நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

220 சொல்லதிகாரம் - பொதுவியல் மரபு வழுவாவது வரலாற்று முறைமை மயங்கிச் சொல்லுவது. அது ஆனை மேய்ப்பானை இடையன் என்றும் பசு மேய்ப்பானைப் பாகன் என்றும் எருமைமிலத்தி, குதிரைச் சாணகம் என்றும் வரும். (24) திணை பால் வழுவமைதி 375. ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும் மெய்தெரி பொருண்மே லன்மையும் விளம்புப. சூ-ம், திணை பால் ஐயுற்ற வழியும் துணிந்த வழியும் இவ்வாறு சொல்லுகவெனத் திணை பால் அமைப்புக் கூறுகின்றது. (இ-ள்) ஐயந் திணை - திணைமேல் ஐயந் தோன்றிய வழியும், பால் - பால்மேல் ஐயந் தோன்றிய வழியும், அவ்வப் பொதுவினும் - அவ் விரு திணைப் பொதுவினாலும் அவ்வப் பால்களுக்குப் பொது வினாலும் மெய்தெரி பொருண்மேல் - இன்னதென உண்மை தெரிந்த பொருளின்மேல், அன்மையும் விளம்புவ - ஒரு திணைக்குரியவாகியும் ஒரு பாற்குரியவாகியும் சிறப்புப்படக் கூறுவர் புலவர் என்றவாறு. உ-ம்: எளிதில் அறியலாகா இடமாயினும் காலமாயினும் பற்றி நான்கு முழ அளவில் ஓர் உருவு கண்டு குற்றி கொல்லோ மகன் கொல்லோ என்று ஐயுற்ற வழி அவ்விரு திணைக்கும் ஏற்ப முனந் தோன்றுகின்ற உரு என்னோ என்க. உரு என்பது பொதுச் சொல்லாயின் மகனென்றும் குற்றியென்றும் வெளியான காலை மகனன்று குற்றி என்க; குற்றி அல்லன் மகன் என்க. (25) திணை வழுவமைதி 376. உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்தினை முடிபின. சூ-ம், உயர்திணைப் பெயரைச் சேர்ந்த பொருளாதி அறு வகைப் பெயரின் முடிவு கூறுகின்றது. (இ-ள்) உயர்திணை தொடர்ந்த - உயர்திணைப் பெயரைச் சார்ந்து வரும், பொருண்முத லாறும் - பொருளாதி அறு வகைப் பெயரும், அதனொடு சார்த்தின் - அவ்வுயர்திணைப் பெயரொடு முடிப்பினும், அத்திணை- முடிபின - அத்திணை முடிபினவாம் என்றவாறு. உ-ம்: நம்பி பொன்னுடையான், நம்பி நாடுடையன், நம்பி வாழ் நாளுடையன், நம்பி கண்பெரியன், நம்பி ஆண்மை நல்லான், நம்பி செலவுநல்லான் என இவை உயர்திணையாய் முடிந்தன.
220 சொல்லதிகாரம் - பொதுவியல் மரபு வழுவாவது வரலாற்று முறைமை மயங்கிச் சொல்லுவது . அது ஆனை மேய்ப்பானை இடையன் என்றும் பசு மேய்ப்பானைப் பாகன் என்றும் எருமைமிலத்தி குதிரைச் சாணகம் என்றும் வரும் . ( 24 ) திணை பால் வழுவமைதி 375. ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும் மெய்தெரி பொருண்மே லன்மையும் விளம்புப . சூ - ம் திணை பால் ஐயுற்ற வழியும் துணிந்த வழியும் இவ்வாறு சொல்லுகவெனத் திணை பால் அமைப்புக் கூறுகின்றது . ( - ள் ) ஐயந் திணை - திணைமேல் ஐயந் தோன்றிய வழியும் பால் - பால்மேல் ஐயந் தோன்றிய வழியும் அவ்வப் பொதுவினும் - அவ் விரு திணைப் பொதுவினாலும் அவ்வப் பால்களுக்குப் பொது வினாலும் மெய்தெரி பொருண்மேல் - இன்னதென உண்மை தெரிந்த பொருளின்மேல் அன்மையும் விளம்புவ - ஒரு திணைக்குரியவாகியும் ஒரு பாற்குரியவாகியும் சிறப்புப்படக் கூறுவர் புலவர் என்றவாறு . - ம் : எளிதில் அறியலாகா இடமாயினும் காலமாயினும் பற்றி நான்கு முழ அளவில் ஓர் உருவு கண்டு குற்றி கொல்லோ மகன் கொல்லோ என்று ஐயுற்ற வழி அவ்விரு திணைக்கும் ஏற்ப முனந் தோன்றுகின்ற உரு என்னோ என்க . உரு என்பது பொதுச் சொல்லாயின் மகனென்றும் குற்றியென்றும் வெளியான காலை மகனன்று குற்றி என்க ; குற்றி அல்லன் மகன் என்க . ( 25 ) திணை வழுவமைதி 376. உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும் அதனொடு சார்த்தி னத்தினை முடிபின . சூ - ம் உயர்திணைப் பெயரைச் சேர்ந்த பொருளாதி அறு வகைப் பெயரின் முடிவு கூறுகின்றது . ( - ள் ) உயர்திணை தொடர்ந்த - உயர்திணைப் பெயரைச் சார்ந்து வரும் பொருண்முத லாறும் - பொருளாதி அறு வகைப் பெயரும் அதனொடு சார்த்தின் - அவ்வுயர்திணைப் பெயரொடு முடிப்பினும் அத்திணை- முடிபின - அத்திணை முடிபினவாம் என்றவாறு . - ம் : நம்பி பொன்னுடையான் நம்பி நாடுடையன் நம்பி வாழ் நாளுடையன் நம்பி கண்பெரியன் நம்பி ஆண்மை நல்லான் நம்பி செலவுநல்லான் என இவை உயர்திணையாய் முடிந்தன .