நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 235 மேற்சேரிக்கோழி அலைப்புண்டது எனவும் ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்றாற் பிறர் கெடுக என்னா மையும் மேலிற் சூத்திரத்தினால் இனமின்றியும் வரூஉம் என்பதும் கொள்க. (51) 402. அடை சினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய விரடை சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே. சூ-ம், அடைமொழிகள் முதல் சினைமிடத்து வருமாறு கூறுகின்றது. (இ-ள்) அடைசினை - ஒன்றினால் ஒன்றைச் சிறப்பித்துச் சொல்லு மிடத்து அடையடுத்த சினையுடனே, முதன் முறையடைதலும், ஈரடை முதலோ டாதலும் - இரண்டு அடை முதலுடனே சேர்த்துச் சொல்லு தலும், வழக்கியல் - வழக்கினுள் இயற்கையாம்; ஈரடை சினையொடு செறிதலும் - இரண்டு அடையைச் சினையொடு சேர்த்துச் சொல்லுத லும், மயங்கலுஞ் செய்யுட்கே - ஆண்டை முதலுடனேயும் வேண்டி ... மயங்கச் சொல்லுதலும் செய்யுட்கண் இயல்பாம் என்றவாறு. உ-ம்: பெருந்தலைச் சாத்தன், செங்கானாரை, நெடுமலைத் தோங்கு எனவும் இளம்பெருங் கூத்தன், சிறு கருங்காக்கை எனவும் வழக்கினுள் வந்தன. “சிறுபைந் தூவியாற் செயிரறச் செய்த”, “கருநெடுங் கண்டரு காம நோயே” எனவும் “பெருந் தோட் சிறுமருங்கின் பேரமர்க்கட் பேதை” எனவும் செய்யுளில் வந்தன: பிறவுமன்ன. (52) 403. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். சூ-ம், உலகத்துப் பொருள்கள் எல்லாம் இயற்கைப் பொருளும் செயற்கைப் பொருளுமென இரண்டாம். அவற்றினுள் இயற்கைப் பொருளுக்கு ஆவதோர் இயல்பு கூறகின்றது. (இ-ள்) இயற்கைப் பொருளை - செயற்கைப் பொருள் அல்லாத இயல்பாக வாராநின்ற இயற்கைப் பொருளைச் சொல்லுமிடத்து, இற்றெனக் கிளத்தல் - இத்தன்மையையுடைய என்று சொல்ல வேண் டும் என்பார்கள் என்றவாறு. உ-ம்: நிலம் வலிது அல்லது உரத்துத் தரிக்கும்; நீர் தண்ணிது அல்லது குளிரும் பதஞ் செய்விக்கும்; தீ வெய்யிது அல்லது சூடு ஒன்றுவிக்கும்; வளி அசையும் அல்லது எவையும் திரட் டும்; கண் காணும், காது கேட்கும், மூக்கு மணக்கும், நா சுவைக்கும், தோல் பரிசிக்கும், வாக்கு வசனிக்கும் என வரும். பிறவுமன்ன. (53)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 235 மேற்சேரிக்கோழி அலைப்புண்டது எனவும் வாழ்க அந்தணர் வாழ்க என்றாற் பிறர் கெடுக என்னா மையும் மேலிற் சூத்திரத்தினால் இனமின்றியும் வரூஉம் என்பதும் கொள்க . ( 51 ) 402 . அடை சினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய விரடை சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே . சூ - ம் அடைமொழிகள் முதல் சினைமிடத்து வருமாறு கூறுகின்றது . ( - ள் ) அடைசினை - ஒன்றினால் ஒன்றைச் சிறப்பித்துச் சொல்லு மிடத்து அடையடுத்த சினையுடனே முதன் முறையடைதலும் ஈரடை முதலோ டாதலும் - இரண்டு அடை முதலுடனே சேர்த்துச் சொல்லு தலும் வழக்கியல் - வழக்கினுள் இயற்கையாம் ; ஈரடை சினையொடு செறிதலும் - இரண்டு அடையைச் சினையொடு சேர்த்துச் சொல்லுத லும் மயங்கலுஞ் செய்யுட்கே - ஆண்டை முதலுடனேயும் வேண்டி ... மயங்கச் சொல்லுதலும் செய்யுட்கண் இயல்பாம் என்றவாறு . - ம் : பெருந்தலைச் சாத்தன் செங்கானாரை நெடுமலைத் தோங்கு எனவும் இளம்பெருங் கூத்தன் சிறு கருங்காக்கை எனவும் வழக்கினுள் வந்தன . சிறுபைந் தூவியாற் செயிரறச் செய்த கருநெடுங் கண்டரு காம நோயே எனவும் பெருந் தோட் சிறுமருங்கின் பேரமர்க்கட் பேதை எனவும் செய்யுளில் வந்தன : பிறவுமன்ன . ( 52 ) 403. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் . சூ - ம் உலகத்துப் பொருள்கள் எல்லாம் இயற்கைப் பொருளும் செயற்கைப் பொருளுமென இரண்டாம் . அவற்றினுள் இயற்கைப் பொருளுக்கு ஆவதோர் இயல்பு கூறகின்றது . ( - ள் ) இயற்கைப் பொருளை - செயற்கைப் பொருள் அல்லாத இயல்பாக வாராநின்ற இயற்கைப் பொருளைச் சொல்லுமிடத்து இற்றெனக் கிளத்தல் - இத்தன்மையையுடைய என்று சொல்ல வேண் டும் என்பார்கள் என்றவாறு . - ம் : நிலம் வலிது அல்லது உரத்துத் தரிக்கும் ; நீர் தண்ணிது அல்லது குளிரும் பதஞ் செய்விக்கும் ; தீ வெய்யிது அல்லது சூடு ஒன்றுவிக்கும் ; வளி அசையும் அல்லது எவையும் திரட் டும் ; கண் காணும் காது கேட்கும் மூக்கு மணக்கும் நா சுவைக்கும் தோல் பரிசிக்கும் வாக்கு வசனிக்கும் என வரும் . பிறவுமன்ன . ( 53 )