நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 209 இனி இசையெச்சமாவது ஒன்று சொல்ல வேறு பொருளை இசைத்தல். “பாய்பரி மாவோடும் வந்தன னடி.... செய்வதற்கென் றான்", குமரியாட வந்தேன், யானையெய்ய வந்தேன், மயிலெய்ய வந்தேன் என ஒன்று சொல்ல வேறு பொருள் கொண்டு முடிதலின் இசையெச்சமாயின. இங்ஙனம் கூடிய ஒன்பதும் சொல்லெச்சம் ஆகியவாறு காண்க. இனிக் குறிப்பெச்சம் வருமாறு சொல்லுவாம். குறிப்புப் பொருள் கொண்டு முடிவது : "பீலிபெய் சாகாடு மச்சிறு மட்டண்டஞ் சால மிகுத்துப் பெயின்” (குறள்.475), “கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து” (குறள்.476). “மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப் “மறுகி னார்க்கவும் படுப் பிறிது மாகும் காமங்காழ் கொளினே” (குறு.17) என இவை முறையே மெலியரும் பலர் தொகின் வலியராகுவர் எனவும் இவ்விடம் இவர்க்குச் செல்லும் இவ்விடம் இவர்க்குச் செல்லாது எனவும் யானும் அவ்வண்ணம் செய்வேன் எனவும் சொல் லுவான் குறித்த பொருள் கொண்டு முடிதலின் குறிப்பெச்சமாயின.... நுவலாநுவற்சி என்பர். (9) தொகைநிலைத் தொடர்மொழி 360. பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளி னவற்றி னுருபிடை ஒழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழியோ னடப்ப தொகைநிலைத் தொடர்ச்சொல். சூ-ம், மேற்றொடர்மொழி என்றார்; அது தொகைநிலைத் தொடர் மொழியென்றும் தொகாநிலைத் தொடர்மொழியன்றும் இரண்டாம். அவற்றுள் தொகைநிலைத் தொடர்மொழியாமாறு கூறுகின்றது. (இ-ள்) பெயரொடு பெயரும் - பெயருடனே பெயர் புணருமிடத்தும், வினையும் - பெயருடனே வினை புணருமிடத்தும், வேற்றுமை முதலிய பொருளின் - வேற்றுமை முதலானவற்றின், அவற்றினுரு
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 209 இனி இசையெச்சமாவது ஒன்று சொல்ல வேறு பொருளை இசைத்தல் . பாய்பரி மாவோடும் வந்தன னடி .... செய்வதற்கென் றான் குமரியாட வந்தேன் யானையெய்ய வந்தேன் மயிலெய்ய வந்தேன் என ஒன்று சொல்ல வேறு பொருள் கொண்டு முடிதலின் இசையெச்சமாயின . இங்ஙனம் கூடிய ஒன்பதும் சொல்லெச்சம் ஆகியவாறு காண்க . இனிக் குறிப்பெச்சம் வருமாறு சொல்லுவாம் . குறிப்புப் பொருள் கொண்டு முடிவது : பீலிபெய் சாகாடு மச்சிறு மட்டண்டஞ் சால மிகுத்துப் பெயின் ( குறள் .475 ) கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து ( குறள் .476 ) . மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப் மறுகி னார்க்கவும் படுப் பிறிது மாகும் காமங்காழ் கொளினே ( குறு .17 ) என இவை முறையே மெலியரும் பலர் தொகின் வலியராகுவர் எனவும் இவ்விடம் இவர்க்குச் செல்லும் இவ்விடம் இவர்க்குச் செல்லாது எனவும் யானும் அவ்வண்ணம் செய்வேன் எனவும் சொல் லுவான் குறித்த பொருள் கொண்டு முடிதலின் குறிப்பெச்சமாயின .... நுவலாநுவற்சி என்பர் . ( 9 ) தொகைநிலைத் தொடர்மொழி 360. பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளி னவற்றி னுருபிடை ஒழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழியோ னடப்ப தொகைநிலைத் தொடர்ச்சொல் . சூ - ம் மேற்றொடர்மொழி என்றார் ; அது தொகைநிலைத் தொடர் மொழியென்றும் தொகாநிலைத் தொடர்மொழியன்றும் இரண்டாம் . அவற்றுள் தொகைநிலைத் தொடர்மொழியாமாறு கூறுகின்றது . ( - ள் ) பெயரொடு பெயரும் - பெயருடனே பெயர் புணருமிடத்தும் வினையும் - பெயருடனே வினை புணருமிடத்தும் வேற்றுமை முதலிய பொருளின் - வேற்றுமை முதலானவற்றின் அவற்றினுரு