நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

210 சொல்லதிகாரம் - பொதுவியல் பிடை ஒழிய - அவற்றின் உருபுகளை இடையே ஒழித்து, இரண்டு முதலாத் தொடர்ந்து - இரண்டு சொல் முதலாகத் தொடர்ந்து, ஒரு மொழிபோ னடப்ப - ஒரு மொழி பெயர்ச்சொல் போலவும் ஒரு வினைச் சொல் போலவும், தொகைநிலைத் தொடர்ச்சொல் - தொகைநிலைத் தொடர்மொழிகளாம் என்றவாறு. அரும்பதவுரை: ஒரு மொழி போலாவது பல சொல்லேனும் தொடர்ந்து ஒற்றுமைப்பட்டு ஒரு பெயர்ச்சொல்லாய் எட்டு வேற்றுமைகளையும் ஏற்று நிலைமொழி வருமொழிகளாய்ப் புணர்ச்சி வகை ஏற்றலும் ஒரு வினைச் சொல்லாய்ப் பெயர் ஏற்பது முதலான வினை இலக்கணமெல்லாம் ஏற்பது எனக் கொள்க. (10) 361. வேற்றுமை வினைபண் புவமை யும்மை அன்மொழி யெனவத் தொகையா றாகும். சூ-ம், தொகைநிலைத் தொடர்மொழியது பெயரும் முறைமையும் தொகையும் கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமை - வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் மொழி யும், வினை - வினைத் தொகைநிலைத் தொடர்மொழியும், பண்பு - பண்புத்தொகைநிலைத் தொடர்மொழியும், உவமை - உவமைத் தொகை நிலைத் தொடர்மொழியும், உம்மை - உம்மைத் தொகை நிலைத் தொடர்மொழியும், அன்மொழி - அன்மொழித் தொகைநிலைத் தொடர் மொழியும், எனவத் தொகையாறாகும் - என்று சொல்லப்படும் தொகை நிலைத் தொடர்மொழிகள் ஆறாம் என்றவாறு. உ-ம்: நிலம் கடந்தான், பொற்குடம், கருப்புவேலி, வரை வீழருவி, சாத்தன்கை, குன்றக்கூகை, கொல்யானை, கருங் காக்கை, துடியிடை, இராப்பகல், பொற்றாலி எனத் தொகை நிலைத் தொடர்மொழி. (11) வேற்றுமைத் தொகை 362. இரண்டு முதலாக இடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே. சூ-ம், நிறுத்திய முறையே வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் மொழியாமாறு கூறுகின்றது. (இ-ள்) இரண்டு முதலாக - இரண்டாம் வேற்றுமை ஐயுருபு முத லாக, இடையா றுருபும் - இடையிலுள்ள கண்ணுருபு ஈறாக நின்ற ஆறுருபும், வெளிப்பட லில்லது - இரண்டு சொற்கு நடுவே தோன்
210 சொல்லதிகாரம் - பொதுவியல் பிடை ஒழிய - அவற்றின் உருபுகளை இடையே ஒழித்து இரண்டு முதலாத் தொடர்ந்து - இரண்டு சொல் முதலாகத் தொடர்ந்து ஒரு மொழிபோ னடப்ப - ஒரு மொழி பெயர்ச்சொல் போலவும் ஒரு வினைச் சொல் போலவும் தொகைநிலைத் தொடர்ச்சொல் - தொகைநிலைத் தொடர்மொழிகளாம் என்றவாறு . அரும்பதவுரை : ஒரு மொழி போலாவது பல சொல்லேனும் தொடர்ந்து ஒற்றுமைப்பட்டு ஒரு பெயர்ச்சொல்லாய் எட்டு வேற்றுமைகளையும் ஏற்று நிலைமொழி வருமொழிகளாய்ப் புணர்ச்சி வகை ஏற்றலும் ஒரு வினைச் சொல்லாய்ப் பெயர் ஏற்பது முதலான வினை இலக்கணமெல்லாம் ஏற்பது எனக் கொள்க . ( 10 ) 361. வேற்றுமை வினைபண் புவமை யும்மை அன்மொழி யெனவத் தொகையா றாகும் . சூ - ம் தொகைநிலைத் தொடர்மொழியது பெயரும் முறைமையும் தொகையும் கூறுகின்றது . ( - ள் ) வேற்றுமை - வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் மொழி யும் வினை - வினைத் தொகைநிலைத் தொடர்மொழியும் பண்பு - பண்புத்தொகைநிலைத் தொடர்மொழியும் உவமை - உவமைத் தொகை நிலைத் தொடர்மொழியும் உம்மை - உம்மைத் தொகை நிலைத் தொடர்மொழியும் அன்மொழி - அன்மொழித் தொகைநிலைத் தொடர் மொழியும் எனவத் தொகையாறாகும் - என்று சொல்லப்படும் தொகை நிலைத் தொடர்மொழிகள் ஆறாம் என்றவாறு . - ம் : நிலம் கடந்தான் பொற்குடம் கருப்புவேலி வரை வீழருவி சாத்தன்கை குன்றக்கூகை கொல்யானை கருங் காக்கை துடியிடை இராப்பகல் பொற்றாலி எனத் தொகை நிலைத் தொடர்மொழி . ( 11 ) வேற்றுமைத் தொகை 362. இரண்டு முதலாக இடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே . சூ - ம் நிறுத்திய முறையே வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் மொழியாமாறு கூறுகின்றது . ( - ள் ) இரண்டு முதலாக - இரண்டாம் வேற்றுமை ஐயுருபு முத லாக இடையா றுருபும் - இடையிலுள்ள கண்ணுருபு ஈறாக நின்ற ஆறுருபும் வெளிப்பட லில்லது - இரண்டு சொற்கு நடுவே தோன்