நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 229 தும் வேறுபடுத்தும் உச்சரித்தால், தெளிவெய்து மென்ப - பொருள் இரண்டாய் வேறுபட்டு விளங்கும் என்றவாறு. உ-ம்: செம்பொன்பதினாயிரங் கழஞ்சு கண்டேன், குறும்பரம்பு என வேறுபட உச்சரித்துக் கொள்க. (40) 391. ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி ஒருவினை கொடுப்ப தனியு பொரோவழி. சூ-ம், பல பெயர் அடுக்கி வந்தால் அவை கொண்டு முடியும் தன்மை இவையென ..... (இ-ள்) ஒருபொருண் மேல் - ஒரு பொருளின்மேலே, பல பெயர்வரின் அதன் பரியாய நாமமாகிய பல பெயர் அடுக்கி வரில், இறுதி ஒரு வினை கொடுப்ப - அவற்றிற்கெல்லாம் இறுதியிலே வினை கொடுப் பர், தனியு மொரோவழி - அவ்வாறன்றிச் சிறுபான்மை பெயர்தொறும் தனித்தனியே பெயர் கொடுப்பர் பெரியோர் என்றவாறு. உ-ம்: ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கள்ளன் சாத்தன் வந்தான், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வந்தான் எனப் பெயர்கள் அனைத்தும் வர இறுதி ஒருவினை கொண்டது. ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் வந்தான், செயிற்றியன் வந்தான், இளங்கண்ணன் வந்தான் என அனைத்தினும் வினை வரப் பொருந்தாவாம். இனி, எந்தை வருக, எம்பெருமான் வருக மதலை வருக எனவும் மின்றோய் வரை கொன்ற வேலோன் புகுதுக இன்றே னகழ்கா ரியக்கன் புகுதுக வென்றோன் புகுதுக வீரன் புகுதுக என்று நகர மெதிர்கொண்டதுவே (சீவக.2122) எனவும் பெயர்தொறும் ஒருவினை வந்தது. இனி, எந்தை வருக, எம்மான் போக, மைந்தன் நிற்க என ஒரு வினையனவாகா என்க. ஒரு வினைச் சொல்லின் பரியாய நாமமுமாம். எந்தை சொல் லுக, எம்மான் விளம்புக என வரும். (41) 392. திணைநிலஞ் சாதி குடியே யுடைமை குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரொ டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே. க சூ-ம், திணைப்பெயர்கள் முதலான பல சிறப்புப் பெயர்களுள் இயற் பெயர் வருமாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 229 தும் வேறுபடுத்தும் உச்சரித்தால் தெளிவெய்து மென்ப - பொருள் இரண்டாய் வேறுபட்டு விளங்கும் என்றவாறு . - ம் : செம்பொன்பதினாயிரங் கழஞ்சு கண்டேன் குறும்பரம்பு என வேறுபட உச்சரித்துக் கொள்க . ( 40 ) 391. ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி ஒருவினை கொடுப்ப தனியு பொரோவழி . சூ - ம் பல பெயர் அடுக்கி வந்தால் அவை கொண்டு முடியும் தன்மை இவையென ..... ( - ள் ) ஒருபொருண் மேல் - ஒரு பொருளின்மேலே பல பெயர்வரின் அதன் பரியாய நாமமாகிய பல பெயர் அடுக்கி வரில் இறுதி ஒரு வினை கொடுப்ப - அவற்றிற்கெல்லாம் இறுதியிலே வினை கொடுப் பர் தனியு மொரோவழி - அவ்வாறன்றிச் சிறுபான்மை பெயர்தொறும் தனித்தனியே பெயர் கொடுப்பர் பெரியோர் என்றவாறு . - ம் : ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கள்ளன் சாத்தன் வந்தான் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வந்தான் எனப் பெயர்கள் அனைத்தும் வர இறுதி ஒருவினை கொண்டது . ஆசிரியன் வந்தான் பேரூர்கிழான் வந்தான் செயிற்றியன் வந்தான் இளங்கண்ணன் வந்தான் என அனைத்தினும் வினை வரப் பொருந்தாவாம் . இனி எந்தை வருக எம்பெருமான் வருக மதலை வருக எனவும் மின்றோய் வரை கொன்ற வேலோன் புகுதுக இன்றே னகழ்கா ரியக்கன் புகுதுக வென்றோன் புகுதுக வீரன் புகுதுக என்று நகர மெதிர்கொண்டதுவே ( சீவக .2122 ) எனவும் பெயர்தொறும் ஒருவினை வந்தது . இனி எந்தை வருக எம்மான் போக மைந்தன் நிற்க என ஒரு வினையனவாகா என்க . ஒரு வினைச் சொல்லின் பரியாய நாமமுமாம் . எந்தை சொல் லுக எம்மான் விளம்புக என வரும் . ( 41 ) 392. திணைநிலஞ் சாதி குடியே யுடைமை குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரொ டியற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே . சூ - ம் திணைப்பெயர்கள் முதலான பல சிறப்புப் பெயர்களுள் இயற் பெயர் வருமாறு .