நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

172 சொல்லதிகாரம் - பெயரியல் பண்பு இடனாயிற்று. ஆடற்கண் அழகு, பாடற்கண் பணிபு எனப் பண்புத் தற்கிழமைக்குத் தொழில் இடமாயிற்று. ஆடற் கண் பாட்டு, பாடற்கண் யாழ் எனப் பிறிதின் கிழமைக்குத் தொழில் இடமாயிற்று. இதனிற் “பொருண் முத லாறும்” என்றாராயினும் வினை வேற் றுமையுருபு ஏலாததனால் ஈண்டுத் தொழிற்பெயரே கொள்க. (44) ஏழாம் வேற்றுமை உருபுகள் 301. கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின் முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல் பின்பா டளைதே முழைவழி யுழியுளி உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருபே. சூ-ம், ஏழாம் வேற்றுமைக்குக் கண் முதலானவை உருபு என்றார்; அவை இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) கண் - “நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே, கல்லார்கட் பட்ட திரு” (குறள்.408), கால் - "ஊர்க்கானிவந்த பொதும் பரின்" (கலி.56), கடை - “ஈதலியை யாக்கடை” (குறள்.230), இடை - “நல்லாரி டைப்புக்கு” (நாலடி.314), தலை - “நனந்தலை வந்த நல்லோர்”, வாய் - “புன்னைநன்னீழற் புலவுத்திரைவாய்”, திசை - "ஊர்த்திசை யோசை”, வயின் - “அவர்வயினிடைச் செல்வாய்”, முன் - “கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம்” (நான்மணி. 8), சார் - “காட் டுச்சா ரோடுங் குறு முயால்", வலம் - “ஊர்வலம் வந்தான்", இடம் “இல்லிடப்பரத்தை”, மேல் - “தன்மேற் கடுவரை” (பு.வெ.11), கீழ் - “பிண்டி நிழற் கீழ்”, புடை - “கடைபுடைக் கொள்ளியநீர்”, முதல் - "கான்முதல் வந்த வுரன்மாலை” (நற்.3), பின் - “காதலி பின்சென்ற தம்ம” (நாலடி.395), பாடு - “நம்பா டணையாத நாள்”, அளை - “கல்லளைச் சுனைநீர்”, தேம் - “தோழிக்குரியவை கோடாய் தேஎத்து” (இறை.14), உழை - அவனுழை வந்த சாத்தன், வழி - “நின்றதோர் நறவேங்கை நிழல்வழி யசைந்தனனே”, உழி - “உறைப்புழி யோலை போல” (புறம்.290), உளி - “காவுளிச் சேர்ந்துறையுங் கிளிகாள்”, உள் - “மூலையங் குவட்டுள் வாழும்” (சீவக.1232), அகம் - “பயன் சாராப், பண்பில்சொற் பல்லாரகத்து” (குறள்.194), புறம் - “செல்லு மென்னுயிர்ப்புறத் திறுத்தற்றே” (கலி.148), இல் - ”ஊரிலிருந் தார்”, இடப் பொருள் உருபே - இவ்விருபத்தெட்டும் இடப் பொரு ளைக் காட்டும் உருபாம். (45)
172 சொல்லதிகாரம் - பெயரியல் பண்பு இடனாயிற்று . ஆடற்கண் அழகு பாடற்கண் பணிபு எனப் பண்புத் தற்கிழமைக்குத் தொழில் இடமாயிற்று . ஆடற் கண் பாட்டு பாடற்கண் யாழ் எனப் பிறிதின் கிழமைக்குத் தொழில் இடமாயிற்று . இதனிற் பொருண் முத லாறும் என்றாராயினும் வினை வேற் றுமையுருபு ஏலாததனால் ஈண்டுத் தொழிற்பெயரே கொள்க . ( 44 ) ஏழாம் வேற்றுமை உருபுகள் 301. கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின் முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல் பின்பா டளைதே முழைவழி யுழியுளி உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருபே . சூ - ம் ஏழாம் வேற்றுமைக்குக் கண் முதலானவை உருபு என்றார் ; அவை இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) கண் - நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு ( குறள் .408 ) கால் - ஊர்க்கானிவந்த பொதும் பரின் ( கலி .56 ) கடை - ஈதலியை யாக்கடை ( குறள் .230 ) இடை - நல்லாரி டைப்புக்கு ( நாலடி .314 ) தலை - நனந்தலை வந்த நல்லோர் வாய் - புன்னைநன்னீழற் புலவுத்திரைவாய் திசை - ஊர்த்திசை யோசை வயின் - அவர்வயினிடைச் செல்வாய் முன் - கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம் ( நான்மணி . 8 ) சார் - காட் டுச்சா ரோடுங் குறு முயால் வலம் - ஊர்வலம் வந்தான் இடம் இல்லிடப்பரத்தை மேல் - தன்மேற் கடுவரை ( பு.வெ .11 ) கீழ் - பிண்டி நிழற் கீழ் புடை - கடைபுடைக் கொள்ளியநீர் முதல் - கான்முதல் வந்த வுரன்மாலை ( நற் .3 ) பின் - காதலி பின்சென்ற தம்ம ( நாலடி .395 ) பாடு - நம்பா டணையாத நாள் அளை - கல்லளைச் சுனைநீர் தேம் - தோழிக்குரியவை கோடாய் தேஎத்து ( இறை .14 ) உழை - அவனுழை வந்த சாத்தன் வழி - நின்றதோர் நறவேங்கை நிழல்வழி யசைந்தனனே உழி - உறைப்புழி யோலை போல ( புறம் .290 ) உளி - காவுளிச் சேர்ந்துறையுங் கிளிகாள் உள் - மூலையங் குவட்டுள் வாழும் ( சீவக .1232 ) அகம் - பயன் சாராப் பண்பில்சொற் பல்லாரகத்து ( குறள் .194 ) புறம் - செல்லு மென்னுயிர்ப்புறத் திறுத்தற்றே ( கலி .148 ) இல் - ஊரிலிருந் தார் இடப் பொருள் உருபே - இவ்விருபத்தெட்டும் இடப் பொரு ளைக் காட்டும் உருபாம் . ( 45 )