நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 189 இந்நான்கு விகுதியையும் ஈறாகவுடைய மொழிகள், இருபாலாரை யும் - முன்னிலையாரையும் படர்க்கையாரையும் தன்னோடு உளப் படுத்தும் விரவுத் திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினை முற்றாம்; தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை தன்னோடு உளப் படுத்தும் தன்மைப் பன்மையாம். இவ்வுரையென மூன்றனோடும் கூட்டுக. உ-ம்: உண்டனம், உண்ணாநின்றனம், உண்பம், உடண்பாம், உண்ணாநின்றாம், உண்பாம், உண்டனெம், உண்ணாநின்ற னெம், உள்பேம், உண்டோம், உண்ணாநின்றோம், உண்போம், உண்கும், உண்டும், வந்தும், வருதும், சென்றும், சேறும் என இவ்வொன்பது விகுதியும் சேர்ந்தது; விரவுத்திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று வந்தன. தாரின, ஈண்டையம், ஆண்டையம், பண்டையம், கரியம், செய் கையம் என வினைக்குறிப்பு முற்று வந்தன. யாம் என்னும் பெயர் வருவித்துக் கொள்க. (13) 332. செய்கெ னொருமையுஞ் செய்குமென் பன்மையும் விளையொடு முடியினும் விளம்பிய முற்றே. சூ-ம், எய்தியது இகந்துபடாமற் காத்தல் கூறியது. (இ-ள்) செய்கென் ஒருமையும் - செய்கு என்னும் விரவுத் திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும், செய்குமென் பன்மை யும் - செய்கும் என்னும் விரவுத் திணை தன்மைப் பன்மைத் தெரி நிலை வினைமுற்றும், வினையொடு முடியினும் - வினைகொண்டு முடியும்; முடிந்தாலும் வினையெச்சமெனப்படா; விளம்பிய முற்றே - முன் கூறிய தன்மை முற்றேயாம் என்றவாறு. உ-ம்: உண்கு வந்தேன், உண்கு வந்தேம் என வரும். "வினையொடு முடியினும்” என்ற உம்மையால் முன் விதித்த பெயர் கொள்ளுதல் வலியுடைத்தென்க. முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினு முற்றுச் சொலென்னு முறைமையிற் றிரியா என்பது அகத்தியம். (14) உனப்பாட்டுப் பன்மை முன்னிலை வினைமுற்று 333. முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 189 இந்நான்கு விகுதியையும் ஈறாகவுடைய மொழிகள் இருபாலாரை யும் - முன்னிலையாரையும் படர்க்கையாரையும் தன்னோடு உளப் படுத்தும் விரவுத் திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினை முற்றாம் ; தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை தன்னோடு உளப் படுத்தும் தன்மைப் பன்மையாம் . இவ்வுரையென மூன்றனோடும் கூட்டுக . - ம் : உண்டனம் உண்ணாநின்றனம் உண்பம் உடண்பாம் உண்ணாநின்றாம் உண்பாம் உண்டனெம் உண்ணாநின்ற னெம் உள்பேம் உண்டோம் உண்ணாநின்றோம் உண்போம் உண்கும் உண்டும் வந்தும் வருதும் சென்றும் சேறும் என இவ்வொன்பது விகுதியும் சேர்ந்தது ; விரவுத்திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று வந்தன . தாரின ஈண்டையம் ஆண்டையம் பண்டையம் கரியம் செய் கையம் என வினைக்குறிப்பு முற்று வந்தன . யாம் என்னும் பெயர் வருவித்துக் கொள்க . ( 13 ) 332. செய்கெ னொருமையுஞ் செய்குமென் பன்மையும் விளையொடு முடியினும் விளம்பிய முற்றே . சூ - ம் எய்தியது இகந்துபடாமற் காத்தல் கூறியது . ( - ள் ) செய்கென் ஒருமையும் - செய்கு என்னும் விரவுத் திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும் செய்குமென் பன்மை யும் - செய்கும் என்னும் விரவுத் திணை தன்மைப் பன்மைத் தெரி நிலை வினைமுற்றும் வினையொடு முடியினும் - வினைகொண்டு முடியும் ; முடிந்தாலும் வினையெச்சமெனப்படா ; விளம்பிய முற்றே - முன் கூறிய தன்மை முற்றேயாம் என்றவாறு . - ம் : உண்கு வந்தேன் உண்கு வந்தேம் என வரும் . வினையொடு முடியினும் என்ற உம்மையால் முன் விதித்த பெயர் கொள்ளுதல் வலியுடைத்தென்க . முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினு முற்றுச் சொலென்னு முறைமையிற் றிரியா என்பது அகத்தியம் . ( 14 ) உனப்பாட்டுப் பன்மை முன்னிலை வினைமுற்று 333. முன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை