நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

168 சொல்லதிகாரம் - பெயரியல் கருத்தாவெனவும் அடக்கி உடனிகழ்வுமென மூன்றாக ஓதினார் என்க. அவ்விரு வகைக் கருவியும் முதற் காரணமும் துளைக் காரணமும் என இரண்டாம். அவற்றுள் முதற் காரணமாவது அவ்விரு வழியும் தன்னை இன்றியமையாச் சிறப்புடையது. துணைக் காரணமாவது அவ்விரு வழியும் முதற் காரணத்துக் குத் துணையாய் வருவது. வ்-று: கடல் கண்டான் என்றால் காட்சிக்கு உணர்வு ஞாபக முதற் காரணம்; கண்ணும் ஒளியும் முதலானவை ஞாபகத் துணைக் காரணம்; அவை ஞாபகக் கருவி. குழை செய்தான் என்றால் அதற்குப் பொன் காரக முதற் காரணம்; கம்மக் கருவி யும் தீ முதலானவையும் காரகத் துணைக் காரணம்; இவை காரக முதற் கருவி. உணர்வினால் உணர்ந்தான், சுடரினாற் கண்டான், புகையால் எரியுள்ளது, அலகினால் எண்ணினாள், நாழியால் அளந்தான் என இவை ஞாபக முதற் கருவியும் ஞாபகத் துணைக் கருவியும். பொன்னாலாய மணி, மண்ணாலாய குடம் என இவை காரகத் துணைக் கருவி. தச்சனால் இயற்றப்பட்ட வையம், கடவுளால் ஆக்கப்பட்ட விமானம், புலியால் விழுங்கப்பட்டான், சுறவால் ஏறுண்டான் என இவை இயற்றுதற் கருத்தா. அரசனால் இயற்றப்பட்ட தேவகுலம், தேவராலாய திரு. இவை ஏவுதற் கருத்தா: "தூங்குகையா கயாலோங்குநடைய, உறழ்மணியா லுயர்மருப்பின" (புறம்.22), “பண்டறியேன் கூற்றென் பதனை மினியறிந்தேன் பெண் டகையாற் பேரமர்க் கட்டு” (குறள்.1083) என இவை உடனிகழ்ச்சி. அரசனால் இயற்றப்பட்ட தேவகுலம் என்பவற்றுள் உருபல்லாத பிற மொழிகள் வருவது என்னையோவெனின் கனலொடு புகையும் குடையொடு நிழலும் போல் உருபு வர வந்து நீங்கவும் பெறும். ஆறன் உருபெறும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. “உலகத்தோ டொட்ட ஒழுகல்” (குறள்.140), “மனத்தோடு வாய்மை மொழியில்” (குறள்.295) என ஓடுவும் ஒடுவும் வந்தவாறு கண்டுகொள்க. (40) .. நான்காம் வேற்றுமை 297. நான்கா வதற்குரு பாகுங் குவ்வே கொடைபகை நேர்ச்சி தகவது வாதல் பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே. சூ-ம், முறையானே நான்காம் வேற்றுமைக்கு இலக்கணம் கூறு கின்றது.
168 சொல்லதிகாரம் - பெயரியல் கருத்தாவெனவும் அடக்கி உடனிகழ்வுமென மூன்றாக ஓதினார் என்க . அவ்விரு வகைக் கருவியும் முதற் காரணமும் துளைக் காரணமும் என இரண்டாம் . அவற்றுள் முதற் காரணமாவது அவ்விரு வழியும் தன்னை இன்றியமையாச் சிறப்புடையது . துணைக் காரணமாவது அவ்விரு வழியும் முதற் காரணத்துக் குத் துணையாய் வருவது . வ் - று : கடல் கண்டான் என்றால் காட்சிக்கு உணர்வு ஞாபக முதற் காரணம் ; கண்ணும் ஒளியும் முதலானவை ஞாபகத் துணைக் காரணம் ; அவை ஞாபகக் கருவி . குழை செய்தான் என்றால் அதற்குப் பொன் காரக முதற் காரணம் ; கம்மக் கருவி யும் தீ முதலானவையும் காரகத் துணைக் காரணம் ; இவை காரக முதற் கருவி . உணர்வினால் உணர்ந்தான் சுடரினாற் கண்டான் புகையால் எரியுள்ளது அலகினால் எண்ணினாள் நாழியால் அளந்தான் என இவை ஞாபக முதற் கருவியும் ஞாபகத் துணைக் கருவியும் . பொன்னாலாய மணி மண்ணாலாய குடம் என இவை காரகத் துணைக் கருவி . தச்சனால் இயற்றப்பட்ட வையம் கடவுளால் ஆக்கப்பட்ட விமானம் புலியால் விழுங்கப்பட்டான் சுறவால் ஏறுண்டான் என இவை இயற்றுதற் கருத்தா . அரசனால் இயற்றப்பட்ட தேவகுலம் தேவராலாய திரு . இவை ஏவுதற் கருத்தா : தூங்குகையா கயாலோங்குநடைய உறழ்மணியா லுயர்மருப்பின ( புறம் .22 ) பண்டறியேன் கூற்றென் பதனை மினியறிந்தேன் பெண் டகையாற் பேரமர்க் கட்டு ( குறள் .1083 ) என இவை உடனிகழ்ச்சி . அரசனால் இயற்றப்பட்ட தேவகுலம் என்பவற்றுள் உருபல்லாத பிற மொழிகள் வருவது என்னையோவெனின் கனலொடு புகையும் குடையொடு நிழலும் போல் உருபு வர வந்து நீங்கவும் பெறும் . ஆறன் உருபெறும் இவ்வாறே ஒட்டிக்கொள்க . உலகத்தோ டொட்ட ஒழுகல் ( குறள் .140 ) மனத்தோடு வாய்மை மொழியில் ( குறள் .295 ) என ஓடுவும் ஒடுவும் வந்தவாறு கண்டுகொள்க . ( 40 ) .. நான்காம் வேற்றுமை 297. நான்கா வதற்குரு பாகுங் குவ்வே கொடைபகை நேர்ச்சி தகவது வாதல் பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே . சூ - ம் முறையானே நான்காம் வேற்றுமைக்கு இலக்கணம் கூறு கின்றது .