் இழிந் தோன் - ஈயென்னும் சொல் ஈவானின் இழிந்த இரப்பான் சொல்லுவ தாம் ; ஒப்போன் - தாவென்னும் சொல் ஈவானோடு ஒக்கும் இரப்பான் சொல்லுவதாம் ; மிக்கோ னிரப்புரை - கொடுவென்னும் சொல் ஈவா னின் மிக்கோன் இரப்புரையாம் என்றவாறு . இரப்புரை கடைநிலைத் தீபம் என்ப . ( 56 ) மரபு வழுவமைதி 407. முன்னத்தி னுணரும் கிளவியு முள வே . சூ - ம் தொடர்மொழிச் சொல் கிடந்த முறையேயன்றி வேறு பொரு ளும் படும் என்கின்றது . ( - ள் ) முன் - தொடர்மொழியின் முன்னம் சொற்பொருள் கிடந்த வாறின்றி அத்தின் - அத்தொடர்மொழியிடத்து சொல்லுவான் குறிப் பான் உணருங் கிளவியும் - வேறு பொருள்பட வரும் சொற்களும் உளவே - சில உளவாம் என்றவாறு . - ம் : செஞ்செவியர் வெள்ளொக்கலர் என்றவழி செவ்வென்று உதிரஞ் சொரியும் செவியர் வெள்ளிய சுற்றத்தார் என்பது பொருளன்று . செவியெல்லாம் சாலச் செம்பொன் அணிந்தவர் முட்டில் செல்வத்துச் சுற்றத்தார் என்பதும் பொருளாம் . குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையவர் என்றவழி கோழி எறிவாரென்று உணரற்பாலதன்று ; ஒன்றானும் முட்டில் செல் வத்தார் என்பதாம் . ( 57 )