நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 183 குறிப்பு வினை 320. பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே. சூ-ம், குறிப்பு வினைச் சொல்லாவது இன்னதென அதன் இலக் கணம் கூறுகின்றது. . (இ-ள்) பொருண்முதல் ஆறினும் தோற்றி - பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறும், முன்னாறனுள் - மேற்செய் பவன் முதலாகச் சொன்ன ஆறனுள், வினைமுதன் மாத்திரை விளக்கல் - கருத்தா ஒருத்தனையே காட்டி நிற்றல், வினைக்குறிப்பே - வினைக் குறிப்பிற்கு இயல்பாவது என்றவாறு. உ-ம்: குழையினன், அகத்தினன், நாளினன், கண்ணினன், கரியன், சொல்லினன் என முறையே காண்க. வினையைக் குறிப்பாக உடைமையின் வினைக்குறிப்பு என்றா யிற்று. “பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலே குறிப்பு வினையின் நெறிப்படு முதனிலை.'' (2) வினைச்சொற்களின் வகை 321. அவைதாம், முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும். சூ-ம், மேற்சொன்ன தெரிநிலை வினை, குறிப்பு வினைக்கு எய்திய தோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) அவைதாம் மேல் தெரிநிலை வினைச்சொல் குறிப்பு வினைச்சொல் என்று சொல்லப்பட்ட இரண்டும், முற்றும் - தெரிநிலை முற்றென்றும் குறிப்புவினை முற்றென்றும், பெயர்வினை எச்சமுமாகி - தெரிநிலைவினைப் பெயரெச்சமென்றும் குறிப்புவினைப் பெயரெச்ச மென்றும் தெரிநிலை வினையெச்சமென்றும் குறிப்பு வினையெச்ச மென்றும் ஆகி, ஒன்றற்குரியவும் - ஒரு திணை ஓர் பால் ஓர் இடத் திற்கு உரியவும், பொதுவுமாகும் - இரு திணைக்கும் பல பாற்கும் பல இடத்திற்கே உரியவுமாம் என்றவாறு. (3)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 183 குறிப்பு வினை 320. பொருண்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே . சூ - ம் குறிப்பு வினைச் சொல்லாவது இன்னதென அதன் இலக் கணம் கூறுகின்றது . . ( - ள் ) பொருண்முதல் ஆறினும் தோற்றி - பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் எனும் ஆறும் முன்னாறனுள் - மேற்செய் பவன் முதலாகச் சொன்ன ஆறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல் - கருத்தா ஒருத்தனையே காட்டி நிற்றல் வினைக்குறிப்பே - வினைக் குறிப்பிற்கு இயல்பாவது என்றவாறு . - ம் : குழையினன் அகத்தினன் நாளினன் கண்ணினன் கரியன் சொல்லினன் என முறையே காண்க . வினையைக் குறிப்பாக உடைமையின் வினைக்குறிப்பு என்றா யிற்று . பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலே குறிப்பு வினையின் நெறிப்படு முதனிலை . ' ' ( 2 ) வினைச்சொற்களின் வகை 321. அவைதாம் முற்றும் பெயர்வினை யெச்சமு மாகி ஒன்றற் குரியவும் பொதுவு மாகும் . சூ - ம் மேற்சொன்ன தெரிநிலை வினை குறிப்பு வினைக்கு எய்திய தோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) அவைதாம் மேல் தெரிநிலை வினைச்சொல் குறிப்பு வினைச்சொல் என்று சொல்லப்பட்ட இரண்டும் முற்றும் - தெரிநிலை முற்றென்றும் குறிப்புவினை முற்றென்றும் பெயர்வினை எச்சமுமாகி - தெரிநிலைவினைப் பெயரெச்சமென்றும் குறிப்புவினைப் பெயரெச்ச மென்றும் தெரிநிலை வினையெச்சமென்றும் குறிப்பு வினையெச்ச மென்றும் ஆகி ஒன்றற்குரியவும் - ஒரு திணை ஓர் பால் ஓர் இடத் திற்கு உரியவும் பொதுவுமாகும் - இரு திணைக்கும் பல பாற்கும் பல இடத்திற்கே உரியவுமாம் என்றவாறு . ( 3 )