நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 181 உயர்திளைக்கண் திரிந்தன. “புள்ளினான்' என்பது “புள்ளி னான” என அஃறிணைக்கண் ஆன் ஒன்றும் திரிந்தது. (61) முடிக்குஞ் சொல் 318. எல்லை யின்னும் மதுவும் பெயர்கொளும் அல்ல வினைகொளு நான்கே ழிருமையும் புல்லும் பெரும்பாலு மென்மனார் புலவர். சூ-ம், வேற்றுமைகட்கு ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) எல்லை இன்னும் அதுவும் - எல்லைப் பொருண்மைக்கண் வரும் ஐந்தாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும், பெயர் கொளும் பெயரைக் கொண்டு முடியும்; அல்ல வினை கொளும் - ஒழிந்த வேற் றுமைக்கண் வினையைக் கொண்டு முடியும்; நான்கேழிருமையும் புல்லும் - நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் பெயர் வினை என்னும் இரண்டையும் கொண்டு முடியும், பெரும்பாலும் என்மனார் புலவர் - பெரும்பாலும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உ-ம்: கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு எனவும் சாத்தனது குணம், சாத்தனது கை, நெல்லது குப்பை, படையது குழாம், எள்ளது சாந்து, சாத்தனது ஆடை எனவும் பெயர் கொண்டன. அறத்தைச் செய்தான், சுடரினாற் கண்டாள், வாளான் மறிந்தான், சேனையொடு சென்றான், சாத்தனொடு வந்தான், மலையின் இழிந்தான், வாளின் வணக்கினான், இறைவ கூறாய், மன்ன வாராய், ஏனை வினை கொண்டன. கரும்பிற்கு வேலி , இரவ லர்க்கு ஈந்தான் எனவும் பனையின்கண் அன்றில், திளைரின்கட் பிள்ளை, பனையின்கட் சென்றான் எனவும் பெயரும் வினையும் கொண்டன. "பெரும்பாலும்" என்றதனாற் சிறுபான்மை சாத்தனது வந்தது, அறத்தை அடைந்தவன், சுடரினாற் கண்டவன். இவ்வாறு வருவன வும் கொள்க. தச்சனாற் செய்த மாடம், வாளாற் கொண்ட கொடி என்பனவும் பெயர் கொண்டனவன்றோவெனின் செய்த, கொண்ட என்னும் பெய ரெச்ச வினை கொண்டன் என்க. (62) திருச்சிற்றம்பலம் முதலாவது பெயரியல் முடிந்தது
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 181 உயர்திளைக்கண் திரிந்தன . புள்ளினான் ' என்பது புள்ளி னான என அஃறிணைக்கண் ஆன் ஒன்றும் திரிந்தது . ( 61 ) முடிக்குஞ் சொல் 318. எல்லை யின்னும் மதுவும் பெயர்கொளும் அல்ல வினைகொளு நான்கே ழிருமையும் புல்லும் பெரும்பாலு மென்மனார் புலவர் . சூ - ம் வேற்றுமைகட்கு ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) எல்லை இன்னும் அதுவும் - எல்லைப் பொருண்மைக்கண் வரும் ஐந்தாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் பெயர் கொளும் பெயரைக் கொண்டு முடியும் ; அல்ல வினை கொளும் - ஒழிந்த வேற் றுமைக்கண் வினையைக் கொண்டு முடியும் ; நான்கேழிருமையும் புல்லும் - நான்காம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் பெயர் வினை என்னும் இரண்டையும் கொண்டு முடியும் பெரும்பாலும் என்மனார் புலவர் - பெரும்பாலும் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு . - ம் : கருவூரின் கிழக்கு மருவூரின் மேற்கு எனவும் சாத்தனது குணம் சாத்தனது கை நெல்லது குப்பை படையது குழாம் எள்ளது சாந்து சாத்தனது ஆடை எனவும் பெயர் கொண்டன . அறத்தைச் செய்தான் சுடரினாற் கண்டாள் வாளான் மறிந்தான் சேனையொடு சென்றான் சாத்தனொடு வந்தான் மலையின் இழிந்தான் வாளின் வணக்கினான் இறைவ கூறாய் மன்ன வாராய் ஏனை வினை கொண்டன . கரும்பிற்கு வேலி இரவ லர்க்கு ஈந்தான் எனவும் பனையின்கண் அன்றில் திளைரின்கட் பிள்ளை பனையின்கட் சென்றான் எனவும் பெயரும் வினையும் கொண்டன . பெரும்பாலும் என்றதனாற் சிறுபான்மை சாத்தனது வந்தது அறத்தை அடைந்தவன் சுடரினாற் கண்டவன் . இவ்வாறு வருவன வும் கொள்க . தச்சனாற் செய்த மாடம் வாளாற் கொண்ட கொடி என்பனவும் பெயர் கொண்டனவன்றோவெனின் செய்த கொண்ட என்னும் பெய ரெச்ச வினை கொண்டன் என்க . ( 62 ) திருச்சிற்றம்பலம் முதலாவது பெயரியல் முடிந்தது